உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமைச்செயலர், ஏடிஜிபி டிச., 17ல் ஆஜராக வேண்டும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை உத்தரவு

தலைமைச்செயலர், ஏடிஜிபி டிச., 17ல் ஆஜராக வேண்டும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. ஐகோர்ட் மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=veyo4h4g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், '' மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை?'' என, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், வீரகதிரவன், விகாஸ் சிங் ஆகியோர் ஆஜரானார்கள்.அப்போது தமிழக அரசு தரப்பில்,'மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் மலை, திரி, எண்ணெய் எங்கும் போய் விடாது. நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்கே மேல்முறையீடு. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோயில்களில் இதைச் செய்யக்கூடாது. இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. நீதிமன்றம் கூட தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். இது குறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்னை வந்தால் நீதிமன்றத்தை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் அதன் பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என வாதிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மதியம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளார். மதுரை போலீஸ் துணை கமிஷரும் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

தமிழ்வேள்
டிச 09, 2025 22:22

முருகா.... திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா......அது.....


Sun
டிச 09, 2025 21:51

தமிழக அரசு தனது மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ள மலை, திரி, எண்ணெய் எங்கும் போய்விடாது என்பது சரியான வார்த்தைகள் அல்ல. இந்துக்கள் மனம் புண்படும் படியாக இவ்வார்த்தைகள் மேல் முறையீட்டு மனுவில் இடம் பெற்றுள்ளன.


D Natarajan
டிச 09, 2025 21:34

கபில் சிபல் இல்லையா


Ramesh Sargam
டிச 09, 2025 21:26

அடுத்து தமிழக முதல்வர் ஆஜராக வேண்டும், பொறுப்பற்ற அதிகாரிகளை நியமித்ததற்கு.


rama adhavan
டிச 09, 2025 20:28

பிடி இதற்கும் ஒரு அப்பீல்,, தடை.


Sundaran
டிச 09, 2025 20:19

யாரும் வரப்போவதில்லை . அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் . மீண்டும் அடிவாங்கி வரும் . ஆட்சியர் கண்காணிப்பாளர் பதவிகளின் நம்பக தன்மை காணாமல் போய்விட்டது . ஆளும் கட்சிக்கு ஜால்றா அடிப்பது வாடிக்கையாகி விட்டது


vbs manian
டிச 09, 2025 20:12

இவர் துணிவு பாராட்ட தக்கது. இவர் போன்றோர் நிறைய வர வேண்டும்.


Murugesan
டிச 09, 2025 19:54

அமைச்சரை முதல்ல பதவி நீக்கம்


Pandianpillai Pandi
டிச 09, 2025 19:31

ஐயா அப்படியே விஜய் அவர்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துங்கோங்க .


KR india
டிச 09, 2025 19:15

இந்த வழக்கு செல்லும் திசையைப் பார்த்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் போல் தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்தால், அது தி.மு.க அரசுக்கு மிகப் பெரிய இழுக்கை ஏற்படுத்தும். ஒரு பக்கம் தி.மு.க அரசின் அழுத்தம், மற்றொரு புறம் நீதிமன்றத்தின் அழுத்தம். பாவம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள, அப்பாவி உயர் அதிகாரிகள் என்ன செய்வார்கள் ? அவர்களில், பலரும் இந்துமத நம்பிக்கை உடையவர்கள் தானே முருகப் பெருமானுக்கு எதிரானவர்களாக இருக்க வாய்ப்பில்லை வருடத்திற்கு ஒருமுறை கார்த்திகை தீப திருநாள் திதி வருகிறது. தீபத் தூணில் மட்டுமல்லாது, கோவிலை சுற்றி கூட ஏற்றட்டும். ஒருநாள் தீபம் ஏற்றுவதில், தி.மு.க அரசுக்கு உடன்பாடு இல்லை என்று கூறினால், அது ஏற்புடையதல்ல தி.மு.க அரசு சற்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இனிமேலாவது ஆட்சியாளர்கள் திருந்துவார்களா ? இல்லை என்றால், உயர்நீதிமன்றம் சாட்டை அடி தீர்ப்பு வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


புதிய வீடியோ