உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அண்ணாமலை

முதல்வர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: அண்ணாமலை

சென்னை : 'நலிவடைந்த பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய் மின் திட்டத்தை செயல்படுத்த, தி.மு.க., அனுமதி அளித்துவிட்டு, 'பெல்' ஆர்டரை நம்பியிருக்கும் சிறு நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் நீலி கண்ணீர் வடிக்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பிரதமர் நரேந்திர மோடி, திருச்சியில், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் முடிவுற்றதை துவக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மத்திய அரசின் பெல் நிறுவனத்தை சார்ந்திருக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு, முந்தைய காலங்களை போல் இல்லாமல், தற்போது ஆர்டர்கள் குறைந்துள்ளன. அதனால், பெல் நிறுவனத்துக்கு ஆர்டர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், 2021ல் மின் வாரியத்தின் அனல் மின் திட்ட ஒப்பந்தம், தனியார் நிறுவனமான பி.ஜி.ஆர்., எனர்ஜி நிறுவனத்திற்கு விதிகள் மீறி வழங்கப்பட்டது. இதுவரை, அத்திட்ட பணியில் முன்னேற்றம் இல்லை.அந்த டெண்டரில் பங்கேற்ற மற்றொரு நிறுவனமான பெல் நிறுவனத்தை, தமிழக அரசு பரிசீலிக்கவில்லை. பெல் தொழிற்சங்கங்கள், பி.ஜி.ஆர்., எனர்ஜி உடனான ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.பி.ஜி.ஆர்., போன்ற நலிவடைந்த நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற, தி.மு.க., அரசு அனுமதி அளித்தது. ஆனால் இன்று, பெல் ஆர்டர்களை நம்பியிருக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக, ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.இந்த நிலைக்கு தாங்கள் தான் காரணம் என்பதைகூட, தி.மு.க., இன்னும் உணரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

K.Ramakrishnan
ஜன 04, 2024 19:43

அதானியிடம் பொதுத்துறை நிறுவனங்களை மத்தியஅரசு விற்ற போது, எங்கே போய் இருந்தார் அண்ணாமலை? ஓ.. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாரோ? அப்ப அவருக்கு அரசியல்னா என்ன என்றே தெரியாதே...


PR Makudeswaran
ஜன 04, 2024 15:00

திரு ரமேஷ் அதானி பொது துறை நிறுவனம் எதை வாங்கினார்? என்ன விலைக்கு வாங்கினார்? கொஞ்சம் சொல்ல முடியுமா?


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:55

அதாவது என்ன வென்றால் நாங்கள் அதானிக்கு கொடுத்திருந்தால் அமைதியாக இருப்போம் என்று சொல்கிறார் போல? பல துறைமுகங்கள், பல ஏர்போர்ட்கள் இன்று யாரின் கட்டுப்பாட்டில் எந்த கம்பனி கட்டுப்பாட்டில் உள்ளது என்று இந்திய மக்கள் அனைவருக்கும் தெரியுமே ?? நாமெல்லாம் தனியார் கம்பெனிகளை பற்றி முதலில் பேசலாமா ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 04, 2024 12:34

மேட்டூர் விரிவாக்க அனல் மின் நிலையத்துக்கான பணிகளை செய்ய பி ஜி ஆர் நிறுவனம் தகுதி பெறவில்லை என்று அதனை டெண்டரில் இருந்து நீக்கிய வரலாறும் அதனால் அந்த மின் வாரியத்தலைவருக்கு நேர்ந்த கதியும் இந்த அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி பி ஜி ஆர் நிறுவன முதலாளி ராகுபதிக்கும் முன்னாள் மின்வெட்டுத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் உள்ள உறவு பற்றியும் அண்ணாமலைக்கு தெரியாது . இந்த விஷயங்களை தோண்டி எடுத்துப்பார்த்தால் பி ஜி ஆர் நிறுவனத்துக்கு அப்பன் வீட்டு காசான 4500 கோடி ரூபாய்களை கொட்டிக்கொடுக்கும் ரகசியம் தெரிந்துவிடும்.


கனோஜ் ஆங்ரே
ஜன 04, 2024 12:13

அண்ணாமலை... “பெல்” நிறுவனம், ஒரு மத்திய அரசு நிறுவனம், அது மாநில அரசு நிறுவனம் அல்ல. என் வீட்டு புள்ளைக்குத்தான் நான் சோறு போட முடியும்... அடுத்தவன் வீட்டுக்கு நாங்க ஏன்யா சோறு போடணும். உன் வீட்டுக்கு புள்ளைக்கு நீ சோறு போடு... உங்க கட்சிதான் இந்தியாவில் இருக்குற பொதுத்துறை நிறுவனங்களை வித்திட்டே வர்றீங்களே....?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 04, 2024 12:29

அருமையா சொல்லிப்போட்டிங்க, பி ஜி ஆர் நிறுவனம் உங்க வூட்டு புள்ளைன்னு. தெரிஞ்சு சொன்னீங்களா இல்லே தெரியாம சொன்னீங்களா? மெய்யாலுமே அது ஆற்காடு வீராசாமியோட கம்பெனிதானுங்க


ramesh
ஜன 04, 2024 12:38

அரசின் பொது துறை நிறுவனங்கள் அனைத்தயும் அதானிக்கு வித்தாகீ விட்டது. இனிமேல் அப்பாவி பொதுமக்களின் வீடுகளை விக்க வேண்டியது தான் பாக்கி. அப்படி நடந்தால் நம்முடைய வீட்டுக்கே நாம் வாடகை குடுக்கும் நிலை ஏற்படும்


சரவணபிரபு,துறையூர்
ஜன 04, 2024 13:52

ஹேய் கனோஜ் நீ திமுகவுக்கு நல்லா முட்டுக் கொடுக்கிற மேன் இன்னேலருந்து உன் பெயரை முட்டித் தூக்ரே வச்சிக்க மேன் பொருத்தமா இருக்கும்..????????


கனோஜ் ஆங்ரே
ஜன 04, 2024 14:52

அப்ப 'அதானி' யார் நீங்கதான் ஆற்காடு வீராசாமி பேரைச் சொல்றீங்க.


கனோஜ் ஆங்ரே
ஜன 04, 2024 14:53

துறையூர் சரவணபிரபு... கனோஜ் ஆங்ரே... யாருன்னே தெரியாம பேசுற....? உங்கள மாதிரி கனோஜ் ஆங்ரே..ன்னாலும் யார்னு தெரியாது.. வீரபாண்டிய கட்டபொம்மன்னாலும் யார்னு தெரியாது...?


Velan Iyengaar
ஜன 04, 2024 15:47

கனோஜ் ஆங்க்ரே என்ற மராட்டிய மாமன்னன் சிவாஜியின் மாலுமி குறித்து தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை...


Velan Iyengaar
ஜன 04, 2024 16:33

தெரிந்திருந்தால் மாற வாய்ப்பே இல்லை மேலும்.. புனை பெயர் காரணம் ஒரு தனி கட்டுரை.. அது அறிவார்த்தமானது அதை புரிந்துகொள்ளும் பக்குவமோ இல்லை அறிவோ சங்கிகளுக்கு வாய்ப்பே இல்லை அதை வெளியிடும் தைரியமும்...... விசாலமானமும் ....


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 04, 2024 10:58

முதல்வர் ஒரு மகா நடிகன் என்பது ஊரறிந்த விசயம். புத்திமதி எல்லாம் அடுத்தவனுக்குத்தான். ஆனால், தான் கொள்ளையடிப்பதை மட்டும் நிறுத்தப்போவதில்லை.


ஆரூர் ரங்
ஜன 04, 2024 10:23

BGR ஆற்காட்டாரின் உறவாமே????


thalapathy
ஜன 04, 2024 10:17

ஆயிரம் 500 ஆசைப்பட்டு ஓட்டு போட்டா பிராடுக்கு ஓட்டு போட்டா அனுபவிச்சு தான் ஆகணும்


ramesh
ஜன 04, 2024 11:16

மதத்தின் பெயரை மட்டுமே சொல்லி பொருளாதார வளர்ச்சி என்ன என்று தெரியாமல் ஆட்சி நடத்தினால் ஒட்டு போட்டு ஏமாந்த அப்பாவி மக்கள் தலையில் இடிபோல் இறங்கும் பெட்ரோலியம் போட்டுக்கால் காஸ் விலை மூன்று மடங்கு ஏற்றும் பொது அனுபவித்து தான் ஆகா வேண்டும்


raja
ஜன 04, 2024 08:50

...விடியா மூஞ்சிக்கு...


ramesh
ஜன 04, 2024 11:12

உண்மைதான் ஆட்டுக்கு எப்போதும் விடியாத மூஞ்சி தான்


R SRINIVASAN
ஜன 04, 2024 08:39

வேலன் ஐயங்கார் என்ற புனைபெயரில் எழுதும் இவர் உண்மையான பெயரை குறிப்பிடவேண்டும்


rajen.tnl
ஜன 04, 2024 09:24

அவர் அறிவாலயத்தில் இருந்து எழுதுகிறார் என்று எல்லோருக்கும் தெரியுமே


Velan Iyengaar
ஜன 04, 2024 09:41

பேசாம ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பித்துவிடுங்கள்


ramesh
ஜன 04, 2024 11:11

நீங்கள் கமலாலயத்தில் இருந்து எழுதும் பொது அவர் அறிவாலயத்தில் இருந்து எழுதுவதில் என்ன தவறு


Siva
ஜன 04, 2024 12:48

அப்படியானால் நீங்கள் எல்லாம் அறிவாலயத்தில் இருந்து தான் எழுதுகிறீர்கள்


தமிழ்
ஜன 04, 2024 13:12

ஏன், பிஜேபி அனுதாபிகள் அனைவரும் சொந்த பெயரில்தான் கருத்து சொல்கிறார்களா.


ramesh
ஜன 04, 2024 13:40

இங்கே சிலர் பிஜேபி க்கு ஆதரவாக கிறிஸ்தவர் மற்றும் முஸ்லீம் புனை பெயர்களில் கருத்து எழுதுகிறார்களே பிறகு என்ன .என்ன சிவா நானும் திருநெல்வேலி காரன் தான் .நெல்லையில் இருந்து கருத்து எழுதினால் என்ன சென்னையில் இருந்து எழுதினால் என்ன .உங்களுக்கு மட்டும் தான் அறிவாலயமாக தெரிகிறது சென்னை எல்லா பகுதிகளும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ