உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்தர்களுக்கு வசதிகள்: முதல்வர் விஜய் உத்தரவு

பக்தர்களுக்கு வசதிகள்: முதல்வர் விஜய் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, எவ்வித குறைபாடுமின்றி செய்து தர வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.கோவில் நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்த உயர்நிலை ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் நடந்தது.கூட்டத்தில், 'ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள், எந்தவித சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்து திரும்புவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, போதுமான எண்ணிக்கையில் கழிவறை அமைப்பதுடன், அவற்றை துாய்மையாக பராமரிக்க, போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும். கோடை காலம் மற்றும் விசேஷ நாட்களில், வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.'முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு, தரிசனத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில், தனி வழிகள் உருவாக்க வேண்டும். கோவில் வளாகங்களை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும்' என, முதல்வர் கூறியதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

பாரதி
ஜூலை 30, 2026 21:35

ஆன்மீகம் தெரியாத மக்குகள் அறநிலையத்துறைக்கு அதிகாரிகளாக இருந்து கொண்டு கோவில்களை நிர்வாகம் செய்ய முடியும் என்றால் சட்டம் தெரியாத மக்குகள் ஏன் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கக் கூடாது என்பதை மதிப்புக்குரிய நீதிபதிகள் தெளிவாக எங்களுக்கு புரியுமாறு விளக்க பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்


K Subramanian
ஜூலை 30, 2026 11:49

இவர் ஏன் திருப்பரங்குன்றம் பற்றி பேசுவதில்லை ?


SULLAN
ஜூலை 30, 2026 10:37

முதலில் அறநிலையத்துறை ஏன் ஏற்படுத்தப்பட்டது என்கிற வரலாறை ராமசாமி தெரிந்து கொள்ள வேண்டும். அறமில்லாத அறங்காவலர்களால் ஒரு சாராருக்கு பரிவட்டமும் மற்றொரு வகுப்பினருக்கு கோவிலில் நுழைய அனுமதி மறுப்பும் நடந்தது இதனை தடுத்து அனைத்து சமூகத்திக்குமான வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்கவே ஹிந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து ஹிந்து கோவில்களும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதே சுட்டு போட்ட பச்சை பொய். சமூகங்களால கட்டப்பட்ட கோவில்கள் இப்போதும் அந்தந்த சமூகங்களிடம்தான் இருக்கிறது மசூதி தேவாலயங்களை போல.. ஆனால் பழைய அரசு அதாவது மன்னராட்சி காலங்களில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கோவில்களை அறக்கட்டளை என்ற பெயரில் சில அயோத்தியர்கள் திருடிவிட கூடாதெனில் அவை அனைத்தையும் செய்யவல்லதரசு கையில்தான் இருக்க வேண்டும். கொஞ்சம் பேர் கோவில்களின் பின்னால் நாக்கை தொங்க போட்டு கொண்டு திரிவது பக்தியினால் அல்ல ..என்பதை பக்தர்களே அறிவார்கள்.


நிஜபக்தன்
ஜூலை 30, 2026 08:50

பக்தர்களை விசேஷ நாள்களில் வந்து பணம் கேட்டு பாடாய் படுத்த வேண்டாம்னு சொல்லுங்கள்


V RAMASWAMY
ஜூலை 30, 2026 08:29

முதலில் இந்த அறமில்லா அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து திருக்கோயில்களை விடுவியுங்கள், திருக்கோயில்கள் அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில் செயல்படட்டும். திருக்கோயில்களை அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தால், ஒரவஞ்சனையில்லாமல், எல்லா மத வழிபாட்டு தலங்களையும் அந்த துறை கட்டுப்பாட்டில் கொண்டுவாருங்கள். அந்தந்த வழிபாட்டு தளங்கள் அந்தந்த மதம் சார்ந்தவர்களால் தான் செயல்படவேண்டும் என்கிற நியதி வேண்டும்.


S Bala
ஜூலை 30, 2026 08:16

கோவில்கள் அனைத்திலும் முறையான கார் பார்க்கிங், குடி தண்ணீர், கழிவறை, ஒழுங்கான தரிசன வழி முறைகள், இவை இருந்து மிகவும் சுத்தமாகவும் இருந்தால் கோவில்களின் வருமானத்தை அதிகரிக்க வெளிநாட்டு பயணிகளுக்கு ஆன்மீக சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்து கொடுத்து தமிழகத்தின் பொருளாதாரத்தையே மேம்படுத்த முடியும்.


பிரேம்ஜி
ஜூலை 30, 2026 07:44

உத்தரவு மட்டுமே போடலாம்! வேலை நடக்கும் என்று உத்தரவாதம் கிடைக்குமா?


Svs Yaadum oore
ஜூலை 30, 2026 07:32

ஹிந்து அற நிலைய துறையில் வேலை பார்க்கும் பலர் மதம் மாற்றிகள்தான் ....அவர்களை வேலையே விட்டு நீக்க வேண்டும் ....


Sundar R
ஜூலை 30, 2026 07:27

தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கார் பள்ளிகளை மூடிவிட்டு மிலிட்டரி ஹோட்டல் நடத்துங்க. ஆமாம். தமிழகத்தில் உள்ள வித்யார்த்திகளும், வித்யார்த்தினிகளும் எதுக்கு பள்ளிக்கூடம் போறாங்க? ஏற்கனவே ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஸ்ரீ ரங்கம் S ரமேஷ் திருப்பரங்குன்றம் முருகர் கோயில் விஷயத்தால் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி FAIL ஆகி விட்டார். இன்றைய சூழ்நிலையில், ஹிந்து கோவில்கள் விஷயத்தில் ஆட்சியாளர்கள் பக்தர்களின் அலைகளோடு அலைகளாக போகணும். இல்லாவிட்டால், அது எதிரில் பூந்து அடித்துவிடும். ADMK & DMK ARE ALREADY DEAD. கேந்திரிய சிக்ஷா மந்திரி தர்மேந்திர பிரதானும் FAIL ஆகிவிட்டார். தர்மேந்திர பிரதானை பின்தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகனும் சர்க்கார் பள்ளிகளை எல்லாம் மிலிட்டரி ஹோட்டலாக மாற்றினால், இவ்வளவு நாட்களாக ஆட்சியில் இருந்த இவரும் FAIL ஆகிவிடுவார். காலையில் PRAYER ஆரம்பிக்கும் முன்பே ஒரு பஃளாஸ்க்கில் சிக்கன் சூப்பையும், இன்னொரு ப்ளாஸ்கில் மட்டன் சூப்பையும் கொடுங்கள். தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கார் பள்ளிகளும், தமிழக சர்க்காரும் நல்லா விளங்கும்.


ramani
ஜூலை 30, 2026 06:33

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் பார்ப்போம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை