உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை பெசன்ட் நகரில் மறைந்த நடிகர் மனோஜ் உடல் தகனம்

சென்னை பெசன்ட் நகரில் மறைந்த நடிகர் மனோஜ் உடல் தகனம்

சென்னை: நேற்று சென்னையில் காலமான இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், 48, நேற்று காலமானார். சென்னை சேத்துப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தபோது, நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=360nqqkt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மனோஜின் உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு மனோஜ் மகள் இறுதிச் சடங்குகளை செய்தார். தொடர்ந்து, தகனம் செய்யப்பட்டது. இதில், மனோஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Iniya
மார் 26, 2025 19:15

இது எதிர்பாராத இளவயது மரணம்.


என்றும் இந்தியன்
மார் 26, 2025 17:26

பாரதி ராஜாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்


ulaganathan murugesan
மார் 26, 2025 16:14

ஒருத்தன் துக்கம் விசாரிக்க போனா கூட ஏண் இப்படி கதறுறீங்க. உங்க கடமை உணர்ச்சிக்கு முட்டு குடுப்பது அளவே இல்லையாடா? எப்படிடா 2026 லே ஜெயிப்பீங்க. உங்கள நம்பித்தா அமிக்ஷா வும் தமிழ்நாட்டில் ஜெயிப்போம்னு சொல்லியிருக்கார். அது சரி அதிமுகவுடன் கூட்டணினு வைத்தா நான் தலைவர் பதவியை ராஜினாமா பன்றேன்னு சொன்னுச்சே .


m.arunachalam
மார் 26, 2025 15:23

தற்போதைய பிரதமரின் தாயார் இறந்தபோது இவ்வளவு பரபரப்பு உண்டாகவில்லை .


மோகன்
மார் 26, 2025 15:05

ஒருவர் இறங்களுக்கு செல்வதில் தவறில்லை. ஆனால் முதல்வருக்கு சினிமா சம்பந்தமான விஷயங்களுக்கு அதிகமாக நேரம் செலவழிக்க முடிகிறது. முக்கிமாக சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை கவனிக்க நேரமில்லை. இரும்பு கரம் துருப்பிடித்துக்கொண்டு இருக்கிறது.


Rajathi Rajan
மார் 26, 2025 17:05

அண்ணாமலை ஏன் போனார்,


மோகன்
மார் 27, 2025 03:39

அண்ணாமலை என்ன முதல்வரா? என்ன பேசுறீங்க பாஸ்.


V Venkatachalam
மார் 26, 2025 14:56

வந்த வரை சரி.. அங்க போய் எடப்பாடி பழனிச்சாமிய பற்றி பேசாம விட்டா சரி. எடப்பாடிய பற்றி பேசுவதற்கு மட்டும் துண்டு சீட்டு வேணாம்..


எவர்கிங்
மார் 26, 2025 14:43

ஏதாவது கூட்டணி கணக்கு போட போயிருக்கலாம்


sundarsvpr
மார் 26, 2025 14:16

பாரதிராஜா மகன் என்பதால் ஸ்டாலின் வந்துள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை