உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்தார்; மறுப்பாரா ஸ்டாலின்? அண்ணாமலை கேள்வி

முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்தார்; மறுப்பாரா ஸ்டாலின்? அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த வாரம் கூட தமிழக அரசு அதிகாரிகள், அதானி நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w6dji0k9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: கோர்ட் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கணக்கு வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களையும் சி.ஏ.ஜி., அமைப்புக்கு கொடுக்கலை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். எதுக்காக இந்து சமய அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்பதற்கு இது உதாரணமாகும். 4 லட்சம் ஏக்கருக்கு மேலே இந்து அறநிலையத்துறையிடம் இருக்கு. ஆயிரமாயிரம் கோவில்கள் இருக்கு. வருமானம் இருக்கு. பணம் எப்படி வருது, பணம் எப்படி செலவாகுது என்பதை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடு இருக்கு. தமிழக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடுக்கப் போகிறோம். அதளபாதளத்தில் தமிழக அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருப்பதை இந்த தணிக்கை உறுதி செய்துள்ளது. அடுத்த தணிக்கை நடத்த 4 ஆண்டுகளாகும். ஒரு இன்டிகேட்டர் நல்லா இருக்குனா, 99 இன்டிகேட்டர் மோசமாக இருக்கு. ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டின் நிலை குறித்து பத்திரிக்கையாளர்கள் எடுத்துக் காட்ட வேண்டும். அதானிக்கும், தி.மு.க., அரசு ஒப்பந்தம் கொடுத்திருப்பதை தொடர்ந்து பேசி வருகிறோம். அமைச்சர் ஒருவர் அது அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்தது என்கிறார். ஆனால், தி.மு.க., ஆட்சியில் கமுதி சோலார் பவர் பிளான்ட் கொடுத்து இருக்கிறார்கள். முதல்வர் நேற்று சட்டசபையில் பேசும் போது, அதானியை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் அபாண்ட குற்றச்சாட்டை சுமத்துவதாகக் கூறினார். ஆனால், எங்கேயும் முதல்வர் அதானியை சந்தித்தார் என்று நாங்கள் சொல்லவே இல்லை. அதானியை சந்திப்பது குற்றமே இல்லை. முதல்வரின் மருமகனும் அதானியும் சந்திச்சிருக்காங்க. உங்கள் சார்பில் அரசு அதிகாரிகளும், அதானி நிறுவன அதிகாரிகளை சந்தித்துள்ளார்கள். போன வாரமும் சந்திப்பு நடந்துள்ளது. உங்கள் மருமகன் சந்திப்பது நீங்கள் சந்தித்ததைப் போலத் தானே. உங்கள் மருமகன் சந்திக்கவே இல்லை என்று சட்டசபையில் கூற முடியுமா. அப்படி கூறுங்கள், நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம். அதானியை சந்திக்கவில்லை என்று மடை மாற்றுவதை அவர் கைவிட வேண்டும். பா.ஜ.,வினர் விவசாய நண்பர்களை சந்தித்து பேசியுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும். நாளை காலை டில்லியில் நானும், அமைச்சர் எல்.முருகனும், மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கையில் முன்பே கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். இந்த சுரங்கத்திற்காக, தமிழக அரசு சார்பில் எந்த தரவுகளும் கொடுக்கவில்லை என்று கூற முடியுமா? விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி எப்போதும் கேட்பார், இந்த முறையும் அது நடக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

MADHAVAN
டிச 12, 2024 11:52

பிரச்னை னு வந்துருச்சுதானே?


ஆரூர் ரங்
டிச 12, 2024 11:10

ஸ்டாலின் உண்மையை ஒப்புக்கொள்ளலாம். ராஜிவ் கொலைவழக்கில் தண்டனை பெற்ற பயங்கரவாதியை அழைத்து சந்தித்து விருந்து வைத்ததை விட பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் பாரத முதலீட்டாளரை சந்திப்பது எவ்வளவோ மேல். வெட்கப்பட ஒன்றுமில்லை. எல்லா காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கும் அதானி குழும முதலீடுகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன.


venugopal s
டிச 12, 2024 10:43

உங்கள் தலைவர் பிரதமர் மோடி அவர்கள் கூடத்தான் அதானியை பலதடவை சந்தித்து உள்ளார். அதனால் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஒப்புக் கொள்வாரா அண்ணாமலை?


ghee
டிச 12, 2024 16:47

மூஞ்சிகு நேர கேட்ட அதுக்கு பதில் சொல்லு venugopal.....


mthundu
டிச 12, 2024 06:50

Scientific corruption


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 22:50

சபரீசன் அதானியைச் சந்தித்ததாகச் சொல்கிறார் அண்ணாமலை .... சபரீசன் மின்வாரிய அதிகாரி இல்லை ..... மின்துறை அமைச்சருமல்லர் .... சந்தித்தது உண்மையென்றால் அவர் எப்படி மின்வாரியத்தின் சார்பாக அதானியைச் சந்திக்கலாம் ???? அது அதிகார துஷ்பிரயோகம் என்னும் குற்றச்சாட்டின்கீழ் வரும் ....சிபிஐ உங்கள் வசம் உள்ளது ..... அமலாக்கத்துறை உங்கள் வசமுள்ளது ..... சந்தித்ததற்கான ஆதாரமும் உங்கள் வசமுள்ளது என்றால் இதை வைத்தே வழக்குப்பதிவு செய்யலாமே ???? முதல்வரோ, அவரது அமைச்சர்களோ எந்த அளவுக்குப் பொய் சொல்கிறார் / பொய் சொல்கிறார்கள் என்பதை வைத்து ஏன் ரெஸ்பாண்ட் பண்ணுகிறீர்கள் ????


Anvar
டிச 12, 2024 07:01

உங்களுக்கு அரசாங்க விதிகள் தெரியுமா ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசு பணி செய்யும்போல் அவர்கள் குடும்பதில் உள்ள அனைவருமே அரசாங்க பணியில் இணைப்பிலுஅன்சர்ஸ் கழக இருப்பார் அதனால் அவர்கள் யாவருமே அந்த விதிகளின் படி ஒரு முதலமைச்சரின் உறவினர் என்ற அதிகாரங்களை பயன்படுத்தி அரசாங்க வேலைகளை செய்ய முடியும் சபரீசன் என்ன தொழில் அதிபரான அடானியேய் சந்திக்க ஏன் டுமீல் நாட்டு மக்கள் முட்டாள்களாகேவே இருக்கிறீர்கள்


RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 09:52

நண்பர் அன்வர் எழுதிய கருத்து அவருக்கே புரிந்திருக்குமா என்பது தான் நமது சந்தேகம்.. அரசு விதிமுறைகள் பற்றி அறிந்ததிருப்பதால் தான் இப்படி எழுதியிருக்கிறேன் ....


Barakat Ali
டிச 11, 2024 22:29

சட்டசபையில் கூற முடியுமா. அப்படி கூறுங்கள், நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம் என்கிறார் அண்ணாமலை .......... நானோ, எனது அமைச்சரில் யாராவதோ , அமைச்சர்களின் கீழுள்ள அதிகாரிகளோ யாருமே அதனியையோ, அவரது நிறுவனத்தின் அதிகாரிகளில் யாரையுமே எங்குமே சந்திக்கவில்லை என்று சட்டசபையில் முதல்வர் சொல்லவேண்டும் .... சட்டசபையில் சொல்வது அவைக்குறிப்பில் இடம்பெறும் ..... அவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏ க்களும் சாட்சிகளாக இருப்பதால் சபாநாயகர் நினைத்தால் கூட அவைக்குறிப்பில் இருந்து தன்னிச்சையாக நீக்க முடியாது ..... சட்டசபையில் சொன்னதற்கு அதுவே ஆதாரமாகும் ..... வேறு இடத்தில் சொல்லிவிட்டு, பிற்பாடு சொல்லவில்லை என்று மறுக்க முடியும் ....


vbs manian
டிச 11, 2024 21:25

பார்லிமென்ட் வளாகத்தில் அடானிக்கு எதிரான போராட்டத்தில் கழகம் பங்கேற்றது. நிஜமாகவே அதானி எதிர்ப்பு என்றால் பரந்தூர் விமான நிலைய திட்டத்திலிருந்து அதானி குழுமத்தை வெளியேற்றுவார்களா???


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 21:08

மோடி மஸ்தான் கீரிப்பிள்ளை பாம்பு சண்டையை நடக்கவே விடமாட்டான். அப்படி இவர் ஆதாரம் வெளியிடவே மாட்டார் , PUSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS லைப் TIME.


சரவணன்,துறையூர்
டிச 11, 2024 21:35

மறுபடியுமா???


Kumar Kumzi
டிச 11, 2024 20:59

கட்டிங் கமிஷன் அடிச்சி மருமகனும் நல்லா இருக்கணும்னு தானே ஓங்கோல் மஹாராசாவும் விரும்புவார்


S S
டிச 11, 2024 20:53

அது சந்தித்தாரா இல்லையா என்பது பிரச்சனை அல்ல. அவரிடம் லஞ்சம் பெறப்பட்டதா என்பதே கேள்வி. அது பற்றி அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை?


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
டிச 11, 2024 21:32

மொதல்ல சந்திக்கவே இல்லைன்னு சாதிக்கிறது இப்போது குட்டு வெளிப்பட்டவுடன் சந்திச்சது பிரச்சினையில்லை லஞ்சம் பெறப்பட்டதா அப்படின்னு கேட்கிறது அதுக்கும் ஆதாரம் கொடுத்தா அது லஞ்சப் பணமே அல்ல கைமாத்தா வாங்குனதுன்னு சொல்லுவீங்களா... நீங்க உருட்டுற உருட்டுல புதுக்கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சு....


RAMAKRISHNAN NATESAN
டிச 11, 2024 22:53

முட்டாள்தனமான வாதம் ......


சமீபத்திய செய்தி