உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.499 கோடியில் நான்குவழி சாலை, மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.499 கோடியில் நான்குவழி சாலை, மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை:நெடுஞ்சாலைத் துறை சார்பில், 499 கோடி ரூபாய் மதிப்பில் அமைகப்பட்ட நான்குவழிச் சாலை மற்றும் புதிய மேம்பாலங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், மல்லியக்கரை - ராசிபுரம், திருச்செங்கோடு - ஈரோடு சாலை, 424.38 கோடி ரூபாய் மதிப்பில் நான்குவழி சாலையாக மேம்படுத்தப்பட்டது மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் ரயில்வே கடவிற்கு மாற்றாக, 68.38 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டப்பட்டது ராணிப்பேட்டை மேல்பாக்கத்தில், 6.32 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம், 499.08 கோடி ரூபாய் மதிப்பில் நடந்த இப்பணிகள் முடிவுற்ற நிலையில், தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 571.92 கோடி ரூபாய் மதிப்பிலான, 49 முடிவுற்ற பணிகளை, முதல்வர் திறந்து வைத்தார் கடலுார் மேம்படுத்தப்பட்ட வெள்ளி கடற்கரை, கடலுார் சரவண நகர், முதுநகர் மண்டல அலுவலகங்கள்  காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சந்தை ஓசூர் எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் நவீன வணிக வளாகம், புதிய மீன் மார்க்கெட், கும்பகோணம் அறிவுசார் மையம், புதுக்கோட்டை தினசரி அங்காடி, சேலம் அல்லிக்குட்டை ஏரி புதுப்பிப்பு திருப்பூர், சங்கிலிபள்ளம் ஓடையில் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட 19 முடிவுற்ற பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
மே 30, 2025 06:30

ஏன் அதை ரூபாய் 500 கோடியில் போடக்கூடாதா? எது கொள்ளையடிக்கணுமுன்னா இப்படித்தான் பிசிராக அறிவிக்கணுமா?


Devanand Louis
மே 30, 2025 06:19

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சியின் கர்பகனா பகுதியிலிருந்து ஏற்பட்டுள்ள ஒரு முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல குறையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இணைதெரியதொரு நடவடிக்கையாக, நகராட்சி அதிகாரிகள் அல்லது அவர்கள் ஒப்பந்ததாரர்கள், ராயலசீமா பட்டியில் உள்ள ரயில்வே ப்ளாக் உற்பத்தி ஆலைக்குச் சொந்தமான கட்டுமான கழிவுகளை நகரின் முக்கிய சாலைகளில் பரப்பி வருகின்றனர். இந்த கழிவுகள் முறையாக சீரமைக்கப்படாமல் அல்லது சாலைக்கான தரநிலைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்படாமல் இருப்பதால், வாகனங்கள் செல்வதன் மூலம் மிகவும் அதிக அளவில் தூசி மாசு ஏற்படுகிறது. முக்கிய கவலைகள்: • உடல்நல பாதிப்பு: தூசியின் காரணமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுகாதார சிக்கல்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோருக்கு ஏற்படுகின்றன. • வியாபார மீதான தாக்கம்: சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகிறார்கள், பொருட்களில் தூசி அடித்துவிடுகிறது. • சுற்றுச்சூழல் பாதிப்பு: நீண்ட காலமாக தூசி மாசு நிலவுவதால் மண் மற்றும் காற்று தரம் பாதிக்கப்படும். • பொது அறிவிப்பின்றி நடவடிக்கை: இப்பகுதியில் மக்கள் அறிவிப்பு இன்றி மற்றும் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, நகராட்சி மேலாண்மையில் தவறான முன்மாதிரி anti-pattern ஆகும். இது பாதுகாப்பான, சுறுசுறுப்பான மற்றும் பொதுமக்கள் நலனுக்கு அமைவான திட்டமிடல் நடைமுறைக்கு எதிரானது. எங்களது கோரிக்கைகள்: 1. சாலைகளில் கையாளப்படுகிற கட்டுமான கழிவுகளின் உரிய பரிசோதனை மற்றும் உடனடி நிறுத்தம். 2. தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், போதிய நீர் தெளிப்பு அல்லது மற்ற முறைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 3. பயன்படுத்தப்படும் பொருட்களின் மூலம் மற்றும் தகுதியை உறுதி செய்யும் சோதனை. 4. சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கண்காணிப்பு முறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 5. மேற்கொள்ளப்பட உள்ள திருத்த நடவடிக்கைகள் மற்றும் காலக்கெடு தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை உங்கள் அலுவலகம் உரிய முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டு, பொது நலனுக்காக விரைந்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.


சமீபத்திய செய்தி