உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: காசா மீது தாக்குதலை நடத்தும் இஸ்ரேல் அரசை கண்டித்து, வரும் 8ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ள அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பெ.சண்முகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: காசா மீது இனப் படுகொலை களை, இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வலியுறுத்தியும், பாலஸ்தீன ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம், சென்னையில் வரும் 8ம் தேதி நடக்கவுள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். காசா மீது இனப் படுகொலைகளை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் அரசை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நடக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

N S
அக் 04, 2025 20:11

எட்டாம் தேதி நடக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். அப்பா, மகன், அத்தை, பேரன் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் எதிர்பார்கின்றோம். திராவிட மடலை கண்டு இஸ்ரேல் என்ன, உலகமே பயப்பட வேண்டும். உடன் பிறப்பே வெகுண்டெழு.


Chandru
அக் 04, 2025 16:10

சிரித்து சிரித்தே எத்தணை உயிர் போகப்போகறதோ தெரியவில்லை ஸ்டாலின் அப்பா முடியல்லப்பா


Chess Player
அக் 04, 2025 14:32

யாரவது கொஞ்சம் சொல்லுங்க சி ம் க்கு. காசா இந்தியாவிலே இல்ல. நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல நமது வெளி உறவுத்துறை கவனித்துக்கொள்ளும் இங்க இவரு பார்க்கவேண்டிய தமிழ் நாடு வேலைய பார்க்க சொல்லுங்க


Ramesh Sargam
அக் 04, 2025 10:32

இஸ்ரேல் மீது இவருக்கு என்ன காண்டு? காசா மீது இவருக்கு என்ன அந்த அளவுக்கு கனிவு? காசா மக்கள் மீது காட்டும் கனிவு, நம்ம கள்ளக்குறிச்சி மக்கள் மீது இதுவரையில் காட்டவில்லையே


VENKATASUBRAMANIAN
அக் 04, 2025 08:31

இங்கே எல்லாம் கிழித்து விட்டீர்கள். இப்போது காஸாவுக்கு ஆதரவு. தீவிரவாதிகளை ஆதரிப்பது தான் எதிர்கட்சிகளின் நோக்கம். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


sankar
அக் 04, 2025 08:13

உள்ளூர் அரசியல் விட்டு உலக அரசியல் - இதெல்லாம் நமக்கு தேவையா


திகழ் ஓவியன்
அக் 04, 2025 07:58

இனியாவது விழித்தெழ வேண்டும்...தீம்கா தவிர வேறு கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்...


D Natarajan
அக் 04, 2025 07:51

போராட்டம் நடத்தவேண்டும் . மேலும் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்து விட்டது. எனவே போராட்டம் கோவிந்தா


sankar
அக் 04, 2025 08:14

ஆர்ப்பாட்டத்துக்கு கிடைத்த வெற்றி வெற்றி வெற்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை