மேலும் செய்திகள்
இன்று மாலை ரஜினி 50 பாட்டு கச்சேரி
2 hour(s) ago
பிளாஸ்டிக் கழிவால் கடற்கரை சுற்றுச்சூழல் பாதிப்பு
3 hour(s) ago
மும்பை: மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சை செலவினை மாகாராஷ்டிரா அரசு மேற்கொள்ளும் என அம்மாநில முதல்வர் பிருதிவ்ராஜ் சவான் தெரிவித்தார். மும்பையில், மக்கள் நடமாட்டம் மிகுந்த ஜாவேரி, தாதர், சார்னி ஆகிய மூன்று இடங்களில், நேற்று மாலை அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில், 21 பேர் பலியாயினர்,, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் மும்பையின் முக்கிய நகரமான ஜாவேரி பஜார் பகுதியை பார்வையிட்ட முதல்வர் சவான் ,படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் அங்குள்ள பல்வேறு பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு அரசு செலவில் போதிய மருத்துவசிகி்ச்சை அளிக்கப்படும் என்றும் இதற்காக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கான செலவினை மருத்துவமனைகளுக்கு அரசு செலுத்தும் .இவ்வாறு அவர் கூறினார். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் மும்பை போலீசின் சிறப்பு ப்படை ஒன்று குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர் என மேலும் கூறினார்.
2 hour(s) ago
3 hour(s) ago