உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 72 அவசர கால ஊர்திகள் துவக்கி வைத்தார் முதல்வர்

72 அவசர கால ஊர்திகள் துவக்கி வைத்தார் முதல்வர்

சென்னை:புதிய அடிப்படை வசதிகள் உடைய, 72 அவசர கால ஊர்திகளான ஆம்புலன்ஸ்கள், 4 மலை மற்றும் நிலப்பரப்பு பகுதிகளுக்கான ஊர்திகள், 31 புதிய இலவச அமரர் ஊர்திகள், 36 இலவச தாய் சேய் நல ஊர்திகள் என, 29.1 கோடி ரூபாய் மதிப்பிலான, 143 ஊர்திகளின் சேவையை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அவசர கால ஊர்திகள் சேவைகளை சீரிய முறையில் செயல்படுத்த, 4.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கணினி மென்பொருள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக கேபிள், 'டிவி' கம்யூனிகேஷன் நிறுவனம் வாயிலாக, 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மருத்துவ உபகரணங்களுடன் கூடிய, நான்கு புதிய அவசர கால ஊர்திகளையும், முதல்வர் துவக்கிவைத்தார்.தமிழக உணவு பாதுகாப்புத் துறையில், சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய ஆறு இடங்களில், உணவு பகுப்பாய்வு கூடங்கள் உள்ளன. மாநிலம் முழுதும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் எடுக்கப்படும் உணவு மாதிரிகளின் தரம் குறித்து, இங்கு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு, 36,000 உணவு மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. உணவு பகுப்பாய்வு கூடங்களில் காலியாகவுள்ள இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்திற்கு, 31 மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் ஐந்து பேருக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், தலைமை செயலர் முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா, தேசிய மக்கள் நல்வாழ்வு குழும இயக்குனர் அருண் தம்புராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை