உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நுாறு நாள் வாக்குறுதியை 4 ஆண்டாகியும் நிறைவேற்றாத முதல்வர்; பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

நுாறு நாள் வாக்குறுதியை 4 ஆண்டாகியும் நிறைவேற்றாத முதல்வர்; பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

மதுரை: 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், 'நுாறு நாட்களில் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக' உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை,' என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.மதுரையில் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்று அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் எங்களுக்காக குரல் கொடுத்து பேசினார். அதை நம்பி அவருக்கு வாக்களித்தோம். ஆட்சிக்கு வந்தபின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடத்தினார்.அதில் அளிக்கப்படும் மனுக்கள் மீது '100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார். அந்த முகாமிலும் நாங்கள் மனு அளித்தோம். அப்போது மயிலாடுதுறையில் நடந்த முகாமில், ஸ்டாலின் என்ற ஆசிரியரிடம் முதல்வர் பேசுகையில், 'அந்த ஸ்டாலின் கோரிக்கையை இந்த ஸ்டாலின் நிறைவேற்றித்தருவான்' என்றார். ஆனால் 4 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேறவில்லை.தற்போது ரூ.12,500 என்ற குறைவான அளவில் ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டும் சம்பளம் வழங்கப்படுகிறது. 14 ஆண்டு களாக பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகிறோம். கடைசி பட்ஜெட்டிலும் அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றமடைந்தோம்.தி.மு.க., ஆட்சிக்கு வந்து 2024 வரை தாக்கலான பட்ஜெட்டுகளில் கல்வித்துறைக்கு ரூ.1,53,827 கோடியும், 2025 பட்ஜெட்டில் ரூ.46,767 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு எவ்வித பயனுமில்லை. தற்போது 12 ஆயிரம் பேர் தான் உள்ளோம். காலமுறை சம்பளம் வழங்க ரூ.300 கோடி தேவை. 110 விதியின் கீழாவது எங்கள் கோரிக்கையான பணிநிரந்தரம், அடிப்படை சம்பளம் ரூ.20,600 நிர்ணயம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

பல்லவி
மார் 22, 2025 17:10

பொறுமை கடலினும் பெரியது என எண்ணி அதனை கடைப்பிடிப்போம்


Padmasridharan
மார் 21, 2025 12:34

படிச்சிருக்கீங்க இல்ல.. பரீட்சைக்கு முன்னாடிதானே பசங்கள ready பண்றீங்க. அதுபோலதான் election க்கு முன்னாடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். காத்திருங்கள் விரல தூக்கி வைத்துக்கொண்டு ஒட்டு போட மதிப்புற்குரிய ஆசிரியர்களே


T.S.SUDARSAN
மார் 21, 2025 11:42

திராவிட மாடல் அரசுக்கு வோட்டு போட்டு செய்ய வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்


angbu ganesh
மார் 21, 2025 11:16

5 சவரன் வரைக்கும் நகைகடன் தள்ளுபடி, அனைத்து மகளிருக்கும் 1000 ரூவா அள்ளி விட்டுட்டு இலங்கைல 3000 கோடி முதலீடு எதுக்குண்ணேய் தெரியல கடலுல போட்ட பெருங்காயம் எங்க வரி பணத்தை எப்படி எல்லாம் அழிக்கறானுங்க 1000 கோடி டாஸ்மாக் மோசடி அந்த பணத்த கைப்பற்றினாலே தமிழ் நாடு சுபிக்ஷம் பேருமே மனசாட்சியை இல்லையா


angbu ganesh
மார் 21, 2025 11:13

இன்னும் நாலு வருஷம் அனாலும் செய்ய மாட்டார் என்ன இதுதான் அவருடைய கடைசி ஆட்சி இனி இந்த ஆட்சி நீடித்தால் தமிழ் நாடு சீக்கிரம் அழியும்


Oviya Vijay
மார் 21, 2025 08:03

நம்புங்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை. நாங்கள் 1967 லிருந்து இன்னும் நம்பிக்கொண்டு உள்ளமே. நாளை நமதே 234 லும் நமதே


vivek
மார் 21, 2025 13:20

வெயிட் பண்ணுங்க


Raj
மார் 21, 2025 07:33

என்ன அவசரம் இன்னும் ஓராண்டு உள்ளது, 2026 லும் வாக்களித்தால் வரும் 2031 ல் அமல் படுத்துவார்கள்.


VENKATASUBRAMANIAN
மார் 21, 2025 07:19

இன்னுமா திமுகவை நம்புகிறார்கள். பொய் தவிர வேறு ஒன்றும் பேசாத கட்சி. ஓ ட்டுக்காக மட்டுமே நடத்தப்படும் கட்சி. தன் குடும்பத்தை மட்டுமே வாழ வைக்கும் கட்சி. மக்களை பற்றி கவலையில்லை. ஆயிரம் விட்டு எறிந்தால் ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம். இதுதான் திராவிட மாடல். மக்கள் இனிமேலாவது புரிந்த கொண்டால் சரி


c.mohanraj raj
மார் 21, 2025 06:52

இனியாவது திருட்டு திமுகவை நம்பாதீர்கள்


ராமகிருஷ்ணன்
மார் 21, 2025 05:35

550 டூபாகூர் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தானே சொன்னோம். டேட் சொன்னோமா. முதல் கையெழுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று முழு குடும்பத்தோடு முழங்கினார்கள். ஆனால் புது புது கடைகள், சாராய உற்பத்தி ஆலைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி ஆட்சிக்கு விடியல் மாடல் என்று வாய்ச்சவடால் வேறு.


சமீபத்திய செய்தி