உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு ரூ.7 கோடி செலவு; சந்தேகம் கிளப்பும் துபாய் பயணச்செலவு

முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு ரூ.7 கோடி செலவு; சந்தேகம் கிளப்பும் துபாய் பயணச்செலவு

சென்னை: தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவுகளுக்கு ரூ.7.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ., மூலம் தெரிய வந்துள்ளது. இதில், துபாய் பயணச் செலவு குறித்த விபரங்கள் தெரிவிக்காததால் சந்தேகம் எழுந்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றது முதல் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட காரணங்களுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். அந்த வகையில், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா சென்று வந்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=an9r6w5i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த விபரங்களை சமூக ஆர்வலர் காசிமயன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதன்படி, 2023ம் ஆண்டில் சிங்கப்பூர் பயணத்திற்கு ரூ.26.84 லட்சமும், ஜப்பான் பயணத்திற்கு ரூ.88.06 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, 2024ம் ஆண்டில் ஸ்பெயினுக்கு செல்ல ரூ.3.98 கோடியும் அமெரிக்கா செல்ல ரூ.1.99 கோடியும் செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதில், 2022ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்ற போது அரசு செலவிடப்பட்ட தொகை குறித்த விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்களின் போது, அவரது குடும்பத்தினரும் செல்வதற்கு அரசு பணத்தை பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு, முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் கட்சியினரின் பயணச் செலவுகளை தி.மு.க., பொறுப்பேற்றுக் கொண்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருந்தார். ஆனால், ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவலில் துபாய் செலவு குறித்த விபரங்களும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரின் பயணச் செலவுகளை தி.மு.க., ஏற்றுக் கொண்டதா? என்பது பற்றிய தகவலும் இடம்பெறாதது, கேள்விகளை எழச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

S.V.Srinivasan
மார் 27, 2025 16:06

சைக்கிள் துபாயில் வாங்கினீங்களா முக்கியமந்திரி அவர்களே.


Naga Subramanian
மார் 27, 2025 06:58

இந்த விபரத்தை அறிந்தவர் வீடு எப்பொழுது "மூன்றாவது" வேங்கை வயலாகுமோ? அடுத்த முறை மீண்டும் பரிசை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு கப்சிப்புன்னு இருப்பதை விட்டு, ஏன் இந்த அட்ரோஸிட்டி. பாவம் என்ன செய்வது. விதி வலியது.


M Ramachandran
மார் 25, 2025 18:16

சிறந்த காமடி. மொத்தமா 7 கோடி நம்ப முடியுதா மக்களெ. சைய்யகில் ஒட்டி சர்க்கஸ் காட்டியது போல் சர்க்கஸ் பஃவூன் செய்கை.


VARUN
மார் 24, 2025 14:23

அமெரிக்க போய்வந்த செலவு எத்தனை கோடி ???


sankar
மார் 22, 2025 21:04

Mr.Bean?


TRE
மார் 22, 2025 19:25

ஸ்டாலின் தமிழ் நாடோட டம்மி


Dharmavaan
மார் 22, 2025 18:30

இதெல்லாம் தடுப்பது எப்படி


xyzabc
மார் 22, 2025 12:07

பொறாமையா இருக்கு. ஒரு டிரில்லியன் டாலர்ஸ் பொருளாதாரம் பத்தி யாரு சொன்னாங்க? அடுத்த தேர்தலில் பேசலாம்.


xyzabc
மார் 22, 2025 12:00

இது வரை எந்த வெள்ளை அறிக்கையும் வெளி வரவில்லை. நிறைய பொய்யிகள கேட்டச்சு. தட்டி கேட்க யாருமே இல்ல.


rajeswaran durairaju
மார் 22, 2025 10:32

வேண்டாம். எதையும் சிறப்பாக சொல்வதற்கு தாய்மொழியே சிறந்து


முக்கிய வீடியோ