உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச விளையாட்டு போட்டி 64 பதக்கங்கள் வென்றது சி.ஐ.எஸ்.எப்.,

சர்வதேச விளையாட்டு போட்டி 64 பதக்கங்கள் வென்றது சி.ஐ.எஸ்.எப்.,

சென்னை:சர்வதேச காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கான, விளையாட்டுப் போட்டியில், மத்திய தொழில் பாதுகாப்பு படை 64 பதக்கங்கள் வென்றது. நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், உயர் நீதிமன்றங்கள், வி.ஐ.பி., பாதுகாப்பு பணியில், சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் துணை ராணுவமாகும். இதில் பணியாற்றும் வீரர்களுக்கு, தேசிய அளவில் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், அவ்வப்போது நடத்தப்படுகின்றன. அமெரிக்காவில் கடந்த ஜூன் 30 முதல் ஜூலை 6ம் தேதி வரை, சர்வதேச காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த, 10,000 போலீஸ், தீயணைப்பு துறை வீரர்கள் பங்கேற்றனர். இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் பங்கேற்றனர்.போட்டியில் அவர்கள், 64 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். நாட்டின் பலமாநிலங்களை சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை