உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்ச் சொத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

சர்ச் சொத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

மதுரை : ''ஹிந்து கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறை சட்டப்படியும், வக்ப் போர்டு சொத்துக்கள் வக்பு வாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுவது போல, கிறிஸ்தவ சர்ச்களின் சொத்துக்களையும் பதிவுச் சட்டத்தில் சேர்க்க நேரம் வந்து விட்டது,'' என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் ஷாலின் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நான், 2023ல் விஜயா என்பவரிடமிருந்து சொத்து வாங்கினேன். அதை பதிவு செய்ய திருப்பத்துார் சார் - பதிவாளர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக, 2023 மார்ச் 29ல் சார் - பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நான் வாங்கிய சொத்தை உடன் பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இம்மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. திருப்பத்துார் சார் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 'சென்னை உயர் நீதிமன்றம் 2017-ல் இரு வழக்குகளில், தமிழ் இவாஞ்சலிக்கல் லுாத்தரன் சர்ச் சொத்துக்களை, உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை ஐ.ஜி., சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் தான், மனுதாரரின் சொத்துப் பதிவு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது. பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழில், 'சிவன் சொத்து குலம் நாசம்' என்பர். அதாவது, 'கோவில் சொத்துக்களை அபகரித்தால், குடும்பம் அழிந்து விடும்' என்பது அதன் அர்த்தம். ஹிந்து, இஸ்லாமிய சட்டப்படியான சொத்துக்களை பதிவுத்துறைச் சட்டம் பாதுகாக்கிறது. அந்த பதிவுத்துறை சட்டத்தில், சர்ச் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.ஹிந்து கோவில் சொத்துக்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படியும், வக்ப் போர்டு சொத்துக்கள் வக்பு வாரிய சட்டப்படியும் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், கிறிஸ்துவ சர்ச் சொத்துக்களை பொறுத்தவரை, இதுபோன்ற சட்டம் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது.இந்தியா மதசார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக அணுக வேண்டும். அதனால், சர்ச் சொத்துக்களை பதிவுத்துறைச் சட்டம் 22-ஏ பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும்; அதற்கான நேரம் வந்துள்ளது. உயர் நீதிமன்றத்தில், டி.இ.எல்.சி., என்ற, தமிழ் இவாஞ்சலிக்கல் லுாத்தரன் சர்ச் சொத்து தொடர்பான பிரதான வழக்கு, பதிவுத்துறை ஐ.ஜி.,யின் சுற்றறிக்கையை சுட்டிக்காட்டி திரும்ப பெறப்பட்டுள்ளது. பிரதான மனு நிலுவையில் இல்லாத போது, இடைக்கால உத்தரவுக்கு உயிர் இல்லை.பதிவுத்துறை ஐ.ஜி.,யின் சுற்றறிக்கை சட்டப்படியான உத்தரவும் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவு குறித்து அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். இதனால், டி.இ.எல்.சி., சொத்துக்களை பொறுத்தவரை, தற்போது எந்த தடையும் இல்லை.மேலும், சர்ச் சொத்துக்கள் பதிவுத்துறை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படாத நிலையில், அந்த சொத்துக்களை பதிவு செய்ய மறுப்பது சரியல்ல. எனவே, சார் - பதிவாளரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பத்திரப்பதிவுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Natarajan P
மே 30, 2024 16:07

தமிழ் நாடு திராவிட நாடு என்று மாற்றி வருகிறார் கள் தமிழ் நாடு திராவிட நாடு இல்லை சமத்துவ நாடு எல்லோரும் சமம், அதை விட்டு விட்டு, திராவிடம் இந்துக்களுக்கு எதிரானவை,


RAVINDIRAN B
மே 30, 2024 07:20

பாரத தேசம் இந்துக்களுக்கு மட்டுமே இருந்த காலம் போய் மற்ற மதத்தை சேர்ந்வர்கள் எவ்வளவு அராஜக சுதந்திமாக உள்ளனர் என்பதற்கு இதுவே சான்று


N Sasikumar Yadhav
மே 29, 2024 19:40

இசுலாமிய வக்பு வாரிய சொத்துக்களை அனைத்தையும் பரிசீலிக்க வேண்டும் இசுலாத்துக்கு தொடர்பில்லாத இடத்தைக்கூட அவசர தேவைக்கு விற்க முடியாமல் அரியலூர் அருகே ஒரு கிராமமே தவிக்கிறது இதற்கு முதலில் தீர்வு காணவேண்டும்.


Rangarajan
மே 29, 2024 16:01

வரவேற்க வேண்டிய ஒன்று ஆனால் இதுநடக்காது


சாம்
மே 29, 2024 15:38

அது மட்டும் நடக்கவே நடக்காது. தமிழ் நாட்டில். திராவிட மாடல் ஆட்சியில்


Sampath Kumar
மே 29, 2024 11:34

நீதி பத்தி அவர்களின் கருது ஓகே ஆனால் பாருங்கள் இந்த விஷயத்தில் எல்லா மதத்தினரும் ஒரே மாதிரி எண்ணம் கொண்டவர்களாக இருகின்றனர் வியாபாரம் அது தான் முக்கியம் அதுக்கு என்ன செய்ய முடியுமோ அதனை வேலைகளையும் பார்த்து காசு சம்பாதிக்கிறார்கள் இவர்களின் இலைகளை அந்த மதத்தினரின் உள்ள ஏழை ஏலிய மக்களுக்கு குறைந்த விலையில் விட்டார்கள் அந்த மக்கள் வீடு கட்டி கொள்ள வசதியாக இருக்கும் செய்வார்களா ??/


ஆரூர் ரங்
மே 29, 2024 10:37

பெங்களூருவில் ராணுவ நிலத்தையே 60 கோடிக்கு மெட்ரோவுக்கு விற்று சாதனை படைத்த தேவாலயம் பற்றியும் எழுதலாம்.


theruvasagan
மே 29, 2024 10:32

என்னாது. இந்து கோயில் சொத்துக்களை அறநிலையத் துறை பாதுகாக்கிறதா. என்னங்க இது புதுப் பொரளியா இருக்கே.


doss
மே 29, 2024 10:17

சில நீதிபதிகள் தாங்கள் என்ன தீர்பாபு சொல்கிறோம்.அது சரியாக என்று கூட யோசிக்காமல் செயல்படுகிறார்கள். நீதிமன்றம் ஒரு தடையை ஏற்கனவே விதித்துள்ளது. முதலில் அதை ரத்து செய்தால்தான் வேறு தீர்ப்பு வழங்கலாம். அதை செயல்படுத்த முடியும். எப்போது ஞானம் வருமோ தெரியவில்லை


Lion Drsekar
மே 29, 2024 10:12

இப்படி எல்லாம் கருத்து பதிவு செய்வதற்கு முன்பாக ஜாதி வெறி சங்கங்களிடம் முன்னனுமதி ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி இந்த நாட்டில் உள்ளது. அப்படி மீறி செயல்பட்டால் இவர்கள் பதவி நீக்கம் செய்ய சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் அதுவரை இவர்களுக்கு வழங்கப்படும் படிக்கு ஏற்ப கறுப்புக்கொடி ஆர்பாட்டம் நடைபெறும். இதுதான் நாங்கள் அன்றாடம் காக்கும் காட்சிகள் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை