உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: இ.பி.எஸ்.,

முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' முதல்வர் ஸ்டாலினின் -தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்'', என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார்.அவரது குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7ztx3mpg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலினின் -தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. 'SORRY' என்பது தான் உங்கள் பதிலா? அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, 'தைரியமாக இருங்கள்' என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த முதல்வருக்கு?முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? 'என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்' என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ? வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக., சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு வழக்குப்பதிவு , கைது எல்லாம் நடக்கிறது.உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழக மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?'நடக்கக் கூடாதது நடந்துடுச்சு' என்று சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25வது முறை!இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி! இவ்வாறு அந்த அறிக்கையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.நீதிமன்றம் மூலம் நடவடிக்கைசென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: போலீசார் அஜித்தை விசாரனைக்கு அழைத்து சென்று கடினமாக தாக்கியதால் அவர் மரணம் அடைத்தாக தகவல்கள் வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பான செயல்பாட்டை குறித்து நீதிமன்றமும் விமர்சனம் செய்துள்ளது. இச்சம்பவம் கண்டனத்துக்குரியது. போலீசார் ஒருவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் முறையாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து அதன் பின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அஜித் குமார் சம்பவத்தில் எதுவும் அவர்கள் பின்பற்றவில்லை. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதன் காரணமாக தான் காயங்கள் நடந்ததுள்ளதாக தெரிகிறது. எனவே இது ஒரு கொலையாக தான் பார்க்க வேண்டும். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 25 'லாக்கப் டெத்', நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இல்லை. இதன் முழு உண்மை வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 02, 2025 06:33

விளம்பர விடியல் அரசு மீது எதிர் கட்சி எடப்பாடியின் பேச்சுகள் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மோசமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு விடியலை அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் செய்ய வேண்டும், தினம்தினம் விடியலே வீட்டுக்கு போ, ராஜினாமா செய் என்று தமிழ்நாடு முழுவதும் நடு நடுங்க வைக்கும் படி இருக்கனும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் என்னென்ன செய்திருக்கும் என்று யோசித்து அதை விட அதிகமாக செய்ய வேண்டும்


Kasimani Baskaran
ஜூலை 02, 2025 04:06

ஒரு ஊராட்சித்தலைவரின் கணவனுக்கு இவ்வளவு செல்வாக்கா என்று மலைக்க வேண்டியுள்ளது. அப்ப அந்த சாருக்கு...


raja
ஜூலை 02, 2025 02:28

தமிழர்களுக்கு திராவிடர்கள் என்று ஸ்டிக்கர் ஓட்டும் இந்த ஓங்கோல் கோவால் புரா கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டுவோம் தமிழா...


Pushpalatha
ஜூலை 02, 2025 02:23

இறந்தவர் என் மகன் அஜீத் இல்லை என்று அவருடைய தாயிடம் ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிவிட்டால் போதுமே


மூர்க்கன்
ஜூலை 03, 2025 13:47

புளிய மரத்து அடியிலே???


varatha rajan
ஜூலை 02, 2025 00:35

ஐயா நீங்கள் x cm.... நீங்கள் Tuticorin துப்பாக்கி சூட்டில் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.. எது பேச வேண்டும் என்றாலும் ஒரு தகுதி வேண்டும் உங்களுக்கு இருக்கிறது என்று கண்ணாடி முன் நின்று பாருங்கள் எடப்பாரியாரே


திகழ்ஓவியன்
ஜூலை 01, 2025 23:17

யார் வேண்டுமானாலும், கண்டனம் தெரிவிக்கலாம். அது நியாயமானதும் கூட. ஆனால், பழனிச்சாமி அவர்களுக்கு அந்தத் தகுதியோ, அருகதையோ முற்றிலும் கிடையாது. போலீசார் லட்சக்கணக்கான மக்களை கைது செய்கிறார்கள், அதில் 10 பேர் இறந்தால் அது இயற்கையானது. அதை ஏன் பெரிய விஷயமாக்குகிறீர்கள்? உ.பி.யில் எத்தனை பேர் இறக்கிறார்கள் தெரியுமா? இதைப் பழனிசாமி அவர்கள் சொன்னாரா, அவரது முதலவர் பதவிகாலத்தில்?


Vel1954 Palani
ஜூலை 02, 2025 18:57

லாக்கப் டெத்துக்கு நீங்க வக்காலத்து வாங்குறீங்களா ? உங்க வீட்டில் இப்படி நடந்திருந்தால் இப்படி பேசுவீங்களா?


Prem
ஜூலை 01, 2025 21:43

தூத்துக்குடி துப்பாக்கி, TV பாருங்க


முருகன்
ஜூலை 01, 2025 21:27

குற்றம் செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் பேசியதால் இவருக்கு அரசியல் செய்ய வழியில்லை அது தான் சினிமா டயலாக் விடுகிறார்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 01, 2025 22:31

என்ன முருகேசா.....லவகமா மறந்துட்டீராக்கும்.....அரசியல் செய்யாம அவியலா செய்வாங்கன்னு சொன்னது யாரு நம்மாளு தேன்.....


Kjp
ஜூலை 01, 2025 23:00

ஐயோ பாவம் முருகன் கருத்தெல்லாம் இன்னுமா நம்புகிறார்கள்


மூர்க்கன்
ஜூலை 03, 2025 13:54

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் ?? யார் வேண்டும்?? யார் வேண்டவே வேண்டாம் என்பதில்?? இங்கே சங்கிகளின் வருத்தமே இறந்து போனவர் மீதோ? அவர் குடும்பத்தின் மீதோ அல்ல?? இங்கே முதல்வரே நேரிடையாக சரி செய்கிறாரே?? அரசியல் பிழைக்க வழியில்லாமல் செய்து விட்டாரே என்பதுதான்?? இறந்தவர் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து காவல் துறையினர் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தது சிறப்பு. சாத்தான்குளம் விஷயத்தில் ஆளும்கட்சி குற்றம் செய்தவர்களை காக்க முனைந்ததும் ரங்கராஜ் பாண்டேய் , மாரிதாஸ் எல்லாம் லாக்கப் டெத் சாதாரணமானது அதற்கெல்லாம் தண்டனை வழங்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள் என்பதும் இவ்விடத்தில் நினைவு கூற தக்கது .


Ramesh Sargam
ஜூலை 01, 2025 21:23

அது உரையாடல் இல்லை. அது பேரம் பேசுதல். இறந்தவரின் குடும்பத்தினரின் வாயை அடைக்க பேரம் பேசி இருக்கிறார் முதல்வர். கொஞ்சம்கூட கண்ணியமில்லாத முதல்வர்.


திகழ்ஓவியன்
ஜூலை 01, 2025 22:56

இந்த வீராணம் 13 பேர் வேதாந்தாவிற்காக சுட்டு கொள்ள பட்டார்களே அதை டிவி யில் பார்த்து தான் தெருந்து கொண்டேன் என்று சொன்ன இவர் பேச்சு தமாஷ் தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை