உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.44,125 கோடி முதலீடு: 24,700 பேருக்கு வேலை; 15 நிறுவனங்களுக்கு ஒப்புதல்!

ரூ.44,125 கோடி முதலீடு: 24,700 பேருக்கு வேலை; 15 நிறுவனங்களுக்கு ஒப்புதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ரூ.44,125 கோடியில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது பல்வேறு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் தொழில்களுக்கு முதலீட்டு அனுமதி அளிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yjiignc9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில் கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் விளக்கமாக கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது;

அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 24,700 நபர்களுக்கு புதியதாக வேலைவாய்ப்புகள் உருவாகும்.தூத்துக்குடியில் செம்பா நிறுவனத்துக்கு முதலீடாக ரூ. 21,340 கோடி திட்டம், காஞ்சிபுரத்தில் ரூ. 2600 கோடி முதலீட்டில் 2800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய திட்டம் என 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டு உள்ளது.வரும் 17ம் தேதி நாட்டிலேயே முதல் முறையாக ஸ்ரீபெரும்புதூர் வல்லம்படுகையில் ரூ.206கோடியில் 18,000 தொழிலாளர்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய தங்கும் இட கட்டிடம் திறக்கப்படுகிறது. பசுமை எரிசக்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று கூறினார். முதல்வர் ஸ்டாலின் வெகு விரைவில் வெளிநாடு பயணம் செல்ல உள்ளதால் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Gajageswari
ஆக 14, 2024 08:38

திருப்பூர் தெற்கு சுமார் 15 தொழில்கள் அனுமதி இல்லாமல் முடங்கி உள்ளது. இதை பற்றி நடவடிக்கை இல்லை


anbu raja
ஆக 13, 2024 15:54

எதாவது தொழில் வந்தால் சென்னை அல்லது காஞ்சிபுரம், மதுரை கோவை தூத்துக்குடி இப்படி போனால் புதுக்கோட்டை ராமநாதபுரம் தேனி இங்கெல்லாம் தொழில் வளங்கள் கொண்டு வரமாட்டாங்களா. புதுக்கோட்டையில் இரண்டு அமைச்சர் இருக்கிறார்கள்


sridhar
ஆக 13, 2024 15:53

நான் நூறு லட்சம் கோடியில் தமிழகத்தில் தொழில் தொடங்கி ஒரு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு தரப்போகிறேன் , எப்போது என்று தெரியாது.


enkeyem
ஆக 13, 2024 15:39

இந்த விடியா திமுக அரசு இருக்கும் வரை இந்த மாதிரி கவர்ச்சி அறிவிப்புகளும் அதிகாரிகள் இடமாறுதல்களுக்கும் பஞ்சமில்லை. ஆக மொத்தம் மக்களுக்கு அல்வாதான்


அஜய் சென்னை இந்தியன்
ஆக 13, 2024 15:26

ஒப்பந்த பணியார்கள் என்றாலே ஏமாற்று வேலை. அதுவும் அரசு துறை ஒப்பந்த பானியார்களை வைத்து வேலை செய்து விட்டு...அவர்களுக்கு ஒரு benefits இல்லாமல் போவது மிக பெரிய தவறு. இதை எதிர்த்து எதிர்கட்சி வழக்கு போட வில்லை என்றால். எதிர் கட்சியாக இருந்தும் பிரோசனம் இல்லை. அதுபோல் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள், மாணவர்களுக்கு எதிர்த்து போராட வில்லை என்றாலும் தவறு தான். ஆனால் தமிழகத்தில் எதிர்த்து போராட யாரும் முன்வருவதில்லை... சல்லிக்கட்டு போராட்டத்தில் போராட்டம் செய்தவர்களை அதிமுக அரசு எண்ண செய்தது மக்கள் அறிவார்கள்.


Sainathan Veeraraghavan
ஆக 13, 2024 15:18

எவ்வளவு கோடிகள் ஏப்பமாக விடுவார்களோ. ரூம் போட்டு யோசிக்கிறார்கள்


S.Martin Manoj
ஆக 13, 2024 15:18

ஆர்டர் புடிக்க வெளிநாடு செல்வது போலவாய்?


Dharmavaan
ஆக 13, 2024 14:55

இன்னொரு ஏமாற்றும் அறிவிப்பு மக்கள் மூடர் என்ற நினைவில்


Kumar Kumzi
ஆக 13, 2024 14:54

ஒப்புதல் மட்டும் தானே யாராவது வந்தார்களா கமிஷன் பாக்காம உள்ளே விட்டுருவோமா ....


ஆரூர் ரங்
ஆக 13, 2024 14:45

அரசுப் பணிகளில் பெரும்பாலும் அவுட் ஸோர்ஸ் முறையில்தான் நியமிக்கப்படுகிறார்கள். ஆட்சியே மருமகனுக்கு அவுட்ஸோர்ஸ் செய்யப்பட்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஈவேரா முதலியார் ஒழிப்பு இயக்கம் துவக்க அறிவிப்பு வெளியிட்டது ஏன்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை