உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் கிடந்த தங்கச்சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் : முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சாலையில் கிடந்த தங்கச்சங்கிலியை போலீசில் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர் : முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சாலையில் கிடந்த தங்கச்சங்கிலியை கண்டெடுத்த தூய்மைப் பணியாளர் ஒருவர் போலீசில் ஒப்படைத்தார். இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ' எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம் தான் என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு ' எனக்கூறியுள்ளார்.சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கிளாரா(38). இவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது தங்கச்சங்கிலி கீழே கிடப்பதை கண்டார். இதனை கண்டெடுத்த அவர், தனது கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதனை போலீசிலும் ஒப்படைத்தார். கிளாராவின் நேர்மையை போலீசார், சக ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர். பொது மக்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை நேர்மையோடு போலீசாரிடம் கிளாரா ஒப்படைத்த செய்தியை பார்த்து நெகிழ்ந்தேன். எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக மின்னிடும் கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும்! இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Padmasridharan
செப் 05, 2025 15:24

இந்த மாதிரி நேர்மையா இருக்கிறவங்க குடும்பத்துல ஒருத்தருக்கு காவல் துறையில் வேலை கொடுத்து லஞ்சம் வாங்கும் அரசதிகாரிகளை இறக்கி விடலாம் சாமி


Kumar Kumzi
செப் 04, 2025 21:40

நல்ல நேரம் கட்டுமரம் உபிஸ்களின் கண்ணில் படவில்லை.கடவுளின் கருணையால் நேர்மையான தூய்மை பணியாளரின் கண்ணில் பட்டது


ManiK
செப் 04, 2025 21:21

அந்த தங்க சங்கிலியின் உரிமையாளர் சோக்கர் பாபுவா இல்ல பிரியாவா?? அதுசரி லண்டன் போய் 7ஸ்டார் ஹோட்டல்ல இருந்தாலும் தலீவருக்கு திருவாண்மியூர் நினைப்புதான் போல. என்ன சர்வதேச நாடகமோ?!


Rajan A
செப் 04, 2025 21:07

கட்சி நிதி போச்சே


Mathivanan
செப் 04, 2025 20:58

இவ்வளவு செய்கிறவர், இங்கே கொள்ளையடிக்கும் நான் சொல்லல அவருடைய அமைச்சரே சொன்ன 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்களையும் சட்டத்தின் முன் ஒப்படைத்தால் நல்லா இருக்கும்.


Natarajan Ramanathan
செப் 04, 2025 20:55

இதுவே திமுகவினர் கைகளில் கிடைத்திருந்தால் சாலை விபத்தில் அடிபட்டு கிடந்தவரிடமே மோதிரம் திருடும் கும்பல்தானே ....


Anbuselvan
செப் 04, 2025 20:43

தமிழர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் இருப்பார்கள் என கூறி இருந்தால், அகில இந்திய அளவில் ஒரு போனஸ் மார்க் கூடுதலாக கிடைத்து இருக்குமே.


rajasekaran
செப் 04, 2025 20:11

இவர் இப்போது எங்கு இருக்கிறார். இங்கு நடந்த மிக சிறு விசயத்தை எப்படி சொல்கிறார். எல்லாமே டிராமாவா .


HoneyBee
செப் 04, 2025 20:08

சூப்பர் ஃபோட்டோ ஷூட்.


MARAN
செப் 04, 2025 19:35

கடலை திருடன், கடலை தோட்டத்தில் ஆயிரம் செடியில் ஒரு சாமானியன் ஒரு செடியில் கடலை திங்க பிடிங்கி விடுவான் அடியில் கடலை எடுக்க ,தோட்டக்காரன் கண்டுபிடித்து விடுவான், இதுவே திமுகவின் அடிமட்ட தொண்டன் முதல் மேல்மட்ட தலை வரை , திருடினால் செடி அப்படியே இருக்கும் அடியில் கடலை இருக்காது , அந்த அளவிற்கு கைதேர்ந்தவர்கள் , ஆற்றில் வெள்ளம் போனால் கூட நீருக்கு அடியில் மணல் திருடும் வல்லமை கொண்ட ஆட்சி தமிழ்நாட்டில். அதை யாராலும் நிரூபிக்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை