உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்; அண்ணாமலை திட்டவட்டம்

முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்; அண்ணாமலை திட்டவட்டம்

கோவை: ''தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே அறிவித்து விட்டார்; அதில், எந்த குழப்பமும் இல்லை,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.கோவையில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், சிலபஸ் கேள்விகள் கேட்டால் மட்டுமே மாணவன் திறமையை பரிசோதித்து பார்க்க முடியும். சிலபஸ் இல்லாமல் தன்னிச்சையாக கேள்விகள் கேட்டிருப்பது தவறு.சில மையங்களில் தேர்வு முடிந்த பின், வினாத்தாள்கள் பாதுகாக்கப்பட்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 'சீல்' பிரிக்கப்பட்டு உள்ளது; முழுமையாக 'சீல்' வைக்கவில்லை. தேர்வு சரியாக நடைபெறவில்லை; வினாத்தாள்களை சரியாக பாதுகாக்கவில்லை. கோவில் நிலங்கள் மீட்பு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒரு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. தி.மு.க., மீது மக்கள் மன்றத்தில் கோபம் இருக்கிறது; மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி முழுமை பெற வேண்டும். தி.மு.க., கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேற வேண்டும். தேர்தலுக்கான சூடு இன்னும் ஆரம்பிக்கவில்லை. அத்தகைய சூடு வரும்போது, தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையான வடிவம் பெறும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், தொழில்துறை வளர்ச்சியில் தமிழகத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகமாகவும், பிறப்பு விகிதம் குறைந்தும் வருகிறது. இது, அபாயகரமான சூழ்நிலை. ஒருபுறம் வேலைக்கு ஆட்கள் குறைவாக இருக்கின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருவோர் வேலைகளில் அதிகமாக உள்ளனர். தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகமாகவும், பிறப்பு விகிதம் குறைந்தும் வருகிறது. இது, அபாயகரமான சூழ்நிலை. ஒருபுறம் வேலைக்கு ஆட்கள் குறைவாக இருக்கின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருவோர் வேலைகளில் அதிகமாக உள்ளனர்.எதிர்காலத்தில் வேலை இருக்கும்; ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்கிற சூழல் ஏற்படும். மாநிலம் வளர, வளர இதுபோன்ற பிரச்னைகள் வரும். நமது நாட்டின் பொருளாதாரம் இன்னும் 10 ஆண்டுகளில் மாற ஆரம்பிக்கும்; அதற்கு தயாராக வேண்டும். முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே அறிவித்து விட்டார்; அதில், எந்த குழப்பமும் இல்லை. எதிர்க்கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் நுாறு நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது உண்மை. ஈரோடு மாவட்டத்தில் இரண்டு ஊராட்சிகளில் முறைகேடு நடந்திருப்பதை ஆவணப்படுத்தி, மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

சிறப்பு விசாரணை குழு விசாரிக்கணும்

''மதுரையில் சொத்து வரி முறைகேடு கண்டறியப்பட்டது போல், சிறப்பு விசாரணை குழு நியமித்து, மாநிலம் முழுவதும் விசாரிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினால், தி.மு.க., அமைச்சரவையில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் இருப்போர் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமா என்பதை, அவரது மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்,'' என அண்ணாமலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

ராஜா
ஜூலை 24, 2025 14:59

நினைவுகள் மட்டுமே வாழ்க்கை என்று எண்ணி வாழும் வாழ்க்கை போதும் கனவு காண வேண்டாம்.


Barakat Ali
ஜூலை 24, 2025 11:54

திமுகவுக்கு அல்லு விட்டா அது நியாயம் ..... திமுக சொம்புகள் ஏன் பதறுதுங்க ????


pmsamy
ஜூலை 24, 2025 11:36

பாஜகவுக்கு தமிழ்நாட்டுக்கு மேல அவ்வளவு பயம் நல்லது தான்


bharathi
ஜூலை 24, 2025 10:23

Annamalai ji !! paruthimoottai godownlaye irukkalam...being a bjp member i can't vote for ADMK alliance


தமிழ்வேள்
ஜூலை 24, 2025 10:06

திமுக அதிமுக எதுவாக இருந்தாலும் ஹிந்து விரோதிகள் மற்றும் ஆப்ரஹாமிய அடிமைகள் மட்டுமே.. கிறிஸ்தவ இஸ்லாமிய ஓட்டுக்காக ஹிந்து ஜனங்களை என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்கள்


Haja Kuthubdeen
ஜூலை 24, 2025 09:08

தொனி மாறுதே என்ன விசயம்...டெல்லி உத்தரவா!!!


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 24, 2025 08:50

ஒரே ஒருமுறை எம்ஜி ஆர் செய்த நட்புக்காக ..கெஞ்சலுக்காக தவறினால் கருணா குடும்பம் கட்சியை கைப்பற்றி ..ஆட்சியை கைப்பற்றி பரம்பரை ஆட்சி நடத்துகிறது .. இப்போதைக்கு மாற்றம் நிகழவில்லை யானால் .. நமது அடையாலத்தை அழித்து விடுவார்கள் .. வரலாற்றை திரித்து விடுவார்கள் ..


SIVA
ஜூலை 24, 2025 08:48

சில பேருக்கு அமிட்ஷா கூட்டணி ஆட்சி என்று சொன்னது மட்டும் புரியுது சில பேருக்கு எடப்பாடி தான் முதல்வர் , அவர் தான் தமிழகத்தில் இந்த கூட்டணிக்கு தலைவர் என்று சொன்னது புரியுது ....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 24, 2025 08:17

தற்போது முழுநேர அரசியல்வியாதியா இல்லை முழுநேர .. ???


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 24, 2025 08:45

ஹா ஹா ஹா


vivek
ஜூலை 24, 2025 20:54

முழு நேர கொத்தடிமை சொம்பு சிகண்டி...நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 24, 2025 08:16

இவருக்கு இருக்கும் ரெட்டை நாக்கு போல யாருக்குமே இருக்காது போல .... தற்குறி என்று ஏசிவிட்டு அந்த ஆளையே முதல்வர் வேட்பாளர் என்று எப்படி கூசாமல் இவரால் பேசமுடிகிறது ?? பதவி படுத்தும் பாடு ... கட்சிப்பதவி கொடுத்த வாய்ப்பில் சேர்த்த காசை பத்திரப்படுத்திக்கொள்ள போடும் கூழை கும்பிடு என்றே இதை மக்கள் கருதுவார்கள் ....


பாமரன்
ஜூலை 24, 2025 08:25

ஐ ஆம் பாவம்


Mettai* Tamil
ஜூலை 24, 2025 10:16

பத்து நாக்கு இருப்பதைவிட ரெட்டை நாக்கு எவ்வளவோ தேவல ..வைகோ அவர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பற்றி, அப்புறம் நம்ம கருணாநிதி காங்கிரஸ் பற்றியும் பேசியதை, ஏசியதை, வீசியதை திரும்ப ஒரு தடவை கேட்டுப்பாருங்கள்.. இதையும் ஊழல் பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள் கூழை கும்பிடு, கோழை கும்பிடு என்று கருதுவதில்லை ....


Anonymous
ஜூலை 24, 2025 10:30

உனக்கு ஏன் இப்படி எரியுது? இப்படி புலம்பாட்டி பேட்டா காசு வராதா?


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 24, 2025 10:30

mettai .... அப்போ இவனும் அதே சாக்கடை ... அதே குட்டை .....அதே மட்டை ....தான் என்பதையாவது ஒப்புக்கொள்ளுங்கள்


guna
ஜூலை 24, 2025 11:53

முதல்ல ஒரு நல்ல போலி பேரு வை....


ஆரூர் ரங்
ஜூலை 24, 2025 12:23

பெண் ஹிட்லர் என தானே ஏசிய அதே இந்திராவை நேருவின் மகளே வருக என்று கூட்டணி வைத்தது கருணாநிதி.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 24, 2025 13:11

ஒப்பீடு எப்போதும் சமமான விதத்தில் இருப்பது தான் நியாயம் ... ஒரு மிசா சட்டத்தை எதிர்த்து எப்பேர்ப்பட்ட அடக்குமுறைக்கு எதிராக தேசிய அளவில் அரசியல் களமாடியதை ... ஊழல் வழக்கு தலைக்கு மேல் தூங்கும்போது மிரட்டி கைகளை முறுக்கி ......


புதிய வீடியோ