உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடியில் டைடல் நியோ பார்க் திறந்தார் முதல்வர்

துாத்துக்குடியில் டைடல் நியோ பார்க் திறந்தார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துாத்துக்குடி: சென்னையில் கடந்த, 2000ல் மிகப்பெரிய டைடல் பார்க் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கோவை மற்றும் பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் டைடல் பார்க் திறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுதும் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், டைடல் நியோ பார்க் என்ற மினி டைடல் பார்க் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலுார், தஞ்சாவூர், துாத்துக்குடி, சேலம், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பார்க், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் டைடல் பார்க் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் திறக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kk7ggdhr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தென் தமிழகத்தில் முதன் டைடல் நியோ பார்க் துாத்துக்குடியில் நேற்று திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். டைடல் நியோ பார்க்கில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன், அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஒப்பந்தங்களை முதல்வர் ஸ்டாலின் பரிமாறிக் கொண்டார்.துாத்துக்குடியில், 63,000 சதுரடி பரப்பில் தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பார்க், வாகனம் நிறுத்துமிடம், பல்வகை உணவுக்கூடம், உடற்பயிற்சி கூடம், கலையரங்கம், தடையற்ற மின் வசதி ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.இந்த மினி டைடல் பார்க், 32.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 1,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவர் என, தொழில்துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, துாத்துக்குடியில் மேலும் ஒரு டைடல் பார்க் விரைவில் துவங்கப்படும் என, அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன், தலைமை செயலர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலர் அருண் ராய், டைடல் பார்க் மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துாரி, கலெக்டர் இளம்பகவத் உட்பட பலர் பங்கேற்றனர்.

சமத்துவமான வளர்ச்சி முன்னெடுப்பு

துாத்துக்குடியில் டைடல் நியோ பார்க் திறந்து வைத்த பின், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவு:தென் தமிழகத்தின் முதல் டைடல் பூங்காவாக அமைந்துள்ள துாத்துக்குடி டைடல் பூங்கா, அப்பகுதியில் வாய்ப்புகளுக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்து, இளம் திறனாளர்களுக்கு புதிய வாசலை திறந்து விட்டுள்ளது. பட்டாபிராமில் திறந்து வைக்கப்பட்ட டைடல் பூங்கா, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மற்றும் துாத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்டுள்ள நியோ டைடல் பூங்காக்களால் தமிழகத்தின் வளர்ச்சி பல்கி பெருகுகிறது.திராவிட மாடல் ஆட்சியில் மாநிலமெங்கும் தொடங்கப்பட்டுள்ள டைடல் பூங்காக்கள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறது. வேலுார், திருப்பூர், காரைக்குடி என அடுத்து தொடங்கப்படவுள்ள டைடல் பூங்காக்கள் மேலும் வாய்ப்புகளை விரிவடையச் செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
டிச 30, 2024 22:32

தமிழ்நாட்டில் எந்த ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் அது பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் புலம்புவதை வாடிக்கையாக வைத்து உள்ளனர் நமது சங்கிகள். அவர்களால் தான் ஜெலூசில் விற்பனை தமிழகத்தில் நன்றாக நடக்கிறது!


அப்பாவி
டிச 30, 2024 16:28

என்ன தைடெல் பார்க்? உருப்படியா ஒரு விட்டு வரிதை ஆன்லைனில் கட்ட முடியுதான்னா இணைய தளமே வேலை செய்தமாட்டேங்குது. கமிஷன் வாங்கிக்கிட்டு கண்டவனை உட்டு இணைய தளம் உருவாக்கி ஒரு எழவும் வேலை செய்ய மாட்டேங்குது. இது மாதிதி தத்திகள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்து ஆசைப் படுதுங்க.


sankaranarayanan
டிச 30, 2024 11:41

அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த பாலியலுக்கு பத்தி சொல்லாமல் தூத்துக்குடி சென்றுள்ளார் திசை திருப்புவதற்கே ஆனால் மக்கள் மறக்கவே மாட்டார்கள் இனி ஊருக்கு ஊர் பாலியல் வழக்குகள் வந்ததுகொண்டேதான் இருக்கும் எங்கு செல்வாரோ தெரியவில்லையே


Sridhar
டிச 30, 2024 11:09

இன்னும் பகுமானமா நிக்குறார் பாருங்க


xyzabc
டிச 30, 2024 10:52

மக்களை திசை திருப்புவதற்கு ரிப்பன் cutting


AMLA ASOKAN
டிச 30, 2024 10:47

தமிழக வளர்ச்சிக்கான எது செய்தாலும் குற்றம், செய்யமல் இருந்தால் சந்தோசம் . இது என்ன வன்ம , வக்கிர அரசியல் கண்ணோட்டம் ?


Kasimani Baskaran
டிச 30, 2024 08:28

தூத்துக்குடி பகுதிக்கே பிரதான வேலை வாய்ப்பை வழங்கிய ஸ்டெர்லைட்டை மூடி 10000 பேருக்கு வேலை இல்லாமல் ஆக்கி அதன் பின்னர் 1000 பேருக்கு வேலை. சிறப்பான திராவிட மாடல்தான்.


ராமகிருஷ்ணன்
டிச 30, 2024 07:02

32.5 கோடிகளில் திமுக குடும்பத்தினருக்கு எவ்வளவு போச்சு


அப்பாவி
டிச 30, 2024 06:33

பின்பக்கம் ஆடி கார் ஏதாவது நிக்குதா பாருங்க.


J.V. Iyer
டிச 30, 2024 05:04

தமிழகத்தில் உள்ள காவலர்கள் எல்லாம் இங்கே. மீதி காவலர்கள் பாஜககாரர்களை இரவு பத்து மணிக்கு கைதுசெய்ய காத்திருக்கிறார்கள். ஏன் சட்ட ஒழுங்கு மற்ற இடத்தில் கெடாது? பகலிலே தெருவில் மக்கள் நடமாடுவதற்கு அச்சப்படும் தமிழகம். அதுவும் காவலர்கள் இருந்தால் அதைவிட.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை