உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை; மோகன் ஜி கைது சட்டவிரோதம் எனக்கூறி ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

பழநி பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை; மோகன் ஜி கைது சட்டவிரோதம் எனக்கூறி ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

திருச்சி: பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சினிமா இயக்குனர் மோகன் கைது செய்யப்பட்டார். அவர் கைதுக்கு முகாந்திரம் இருந்தாலும் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் எனக்கூறி திருச்சி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.பிரபல சினிமா இயக்குனர் மோகன். பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரவுபதி படங்களை இயக்கியவர். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hjd21xrg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர் சமீபத்தில், பழநி கோவிலில் வினியோகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்து கொடுப்பதாக கூறி இருந்தார். இது பற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். சென்னையில் இருந்த அவரை, இன்று காலை கைது செய்தனர்.அவரை மாலை திருச்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, மோகன்ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். நேரில் ஆஜராக நோட்டீஸ் அளித்த போலீசார், அவகாசம் அளிக்காமல் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பி அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

JOTHIVELU NATARAJAN
செப் 26, 2024 13:41

முகாந்திரம் இ௫க்கும் போது கைது கூடாது-புாியவில்லை


Sankare Eswar
செப் 25, 2024 12:43

திராவிட பொறுக்கிகளின் கொடுங்கோல் ஆட்சி சர்வாதிகாரம்... இலங்கை போலெ இவர்களையும் மூட்டை முடிச்சோடு வெளியே அனுப்புவது எப்போது?


V RAMASWAMY
செப் 25, 2024 09:14

கருத்து சுதந்திரம் நம் தேசத்தில் வரையறையைத் தாண்டிக்கொண்டிருக்கிறது.


T.sthivinayagam
செப் 24, 2024 21:44

அலர் கைது ஆனதும்,அவர் ஜாமினில் வந்தற்கும் கர்மா தான் காரணம்


Dharmavaan
செப் 24, 2024 21:19

பேக்குத்தனமான நீதி.கைது செய்ய முகாந்திரம் உள்ளது,கைது தவறு, என்ன இது பேச்சு சுதந்திரம் திமுகவுக்கு மட்டும்தானா


Davamani Arumuga Gounder
செப் 24, 2024 21:49

நேரில் ஆஜராக நோட்டீஸ் அளித்த போலீசார், அவகாசம் அளிக்காமல் கைது செய்தது ஏன்?


இராம தாசன்
செப் 24, 2024 20:40

25 கோடி அப்பு


Vaanambaadi
செப் 24, 2024 20:34

பிரியாணியில் துப்பி குடுக்கலாம் ....


Bahurudeen Ali Ahamed
செப் 24, 2024 19:30

கலவர நெருப்புமூட்டி குளிர்காய நினைப்பது அயோக்கியத்தனம்


sankar
செப் 24, 2024 21:06

யாரு - அந்த ஜாதி வெறியர்களை சொல்றியா


பல்லவி
செப் 24, 2024 17:23

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை தெரியுமா?


sankaran
செப் 24, 2024 15:55

கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் பற்றி இடது சாரிகள் இப்போதேல்லாம் வாயை திறப்பதில்லை...


சமீபத்திய செய்தி