உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி

சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 217 பேர் கடும் அவதி அடைந்தனர்.சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் 217 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு திடீரென தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் விமானம் புறப்படாமல் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் தொழில் நுட்பக் கோளாறு விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி பழுதை நிபுணர்கள் சரி செய்தனர்.பழுதுபார்க்கும் பணியின் போது 217 பயணிகளும் விமானத்திற்குள் அமர்ந்திருந்தனர். இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர். பின்னர் விமானம் வழக்கமான நேரத்தை விட தாமதமாக காலை 11.30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. அண்மை காலங்களாக விமானத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Varadarajan Nagarajan
ஜூலை 12, 2025 20:23

சமீபகாலமாக பல விமான நிறுவனங்களில் பல நாடுகளில் தொழில்நுட்ப பிரச்சனை கண்டுபிடிக்கப்படுகிறது. எனவே அனாவசியமாக நமது ஏர் இந்தியா நிறுவனத்தை குறைசொல்லி அவப்பெயர் ஏற்படுத்துவதை சமூக ஆர்வலர்கள் நிறுத்தவேண்டும்.


Ramesh Sargam
ஜூலை 12, 2025 20:11

போனமாதம் அந்த ஏர் இந்தியா விபத்துக்கு பிறகு பல விபத்துக்கள், பல கோளாறுகள் இந்திய வான்வெளியில். காரணம் என்னவாக இருக்கும்? சீனா எப்படி 2019 -ஆம் ஆண்டு வாக்கில் தங்களுடைய ஆராய்ச்சிக்கூடத்தில் கோவிட் எனும் உயிர்க்கொல்லியை உருவாக்கி அதை உலகம் முழுவதும் பரப்பி பல உயிர்களை கொன்றதோ அதுபோல வான்வெளியில் ஏதாவது ரசாயனத்தை கலந்து குறிப்பாக விமானங்களை பாதிக்கும் செயல்களை செய்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.


Nada Rajan
ஜூலை 12, 2025 19:35

விமானம் விபத்து அடிக்கடி நடக்கிறது... விமான நிறுவனம் அஜாக்கிரதையாக இருக்கிறது.


SVR
ஜூலை 12, 2025 19:17

விமானங்களில் சமீப காலமாக தொழில் நுட்ப கோளாறுகள் அதிகரித்ததால் மக்கள் விமான பிரயாணத்தை தவிர்த்து கப்பலில் கடலில் பிரயாணம் செய்யலாமே அது பத்திரமாய் இருக்கும் என்று நம்பலாம். என்ன, கால தாமதம் ஆகும். உயிரை இழப்பதைவிட கால தாமதம் பரவாயில்லையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை