உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.,க்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

எம்.பி.,க்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், இன்று இரவு 7:00 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது.இதில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கலந்து கொள்ள வேண்டும் என, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 25-ம் தேதி முதல், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது. ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், வக்பு சட்ட திருத்தம் தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது. எந்தெந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது குறித்து, இன்று நடக்கும் எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்து வலியுறுத்தி பேச அறிவுறுத்தப்படுவதோடு, சில விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

karupanasamy
நவ 22, 2024 14:17

பாராளுமன்றத்துல இன்பநிதிய புகழ்ந்து பேச சொல்லுவாரு.


G Mahalingam
நவ 22, 2024 12:03

கேண்டினில் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று சொல்வதற்கு கூட்டம்


sridhar
நவ 22, 2024 10:47

என்ன ஆலோசனை , கேன்டீனில் சிக்கன் சாப்பிடவேண்டுமா , மட்டன் சாப்பிடவேண்டுமா என்றா .


Anand
நவ 22, 2024 10:33

கெட்ட குருவிற்கு கேடுகெட்ட சிஷ்யர்கள்........


raja
நவ 22, 2024 09:27

உறுப்பினர்களுக்கு தொகுதி வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் நிதியிலிருந்து தன் குடும்பத்துக்கு நிதி ஒதுக்க சொல்லுவாரு..


Rpalnivelu
நவ 22, 2024 08:49

போண்டா பஜ்ஜி விலையேற்றத்திற்கு பாராளுமன்ற கான்டீன் முன் போராட்டம் நடத்த வேண்டி ஆலோசனை


Barakat Ali
நவ 22, 2024 08:34

ஓட்டு போட்ட சனங்களுக்கு எப்படியெல்லாம் சேவை பண்ணலாம் ன்னு விவாதமா ????


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 22, 2024 09:30

அப்படி திமுகவின் கொத்தடிமைகள் கூட நம்ப வாய்ப்பில்லை ..........


Barakat Ali
நவ 22, 2024 08:31

அதானி வாதொறந்தா எசகுபிசகா சிக்க வாய்ப்பு .......


Svs Yaadum oore
நவ 22, 2024 07:49

தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், இன்று இரவு 7:00 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளதாம் .....ராத்திரி 7 மணிக்கு கூடி சுட சுட சுக்கா பிரியாணி தின்னுட்டு தூங்க போவானுங்களா?? ....


xyzabc
நவ 22, 2024 07:44

பார்லிமென்ட் கேன்டீனில் எத்தனை வடை பஜ்ஜி சாப்பிடீர்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை