உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின்: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தோல்விக்கு இப்போதே முதல்வர் ஸ்டாலின் காரணம் தேடுகிறார் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணியை தேர்தல் கமிஷன் துவங்கும் தகவல் வந்ததும் அலறும் முதல்வர் ஸ்டாலினுக்கு வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது மறந்துவிட்டதா? மறைந்த ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 10 முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி நடைபெற்றது முதல்வருக்குத் தெரியாததா என்ன? இப்படி ஆண்டாண்டு காலமாக நடக்கும் தேர்தல் கமிஷனின் வழக்கமான நடைமுறையை ஏதோ புதிய முறை போல காட்சிப்படுத்த முயற்சிப்பது ஏன்? மேலும், திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முதல் மாவட்ட கலெக்டர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் வரை அனைவரும் தமிழக அரசின் கீழ் பணியாற்றுவோர் தான். அப்படி இருக்கையில் தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக அரசு?தமிழகத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவல் அதிகமாகியிருக்கும் வேளையில், அவர்கள் வாக்காளராக உருமாறுவதைத் தடுக்கத் தான் இந்த வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதே தவிர தமிழக வாக்காளரை நீக்குவதற்கு அல்ல என்பது தங்களுக்கும் தெரியும். எனவே மழை வெள்ள பாதிப்புகள் தொடங்கி பயிர் கொள்முதல் செய்யாமை, தரமற்ற சாலைகள், குடிநீர் தட்டுப்பாடு, பள்ளிக்கரணை ஊழல் போன்ற திமுக அரசின் தவறுகளை மறைக்க வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை கையில் எடுத்து, பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம். எவ்வளவு மடைமாற்றினாலும் மக்கள் எதையும் மறக்கவும் போவதில்லை, மனம் மாறப்போவதுமில்லை. திமுகவின் தோல்வி நிச்சயம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
அக் 27, 2025 20:21

தோல்வி பயம் வந்தததால் தான்... இண்டி கூட்டணி ஆட்கள் எல்லாம்..... வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்கள்.


Narayanan Muthu
அக் 27, 2025 20:08

நயினாரையும் அவரின் பேச்சையும் யாருமே சீரியஸ் ஆக எடுத்துக்கொள்வதில்லை யாரும் இவர் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றுவதும் கிடையாது. ஐயோ பாவம்.


Venugopal S
அக் 27, 2025 17:59

பாஜகவினருக்கு கவலையில்லை, ஏற்கனவே ஏகப்பட்ட காரணங்கள் கைவசம் உள்ளன!


Senthoora
அக் 27, 2025 17:38

தனக்கு இருக்கும் தோல்வி பயத்தை , எதிரியின் முகத்தில் பார்த்திருக்கிறார். அவளவுதான்.


Kulandai kannan
அக் 27, 2025 16:49

SIR is a must


pakalavan
அக் 27, 2025 16:36

நயினாரை ஒருவரும் மதிப்பதே இல்லை, நீ் பேசுவது பாஐக கட்சில பலருக்கு பிடிக்கவேஇல்ல


vivek
அக் 27, 2025 17:44

இருநூறுக்கு கருத்து போடும் பகலவன்


rahul
அக் 27, 2025 15:38

ஓபிஎஸ் திமுக தான் ஆட்சி அமைக்கும் சொல்கிறார்


Ramesh A
அக் 27, 2025 15:34

.ஆனா ஒரு பையயா கண்டுக்க மாட்டேன்கிற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை