உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாதனை திட்ட பிரசார பயணம்; ஈரோட்டில் துவக்க முதல்வர் முடிவு

சாதனை திட்ட பிரசார பயணம்; ஈரோட்டில் துவக்க முதல்வர் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசின் திட்டங்கள் தொடர்பான பிரசாரத்தை, ஈரோட்டில் இருந்து துவக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஐந்தாம் ஆண்டில் பயணித்து வருகிறது. அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், மகளிர் உரிமைத்தொகை, பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு, பெண்கள் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தி.மு.க., தரப்பு நம்புகிறது. அதேபோல, நான் முதல்வன், மாணவ - மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை வைத்து, மகளிர் மற்றும் இளைஞர்கள் ஓட்டுகளை கைப்பற்ற, தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு லேப்டாப், விடுப்பட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட சலுகைகளும், அடுத்தடுத்து வழங்கப்பட உள்ளன.சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அரசின் திட்டங்கள் தொடர்பான பிரசாரத்தை முன்னெடுக்கப் போவதாக, முதல்வர் ஸ்டாலின், அறிவித்துள்ளார். இந்த பிரசாரத்தை, மங்களகரமான மஞ்சள் விளையும், ஈரோடு மாவட்டத்தில் இருந்து துவக்க, அவர் திட்டமிட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே, வேளாண்துறை வாயிலாக, வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடக்க உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் 11ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். வழக்கமாக முதல்வர் ஸ்டாலின், மாவட்ட சுற்றுப்பயணம் செய்யும்போது, மக்களை சந்திக்கும் 'ரோடு ஷோ' நடத்துவது வழக்கம். இந்த முறை அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் வகையில், மக்களுடன் முதல்வர் கலந்துரையாடும் வகையில், முதல்வரின் பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது. ஈரோட்டில் துவங்கி, மாநிலம் முழுதும் அடுத்தடுத்து பல மாவட்டங்களுக்கும் சென்று, அரசின் சாதனைகளை, மக்களிடம் முதல்வர் விளக்க உள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Amar Akbar Antony
ஜூன் 04, 2025 15:06

விளம்பரமே தேவையில்லை மன்னா ஒவொரு நாளும் விதவைகள் உருவாகிவருகின்றனர். ஒவொரு நாளும் ஒவ்வொரு அரசுத்துறை அதிகாரிகள் துறை வாரியாக வட்டம் மாவட்டம் வாரியாக இலஞ்சம்பெற்று மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மேலும் தங்கள் கட்சி அடியாட்கள் ஆங்காங்கே மகளிரிடம் தொல்லை தருவதை மறக்கமுடியுமா? இல்லை விடியல் பயணமென்று உங்கள் ஆதாயத்திற்காக ஏற்கனவே மோசமாகியுள்ள போக்குவரத்துத்துறையை மேலும் நஷ்டத்தில் மூழ்கடிக்கப்பட்டதை யாரும் காணவில்லையென்று எண்ணிவிட்டிர்களா? இல்லை ஏழை குழந்தைகள் மட்டுமே படிக்கும் அரசுப்பள்ளி கட்டிடங்களின் இருந்தால்] நிலையென்ன? ஆணும் பெண்ணும் கழிவறை பயன்படுத்தக்கூட சரிசமமாக இருக்க ஒரே கழிவறையை பயன்படுத்தும் சமூக நீதி உங்கள் ஆட்சியிலேதான் என்பதும் தமிழ்மக்கள் அறிவார்களே இருந்தும் கட்சி குடும்ப உறுப்பினர்களை காக்க, உங்கள் உயிருக்கும் உயிரான டாஸ்மாக் மற்றும் கனிமவளத்துறை சார்ந்த அரசு அதிகாரிகளுக்காக உச்ச நீதிமன்றம் மோடி அவர்களையும் அரசு செலவில் சென்று பார்த்ததையும் உப்பு தின்னும் அதுவும் தமிழ் மண்ணின் உப்பை தின்னவன் அறிவானே எங்கே கட்சியின் ஆட்களும் ஆட்சியையும் போய்விடுமோ என்ற அச்சத்தில் பல்கலைக்கழக குற்றவாளிகளில் ஒருத்தனை மட்டும் அதுவும் கையும் களவுமாக பிடிபட்டதால் வேரு வழியின்றி வழக்கை பதியவைத்து நீதிமன்றத்து ஆணையின்பேரில் மற்ற கட்சிக்காரர்களை தவிர்த்த விதம் மக்களின் கவனத்தில் உள்ளது. ஆங் ஆளுநர் ஏதோ அச்சத்தில் பயத்தில் கையெழுத்திட்டார் என்று கிண்டல் செய்தீர்களே? அவர் பாவம் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி நீதிமன்றத்தின் ஆலோசனையை கடைபிடித்தார். ஆனால் பாருங்களேன் எதற்க்காக மீண்டும் மந்திரி பதவியில் அமர்ந்தீர்கள் என்று நீதிமன்றம் கலாய்த்தும் கொஞ்சமும் கேவலமின்றி பயமின்று அந்த மந்திரிக்கு பதவி கொடுத்து அழகும் பணமும் பார்த்தீர்களே இப்படி எழுதிக்கொண்டே போகலாம் ஆனால் தினமலரில் மேலும் எழுதினால் குறைத்துவிடுவார்கள். எனினும் உங்கள் இருநூறு மற்றும் பிரியாணி குவாட்டர் பிரியர்களுள்ள உபிசுக்களுக்கு நீங்கள் இருப்பதை காட்ட இப்படிப்பட்ட கூட்டத்தை கூட்டியாகணும். ஒருபக்கம் திருமா மறுபக்கம் கம்மிகள் என்று திண்டாடும் உங்களுக்கு வரும் கோடையில் வழக்குகள் வந்து சேரும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூன் 04, 2025 16:55

என்ன அமரு சார்....எல்லா உண்மைகளையும் இப்படி தொபுகடீர்னு போட்டு உடச்சி புட்டீரு.....இப்ப பாருங்க பாமரன், ஓவியா, வைகுண்டர், ரா‌ஜா, வேணுகோபால் etc... எல்லாம் உங்கள உண்டு இல்லைன்னு ஆக்கப்போறாங்க....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை