உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடகமாடுகிறார் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நாடகமாடுகிறார் முதல்வர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: முதல்வர் ஸ்டாலின், தனது அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார் என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.அவரது அறிக்கை:சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக அமையாது என்று தெரிந்து, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், தனது அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார்.https://x.com/annamalai_k/status/1938140236535767271ரயில் கட்டணமானது, புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை. தினந்தோறும், தங்கள் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை. தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். பண்டிகை நாட்களில், தனியார் பஸ்களில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதல்வர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

pmsamy
ஜூன் 27, 2025 07:09

நாடகம் பாக்கறதுக்கு அரசியலுக்கு வந்த...


ராஜ்
ஜூன் 26, 2025 23:19

4 வருசமா போட்டோ ஷூட் மட்டுமே ஒரு வேலையும் தமிழ் நாட்டில் நடந்ததாக தெரியவில்லை


திகழ்ஓவியன்
ஜூன் 26, 2025 23:03

தம்பி நீ செல்லாக்காசு உனக்கு இங்கு மட்டும் தான் மதிப்பு ,


Ramesh Sargam
ஜூன் 26, 2025 22:15

டிக்கெட் எடுத்து பயணிக்கிறவர்கள் கூட இந்த சிறிய விலை உயர்வை பெரிசா குற்றம் சொல்லவில்லை. ஆனால் டிக்கெட் எடுக்காமல் அன்று பயணித்த ஒருவரின் வாரிசு குற்றம் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.


M Ramachandran
ஜூன் 26, 2025 20:19

தமிழ் த்தில் நாடக மாடி தானே இங்கு உள்ளவர் களையை இந்த தீ மு க்க கும்பல் ஏமாற்றி தலையைமொட்டைய அடித்து கொண்டிருக்கு


Sridhar
ஜூன் 26, 2025 19:23

எதோ டீசண்டான அரசியல்வாதி மீது குற்றச்சாட்டு வைப்பதுபோல் நாடகமாடுகிறாரனெல்லாம் சொல்லிட்டிருக்காரு ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளைபோவதை உடனே நடவடிக்கை எடுத்து தடுக்க வக்கில்லாத மத்திய அரசை நடத்திக்கொண்டிருக்கும் கட்சியின் மாநில உறுப்பினர் இப்படி காலம் தாழ்த்துவதை பற்றி என்ன சொல்லப்போகிறார்?


ராஜா
ஜூன் 26, 2025 18:34

மின்மினி பூச்சி போல் எம்புட்டு தூரம் ஓடும் இந்த மலை நாயனார் வலையில் சிக்கி தவிக்கும் ஒரு மின்மினி பூச்சி


venugopal s
ஜூன் 26, 2025 18:19

இவரைத் தான் தேவையில்லை என்று துரத்தி விட்டார்களே, அப்புறமும் ஏன் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டு இருக்கிறார்!


அசோகன்
ஜூன் 26, 2025 17:44

அண்ணாமலையோடு தமிழக மக்கள் நிற்கிறார்கள்........ அத்தனை விலையையும் உயர்திவிட்டு.... சாராயம் ஆறாய் ஓடுவது பத்தாதென்று போதை பொருள்களை விற்று கோடிகளில் மிதக்கும் நீ.... ரயில்லை பற்றி பேச அருகதை இல்லை...... வந்தே பாரத் முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது..... ரைல்நிலையங்கள் அத்தனையையும் மேம்படுத்தி எஸ்கேலேட்டர் வரை கொண்டுவந்துள்ளார்கள்...... நேரத்திற்கு செல்லும் ரைல்கள் இப்போதுதான் பார்க்கமுடிகிறது


Palanisamy Sekar
ஜூன் 26, 2025 16:37

வெறும் சில பைசாக்களின் உயர்வை பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் செய்கின்ற விடியா ஆட்சியில் சொத்து வரி உயர்வும், மின்சார கட்டணமும், மாதம் தோறும் மின்கட்டணம் என்று சொல்லி நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி திரியும் முதல்வர் மக்களை ஏமாற்ற திசை திருப்ப, ஒப்பாரி வைக்கின்றார். மக்களை குடியில் பழகிவிட்டு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று வேண்டுமென்றே கூட்டி வியாபாரம் செய்து அந்த பணத்தை கட்சிக்காரன் பாக்குத்தூக்குள் திணித்து ஆதாயம் தேடும்போது வராத நீலிக்கண்ணீர் இப்போது கொட்டுகின்றது அருவியாக. போகுமிடமெல்லாம் இருநூறு ரூபாய்க்கு ஆட்களை கொண்டுவந்து குவித்து அதனை பார்த்து குதூகலிக்கின்றார் கோமாளியாக. ஒய்யார கொண்டையிலே தாழமப்பூவாம் அதில் இருப்பது பேனும் ஈறுமாம். அப்படி இருக்குது முதல்வரின் கூற்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை