உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றிய முதல்வர்: அண்ணாமலை தாக்கு

பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றிய முதல்வர்: அண்ணாமலை தாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அரசு டாக்டர்களை, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி உள்ளார்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d4k81gov&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது அறிக்கை: கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், உயிரிழந்த டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசாணை எண் 354 நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவ உட்கட்டமைப்புகள், போதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள், தமிழக அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகின்றன. இவற்றை வலியுறுத்தி, பல்வேறு அறப்போராட்டங்களில் அரசு டாக்டர்கள் ஈடுபட்ட பிறகும், அவர்கள் குரலுக்கு தி.மு.க., அரசு செவிசாய்க்கவில்லை. தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடன், டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க., அரசின் தொடர் புறக்கணிப்பால் விரக்தி அடைந்துள்ள டாக்டர்கள், முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்க, இன்று, மேட்டூரிலிருந்து சென்னை வரை, பாதயாத்திரை போராட்டம் தொடங்கியுள்ளனர். கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்திலும், தன்னலமின்றி பணியாற்றிய அரசு டாக்டர்களை, பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின், நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்னும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பது, துரதிருஷ்டவசமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக, அரசு டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 11, 2025 22:17

மோடி 15L கொடுக்க முடியும் என்றது , கோவை லூலு மால் ஒரு செங்கல் வைக்க முடியாது , அறிவாலய செங்கல் உறுவுவேன் என்று சொன்னது கடைசியில் உன் தலைவர் பதவியை உருவி விட்டார்கலே பாவம் ரொம்ப பேசினா இந்த நடு தெரு நிலை தான்


Krishna
ஜூன் 13, 2025 20:17

மோடி ஒருவருக்கு 15லக்சம் வீதம் கொடுப்பதற்கு உள்ள பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்க பட்டுள்ளது என்று தான் ஹிந்தியில் கூறினார். தமிழ்நாட்டை வட நாடுகளில் யாவரும் பேசுவது இல்லை. அவர்களுக்கு ஹிந்தி தெரியும்.


Narayanan Muthu
ஜூன் 11, 2025 20:53

அண்ணாமலை அப்படியே திரும்பி மோடியை பாருங்கள். பிறகு பேசலாம்


Ramesh Sargam
ஜூன் 11, 2025 20:43

பொய்யான வாக்குறுதிகள் என்று தெரிந்திருந்தும் ஏன் மக்கள் மீண்டும் மீண்டும் அதை நம்பி திமுகவுக்கே வாக்களிக்கிறார்கள்? ஏன் என்றால், திமுக தேர்தல் நேரத்தில் கடைசியாக கொடுக்கும் பல இலவசங்களுக்கு ஏமாந்து இப்படி தங்கள் வாக்குகளை திமுகவுக்கு போட்டுவிடுகிறார்கள். முதலில் மக்கள் திருந்தவேண்டும்.


J.Isaac
ஜூன் 12, 2025 09:52

தினமும் மீடியாவில் பேட்டி கொடுத்து என்ன பிரயோஷனம். இதை கேட்பது வெட்டியாக இருக்கும் ஒரு சில ஆயிரங்கள்.


என்றும் இந்தியன்
ஜூன் 11, 2025 17:37

நான் நிலவுக்கு பறந்து போவேன் என்று சொல்பவர்களும் ஸ்டாலினும் ஒரே ரகம் சும்மா புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுபவர்கள். இது ஏன் மக்களுக்கு புரியவில்லை, அவர்கள் டாஸ்மாக் சரக்கில் மிதப்பதினால் அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை அந்த மிதப்பிலேயே வசிப்பதால்


J.Isaac
ஜூன் 12, 2025 09:55

முருக, அய்யப்ப பக்தர்கள் டாஸ்மாக் செல்லவில்லை என்றால் அதை எளிதாக மூடிவிடலாம் அல்லவா? வெட்டியாக பேசுவதை விட்டு ஆக்கப்பூர்வமான காரியங்கள் செய்யவும்


spr
ஜூன் 11, 2025 17:08

இவருக்கு வாய்ப்புத் தரவே DMK அரசு பலதரப்பட்ட ஊழல்களைக் குற்றங்களையும் செய்திருக்கிறது. குறிப்பாக பொன்முடி, செந்தில் போன்ற அமைச்சர்களின் விவகாரம் போதை மருந்து விற்ற சாதிக் போன்ற வழக்குகள் மத்திய அரசால் விசாரிக்கப்பட்டும் இன்றுவரை அவர்கள் தண்டிக்கப்படவில்லை பட்டியலிட்டால் மாளாது. ஆனால் திரு அண்ணாமலை அது குறித்தெல்லாம் பேசுவதேயில்லை வெற்றுக் கூக்குரல் இவரே பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றியவர்


என்றும் இந்தியன்
ஜூன் 11, 2025 16:46

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த திருட்டு திராவிட அறிவிலி மடியில் கட்சியின் உண்மையான கட்சி சித்தாந்தம் "அவன் பொய் சொல்கின்றான் என்று இவர்கள் பொய் மூட்டையை அவிழ்த்து விடுவது தான்"


Padmasridharan
ஜூன் 11, 2025 16:01

ஏமார்றதுக்கு குழந்தைங்களா சாமி அவங்க. வாக்குறுதி கொடுத்துட்டா யாருக்கு வேனாலும் போட்டுருவாங்களா.. மருத்துவர்கள் படிச்சவங்கதானே...


அப்பாவி
ஜூன் 11, 2025 15:30

பாஞ்சிலட்சம், அல்லாருக்கும் வூடு,ரெண்டுகோடி வேலை குடுத்தாங்களே கோவாலு.


vivek
ஜூன் 11, 2025 16:27

உனக்கு முத்திடிச்சி அப்பாவி


Prabakaran J
ஜூன் 11, 2025 14:21

Minority govt staffs (Drs), DMK won't consider, waste of time Annamalai ji.


புதிய வீடியோ