உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., பாய்ச்சல்

கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்: இ.பி.எஸ்., பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொள்ளாச்சி வழக்கில் தி.மு.க.,வின் பங்கு என்ன? கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சனம் செய்துள்ளார்.அவரது அறிக்கை: இன்று முதல்வர் ஸ்டாலின் தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், சி.பி.ஐ.,க்கு மாற்றியதும் அ.தி.மு.க., அரசு; விசாரித்தது சி.பி.ஐ.,; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில தி.மு.க., அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zfht3bzg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி! கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அ.தி.மு.க., அரசு! கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் தி.மு.க.,வைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமின்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…? தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.அ.தி.மு.க., வலியுறுத்தியை அடுத்து, மத்திய அரசு தமிழகத்திற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார். முதல்வர் ஸ்டாலின் நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!இத்தனை நாட்கள் 'என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?' என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். இது தானே OG பித்தலாட்டம்? மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அ.தி.மு.க., செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

pmsamy
மே 15, 2025 08:07

ஜெயலலிதாவிற்கு பிறகு தனித்து நின்று ஜெயிக்க முடியாத எடப்பாடி பேசுவதற்கு தகுதியற்றவர்


Anantharaman Srinivasan
மே 14, 2025 18:53

மாத்திமாத்தி தினமும் புலம்பல். அரசியலையும் நாட்டு நடப்பையும் முன் எடுக்க காணோம். இந்த திராவிடகட்சிகன் ஒழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்.


Balasri Bavithra
மே 14, 2025 17:39

அப்படியே அந்த அண்ணா யூனிவர்சிட்டி சாரு, கள்ள குறிச்சி விச சாராய குற்றவாளிக்கு சிபிஐ விசாரணை செய நல்லது


Madras Madra
மே 14, 2025 16:54

இப்போ இதுக்கு பதில் சொல்ல தெரியாம எடப்பாடியை திட்டுவார்கள்


தமிழன்
மே 14, 2025 16:11

எடபாடியார் ஐயா அவர்களே பொய் கூற வேண்டாம்


இவன்
மே 14, 2025 16:17

எடப்பாடி கிழிச்சி தொங்க விடுறாரு


Kjp
மே 14, 2025 16:20

எது பொய் என்பதை சுட்டிக் காட்டுங்கள்.எடப்பாடியாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பொய் என்று சொல்லி சமாளிக்க வேண்டாம்.


திருட்டு திராவிடன்
மே 14, 2025 16:03

அது என்னமோ தெரியவில்லை எடப்பாடி என்ன அறிக்கை விட்டாலும் அது மனதை தொட மாட்டேன் என்கிறது. ஏனெனில் நீர் ஒரு பித்தலாட்டக்காரன் என்று உள் மனதில் பதிந்து விட்டது.


Anand
மே 14, 2025 16:10

அது வேற ஒண்ணுமில்லைங்க, காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்கள் உள் மனது உள்ளது...


Kjp
மே 14, 2025 17:43

அரசியலில் எல்லோரும் பித்தலாட்டகாரர்கள் தான்.முரசொலியைத் தவிர மற்ற பத்திரிகைகளை படித்தால் யார் பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்று தெரியும்.


Anantharaman Srinivasan
மே 14, 2025 18:48

எடப்பாடி என்ன அறிக்கை விட்டாலும் அது என் மனதை தொட மாட்டேன் என்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை