உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை சென்ட்ரலில் அமைகிறது புதிய லேண்ட்மார்க்; 27 மாடி பிரம்மாண்ட கட்டடத்தின் சிறப்பம்சங்கள் இதோ!

சென்னை சென்ட்ரலில் அமைகிறது புதிய லேண்ட்மார்க்; 27 மாடி பிரம்மாண்ட கட்டடத்தின் சிறப்பம்சங்கள் இதோ!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே, 27 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடம் கட்ட 349.99 கோடி ரூபாய்க்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.சென்னை என்றாலே மக்கள் மனதில் தோன்றுவது, சென்ட்ரல் ரயில் நிலையம் தான். இந்த ரயில் நிலையத்திற்கு எதிரே, 27 மாடிகளைக் கொண்ட பிரமாண்டமாக வளாகம் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த வளாகம் சென்னை மாநகரின் புதிய லேண்ட்மார்க் ஆக அமையும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், டிட்கோ இணைந்து செயல்படுத்தியுள்ள மெட்ரோ ரயில் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில் இதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், RGGGH மற்றும் பார்க் ரயில் நிலையம் போன்றவற்றை இணைக்க ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்படும்.* 3.5 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் உருவாக்கப்படும். மொத்தம் 27 மாடி கட்டடங்கள் கட்டப்படும்.* முதல் இரண்டு தளங்களில் 40 விருந்தினர் தங்கும் வகையில், ஒரு ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. 150 விருந்தினர்களுக்கான பார் மற்றும் உணவகம் அமைக்கப்படும்.* 250 கார்கள், 170 பைக்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி உருவாக்கப்படும்.மாடிகள்- ப்ளான்கள்1 டூ 4 தளம்- சில்லறை கடைகள், உணவு கடைகள் மற்றும் மல்டிபிளக்ஸ்,5 டூ 24 தளம் -அலுவலகங்கள்25- சேவை தளம்26, 27 தளம்- விருந்தினர் அறைகள், பார் கொண்ட உணவகம், மண்டபம் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நமது நகரத்தை உலகளவில் இணைக்கப்பட்ட நகர்ப்புற மையமாக மாற்றுவதற்கு இது மிகவும் தேவையான திட்டம் ஆகும். டோக்கியோ, நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற நகரங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் அடுக்குமாடி வணிக கட்டடங்கள் கட்டப்படும். இது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

V GOPALAN
ஜன 24, 2025 16:57

பெரியார் மால் என்று பெயர் வைப்பார். உள்ளே எல்லாம் நடக்கும்


Kumar Kumzi
ஜன 24, 2025 13:35

இந்த பில்டிங் பேரு அநேகமா கட்டுமரம் பிரைவேட் கம்பெனின்னு இருக்கும்


Kasimani Baskaran
ஜன 24, 2025 12:44

40% கமிஷன் இல்லாமல் கட்டினால் நல்லது.


Chan
ஜன 24, 2025 12:40

28வது மாடியில், பேணா சிலையை வைக்கவேண்டும்


Anantharaman Srinivasan
ஜன 24, 2025 11:43

ஒமந்தூரார் தலைமை செயலகம் கட்டியது போல், இதை ஆய்வு செய்து கட்டுவதற்கு இன்ஜீனியர் கருணாநிதி உயிருடன் இல்லை என்பது வருத்தமாக இருக்கு.


Ramaswamy Jayaraman
ஜன 24, 2025 12:27

இன்ஜினீயர் ஜூனியர் நிறைய பேர் இருக்காங்க. எப்பிடி என்ன பண்ணலாமென்று திட்டம் உருவாகி இருக்கும்.


Ramesh Sargam
ஜன 24, 2025 11:39

இப்பவே சொல்லிப்புட்டேன், அந்த கட்டிடத்திற்கு கருணாநிதி நிலையம் என்று பெயர் வைக்கவேண்டும், என்று திமுகவினர் குரல்கொடுப்பார்கள்.


ஆரூர் ரங்
ஜன 24, 2025 11:19

இது தனியார் பங்களிப்புடன் அவர்களது நிர்வாகத்தில் BOOT முறையில் செயல்படுத்தப்படும். அரசின் முதலீடு இருக்காது என நினைக்கிறேன்.


தியாகு
ஜன 24, 2025 11:16

இந்த கட்டிடத்தையாவது ஒழுங்கா ஊழல் இல்லாமல் கட்டுங்கப்பா. நம்ம திருட்டு திமுகவின் கட்டுமரம் பெரிய தண்ணீர் சுடவைக்கும் அண்டாவை கட்டிக்கொடுத்து அதக்கு சட்டசபை என்று பெயரிட்டு அதில் ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் சுமார் இரண்டாயிரம் கோடிகளை தனது குடும்பத்திற்கு ஆட்டையை போட்டு எடுத்து சென்றதை மாதிரி ஏதாவது செய்துவிடாதீர்கள்.


sankaranarayanan
ஜன 24, 2025 11:11

அருகிலேயே சென்னை மாநகரத்தின் பெயர்போன மிக மிக தூய்மையான கூவம் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது நறுமணம் வீசத்தொடங்கும் 27-மாடிக்கப்பாலும் அற்றது வீசும் ஜாக்கிரதை


கிஜன்
ஜன 24, 2025 10:42

திராவிட கட்டிடக்கலையை பறைசாற்றும்வகையில் இருக்கவேண்டும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை