உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ

சென்னை: சேலத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற ரோடு ஷோவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஈரோட்டில் இன்று காலை நடந்த வேளாண் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தொடர்ந்து நாளை மேட்டூர் அணை திறப்புக்காக இன்று மாலை சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் வந்தார். வழியில் ஏராளமானோர் ஒன்று கூடி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து, அங்கு நடக்கும் ரோடு ஷோவை ஸ்டாலின் துவக்கினார். பெரும்பள்ளம் என்ற இடத்தில் இருந்து மேட்டூர் வரையிலான 11 கி.மீ., தூரத்துக்கு நடந்த இந்த ரோடு ஷோவில் வழிநெடுகிலும் கூடிய தி.மு.க., தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ