உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் திறந்த புதிய கட்டடம்: மூன்றே நாளில் இடிந்ததால் ஷாக்

முதல்வர் திறந்த புதிய கட்டடம்: மூன்றே நாளில் இடிந்ததால் ஷாக்

தஞ்சாவூர்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டடத்தில், மூன்றே நாளில் கூரையின் சிமென்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் பஞ்., அலுவலக கட்டடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டது. தஞ்சாவூரில் ஜூன் 16ல் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின் இந்த கட்டடத்தை திறந்து வைத்தார்.முன்னதாக, முதல்வர் திறப்பதற்கு முந்தைய நாள் இரவு, புதிய கட்டடத்தின் கூரையில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.அடுத்த நாள் திறப்பு விழா என்பதால், உடனடியாக அவசர கதியில் பெயர்ந்த பூச்சை மீண்டும் பூச்சு வேலை செய்து சீரமைத்தனர்.அதன்பின், ஜூன் 16ல் முதல்வர் கட்டடத்தை திறந்து வைத்தார். தற்போது அலுவலகத்தில் தளவாடப் பொருட்களை வைப்பதற்காக, நேற்று அலுவலக கட்டடத்தை ஊழியர்கள் திறந்தனர்.அப்போது, சிமென்ட் பூச்சு மீண்டும் பெயர்ந்து விழுந்திருந்தது. இதனால் உள்ளே செல்ல பயந்து, ஊழியர்கள் நடுங்கினர். தகவலறிந்த உள்ளூர் மக்கள் கடும் அதிர்ச்சிஅடைந்தனர்.திருவிடைமருதுார் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் கட்டுமான விதிகளை பின்பற்றாத ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் ராஜேந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும்,உதவி செயற்பொறியாளர் சுமதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

D.Ambujavalli
ஜூன் 21, 2025 18:22

ஒதுக்கிய 30 லட்சத்தில் நாலு பக்கமும் கமிஷன், கட்டிங் போக 3 லட்சம் தேறினாலே அதிகம். அந்தத் தொகைக்கு இவ்வளவு கட்டியதே அதிகம் முதலில் காரை பெயர்ந்து, patch வேலை செய்து நிறுத்தி வைத்ததே சாமர்த்தியம்.


ஆரூர் ரங்
ஜூன் 20, 2025 22:19

தகைசால் ஒப்பந்ததாரர் விருது தரலாம்.


அசோகன்
ஜூன் 20, 2025 15:55

இந்த கட்டிட வல்லமையை பார்த்து நாசா வே வியந்து போச்சாம்.......உடனே இது மாதிரி கட்டிடத்தை அவங்களுக்கும் உடனே கட்டித்திர ஸ்டாலின் கிட்ட கேட்டிருக்காங்க


S.kausalya
ஜூன் 20, 2025 13:18

மூணு நாள் நல்லா இருந்துச்சா. கட்டிய ஒப்பந்ததாரர் ஆச்சரியம்


HoneyBee
ஜூன் 20, 2025 13:07

கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன்னு போய் விட்டது... அம்புட்டு தான்


Antony Karlo
ஜூன் 20, 2025 10:40

திருடர் முனேற்ற கழக.


sankaranarayanan
ஜூன் 20, 2025 09:41

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டடத்தில், மூன்றே நாளில் கூரையின் சிமென்ட் பூச்சி பெயர்ந்து விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மூன்றெழுத்தில் உள்ள கட்சிக்கு மூன்றே நாளில் நடக்கும் அதிசயம் இது போன்றே இனி அதிசயங்கள் தினம் தோறும் தொடரும் இஅதியும் கின்னத் புத்தகத்தில் எழுதி வைக்கலாமே இல்லம் தேடி கல்வி போல ஊர்களைத்தேடி கட்டிடம் கட்டி இடிக்கப்படும் ஈடுபடும் முதல்வர்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 09:39

யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே ..


Mohan
ஜூன் 20, 2025 09:18

எது எப்டிபோனாலும் நாங்க அடுத்த தேர்தலிலும் அவர் தான் முதல்வர் ...ஏன்னா எங்க டிசைன் அப்டி ...காசும் கோட்டர் கோழி பிரியாணிக்கு அடிமையாகிவிட்டோம் ...


Bhaskaran
ஜூன் 20, 2025 08:34

பொறியாளருக்கு செப்டம்பர் முப்பெரும் விழாவில் தலைசிறந்த பொறியாளர் கான் அண்ணா தங்கப்பதக்கம் வழங்கி முதல்வர் சிறப்பு செய்வார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை