உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிகரெட் சூடு; மூளையில் ரத்தக்கசிவு; அஜித் பிரேத பரிசோதனையில் பகீர்

சிகரெட் சூடு; மூளையில் ரத்தக்கசிவு; அஜித் பிரேத பரிசோதனையில் பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'சிகரெட் சூடு, மூளையில் ரத்தக்கசிவு, 50 வெளிப்புற காயங்கள், அஜித் உடலில் இருந்ததாக, திடுக்கிடும் தகவல்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ளன.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில், நகை திருட்டு வழக்கில், போலீசாரால் தாக்கப்பட்டு இறந்த பத்ரகாளியம்மன் கோவில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை பின்வருமாறு: அஜித்குமாரின் உடலில், 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில், 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qmvgxxsw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும், அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன் மண்டையோட்டில் அடியும், மூளையில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்தது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால், ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது. தரையில் இழுத்துச்சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக் கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம். தொடர்ந்து, பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம்.இவ்வாறு, அறிக்கை தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

chinnamanibalan
ஜூலை 04, 2025 20:06

கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்கள், காவலர்கள் புடை சூழ பாதுகாப்புடன் ஆடம்பரமாக வலம் வருகிறார்கள். ஆனால் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாத ஒரு அப்பாவி கோவில் காவலர், நகையை திருடினார் என்று கூறி, காவலர்களால் அணு அணுவாக சித்தரவதை செய்து, அடித்து கொல்லப்பட்டு இருப்பது ஆழ்ந்த துயரம் அளிக்கிறது. அரசு தண்டனையில் இருந்து இவர்கள் ஒருவேளை தப்பித்தாலும், தெய்வ தண்டனையில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது.


r.thiyagarajan
ஜூலை 04, 2025 13:29

திருடனை கண்டுபிடிக்காமலே ஒரு அப்பாவிய கொன்னுட்டிங்களே காளி உங்களை சும்மாவிடாது ..கோர்ட் உங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கவேண்டும், வேலை பென்ஷன் எல்லாம் உடனே நிறுத்த வேண்டும்


Nagarajan D
ஜூலை 04, 2025 10:22

முக்கியமாக தலைமை செயலகத்திலிருந்து உத்தரவு போட்ட அந்த சார் யார் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தி அந்த சாரையும்...


Chandru
ஜூலை 04, 2025 10:09

Dear judges of supreme court. Have these things in your mind when this case will brought before you in the days to come by the demons party that rules TN.


Pandianpillai Pandi
ஜூலை 04, 2025 10:05

திருட்டு குற்றசாட்டிற்கே இப்படியான விசாரணை நடந்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது? பொதுவாக முதல் தடவையாக திருட்டில் ஈடுபவர்களை அதற்கான காரணம் அறிந்து தேவைக்கு திருடப்பட்டிருந்தால் அடியை கொடுத்து மன்னித்து அவரின் எதிர்கால வாழ்க்கையை கருதி வழக்கு போடாமல் விட்டு விடுவார்கள். கொலைவழக்கில் கூட இவ்வளவு கடுமை இருக்காது. நிச்சயமாக இது திருட்டாக இருக்காது. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவரை போலீசார் திருட்டு வழக்கிற்கு அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் அழைத்துச் சென்றிருக்க முடியுமா? அந்த நிறுவனம் நன்னடத்தை சான்றிதழ் வாங்கிய பிறகுதான் வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள். தனது ஊழியரை காக்க வேண்டிய நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்தது? போதிய சாட்சியங்கள் இல்லாத போது எப்படி விசாரணை தீவிரமாக்கப்பட்டது. கொடுமை என்னவென்றால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்க்கே இது பற்றி தெரியவில்லை என்பதுதான். அப்போது தனிப்படை யார் கட்டுப்பாட்டிலும் இயங்க கூடியதாக இருந்திருக்கிறதா? உயரதிகாரிகளின் வாய் உத்தரவிற்க்கே செயல்பட்டுவந்ததுதான் தனிப்படையா? அல்லது தனிப்படையை பயன்படுத்தி அரசுக்கு எதிரான சதிசெயலா ?


venugopal narayanan
ஜூலை 04, 2025 09:42

Ajit look very healthy and strong......if he was beten to death , then the force used must have been severe,,,,what a tragedy .... Police is supposed to be our friends and treat every body with diginity... it d fear about police in the mind of common man .....very unfortunate ... Police became a scape goat and real culorits is still at large ......


MP.K
ஜூலை 04, 2025 09:40

அடித்த காவலர்கள் பணி இடை நீக்கம் அடிக்க உத்தரவு போட்ட உயர் அதிகாரிகளை என்ன செய்ய போறீங்க ?


Venkatesan R
ஜூலை 04, 2025 09:38

மடப்புரம் காளி உண்மையாக அங்கே இருந்தால் இந்த கொடுமையை செய்தவர்களையும் இதற்க்கு காரணமாக இருந்தவர்களையும் இயர்கையால் விரைவில் தண்டிக்க படவேண்டும்.


Minimole P C
ஜூலை 04, 2025 09:20

Hang all the police men involved in beating. They not only fit to be a police man but also not eligible to live with fellow human beings.


ManiK
ஜூலை 04, 2025 08:17

ப்ளாக் லைப் மேட்டர் க்கு மட்டும் ஒத்த கால் முட்டி போட்ட லிபரல் நக்ஸ் கும்பல், தமிழ் சினிமா திமுக போராளி ஜால்ராக்கள் எல்லாம் எங்கே..??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை