உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 சுற்றுலா தலங்களில் ரூ.27.34 கோடி பணிகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

7 சுற்றுலா தலங்களில் ரூ.27.34 கோடி பணிகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை:தமிழகத்தில், ஏழு சுற்றுலா தலங்களில், 27.34 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவி பகுதியில், 27.58 கோடி ரூபாய் செலவில், நுழை வாயில் வளைவு, கழிப்பறைகள், நுழைவுச்சீட்டு வழங்குமிடம்.உணவகம், படகு தளம், பார்வை மேடை, மசாஜ் செய்யும் இடம், குளியல் அறைகள், உடை மாற்றும் அறைகள், ஆழ்துளை கிணறு போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.வத்தல் மலைப்பகுதியில், 2.23 கோடி ரூபாயில், நில சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம், நுழைவாயில் வளைவு, உணவகம், வரவேற்பறை மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளன.நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், 2.23 கோடி ரூபாயில், நுழை வாயில் வளைவு, வாகன நிறுத்துமிடம், நடைபாதை, கழிப்பறைகள், சாகச மற்றும் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டம் ஆண்டிப்பாளையம் ஏரி, 1.47 கோடி; கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை, 2.84 கோடி; ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஏரி 50 லட்சம்; திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஹரித்ரா நதி கோவில் குளம், 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.இப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக துவக்கி வைத்தார். அமைச்சர்கள் முத்துசாமி, பன்னீர்செல்வம், சாமிநாதன், ராஜேந்திரன், ராஜா, தலைமை செயலர் முருகானந்தம், சுற்றுலாத்துறை செயலர் சந்திரமோகன் பங்கேற்றனர்.பதிவுத்துறை சார்பில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், 30.28 கோடி ரூபாய் செலவில், 17 சார்-பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். உடன், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வேலு, மூர்த்தி மற்றும் தலைமை செயலர் முருகானந்தம். இடம்: தலைமை செயலகம், சென்னை.

சார்-பதிவாளர் அலுவலக கட்டடங்கள் திறப்பு

பதிவுத்துறை சார்பில், மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 30.28 கோடி ரூபாய் செலவில், 17 சார்-பதிவாளர் அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக திறந்து வைத்தார். அமைச்சர்கள் வேலு, மூர்த்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை