உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

மகளிருக்கு எதிரான குற்றங்கள் குறைவு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:தேசிய குற்ற ஆவண காப்பகத்தின், தரவுகளின்படி, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள், மிகவும் குறைவாக நடக்கும் மாநிலங்களில், தமிழகம் ஒன்றாக உள்ளது. போக்சோ குற்றங்கள் தொடர்பாக, எவ்வித அச்சமும் இல்லாமல், போலீஸ் நிலையத்தில், நம்பிக்கையோடு புகார் அளிக்கும் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. அச்சமின்றி புகாரளித்தால்தான் குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைது செய்து, தண்டனை பெற்று தர முடியும். இத்தகைய நபர்கள், மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க, இது மிக அவசியம். ஏற்கனவே நான் கூறியது போல, குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், விரைவான விசாரணை, அதிகபட்ச தண்டனை, முன்ஜாமீன் இல்லை என்பதே அரசின் கொள்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 14, 2025 08:43

இன்பநிதியின் ஆட்சி மலர தமிழ்நாடு மகளிர் காத்திருக்கிறார்கள்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 14, 2025 08:13

திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்கு எதிரான குற்றங்களே நடைபெற வில்லை ...இது மகளிருக்கான பொற்கால ஆட்சி ... மீதும் திராவிட ஆட்சி வேண்டுமென்று பெண்கள் தவிக்கின்றனர் .. துடிக்கின்றனர் .. என்று கொஞ்சம் அளந்துவிட்டால் 200 உபிக்கல் பரவச நிலையில் இருக்குமே


Mani . V
ஜூன் 14, 2025 04:57

நீங்கள் குறைவு என்று சொல்லும்பொழுதே இவ்வளவு பாலியல் வன்புணர்வுகள் நடக்கிறது என்றால், நீங்கள் அதிகம் என்று சொன்னால் ஒருத்தரும் வெளியில் நடமாட முடியாது போலிருக்கிறதே. சரி யார் அந்த "சார்"?


R.MURALIKRISHNAN
ஜூன் 14, 2025 03:47

சிரிச்சிட்டோம், சர்வாதிகாரி. யார் அந்த சார், கண்டுபிடிச்சாச்சா


புதிய வீடியோ