உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக தற்கொலை நடக்கும் நகரங்கள்: முதலிடத்தில் டில்லி; அடுத்த இடத்தில் சென்னை

அதிக தற்கொலை நடக்கும் நகரங்கள்: முதலிடத்தில் டில்லி; அடுத்த இடத்தில் சென்னை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் தற்கொலை நடக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னை இரண்டாவது இடம், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.கர்நாடக மாநிலம், பெங்களூரில் இளம் வயதினர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க, பெங்களூரில் உள்ள, 'நிம்ஹான்ஸ்' மனநல மருத்துவமனை, 2022ம் ஆண்டு, 'நகர்ப்புற சுய தீங்கு ஆய்வு' எனும் திட்டத்தை துவக்கியது.இதன் மூலம், தற்கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்கொலை செய்வோர் எண்ணிக்கை குறித்த ஆய்வை, தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து, நிம்ஹான்ஸ் மருத்துவமனை நடத்தியது.ஆய்வில், கர்நாடகாவில் ஓராண்டுக்கு சராசரியாக, 13,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வது தெரியவந்தது. தேசிய அளவில் தற்கொலை அளவு சராசரி, 12.4 சதவீதமாக உள்ளது. ஆனால், கர்நாடகாவில் தற்கொலை செய்வோரின் சராசரி 20.2 சதவீதமாக உள்ளது.நாட்டிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நகரங்களில் டில்லி முதலிடத்திலும், சென்னை இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது.கர்நாடக மாநிலத்தில், 25 முதல் 39 வயதுக்கு உட்பட்ட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் தற்கொலை முயற்சியில் பிழைத்த, 20,861 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், 55.76 சதவீதம் பேர் ஆண்கள்; 44.15 சதவீதம் பேர் பெண்கள்.இவர்கள், நகர்ப்புற சுய தீங்கு ஆய்வு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் மீண்டும் தற்கொலை செய்ய முயற்சிப்பது தடுக்கப்படுகிறது. இருப்பினும், 194 பேர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்தனர். அதில், 37 பேர் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

V Venkatachalam
செப் 12, 2025 13:36

சென்னை முதல் இடத்தில் இருந்திருக்கும். ஆனால் தற்கொலை பண்ணப் போறவனுங்களை ஒரு கூட்டம் கண்டுபிடிச்சு கொலை பண்ணிடுறானுங்க. அதுனால தற்கொலை எண்ணிக்கை குறைஞ்சு போயிடுது. நம்ம சாராய யாவாரி இந்த விஷயத்தில முதன்மை மாநிலம் ன்னு அள்ளி வுட் முடியாது.


theruvasagan
செப் 12, 2025 10:03

மாடல் ஆட்சியில் மக்கள் அளவுக்கதிகமான சந்தோஷத்தில் இருப்பதால் திக்கு முக்காடிப் போய் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தங்கள் உயிரை தாங்களே போக்கிக் கொள்ளுகின்றனர். அளவுக்கதிகமான துக்கத்தை போல அளவுக்கதிகமான மகிழ்ச்சியும் ஆபத்து.


தஞ்சை மாமன்னர்
செப் 12, 2025 07:20

மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நாளை நமதே 234 லும் நமதே


நிக்கோல்தாம்சன்
செப் 12, 2025 06:11

இங்கு ஆய்வு செய்வோர் என்ற பெயரில் பலர் பக்கத்து சேட்டன் மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளனர், உள்நோயாளி பிரிவில் அதிகம் இருப்பது மலையாளிகளும் பெங்காளிகளும் தான் என்று உங்களால் தைரியமாக எழுத முடியுமா ?


Mani . V
செப் 12, 2025 05:58

வெகுவிரைவில் அப்பா சென்னையை முதலிடத்துக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்.


Iyer
செப் 12, 2025 05:18

பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் – யோகா, பிராணாயாமம், சூர்யநமஸ்காரம், த்யானம் இயற்கை விவசாயம் தமிழர்களின் சித்த மற்றும் இயற்கை வைத்தியம் போன்ற பயிற்சிகளை - கட்டாயப்பாடம் ஆக்கினால் மாணவ மாணவிகள் உடல் நலம் + மனநலத்துடன் இருந்து வேலைக்கு செல்வார்கள். தற்கொலையை பற்றி எண்ணமே வராது.


Kasimani Baskaran
செப் 12, 2025 03:59

கேஜிரிவாளின் துடப்பத்துக்கும், திராவிடத்துக்கும், ஸ்கேம்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.


Palanisamy Sekar
செப் 12, 2025 02:25

சென்னையில் அதிக தற்கொலை செய்ய காரணம் ஆளும்தரப்பினரின் ஸ்டாலினின் புகழ்ச்சியே காரணமாக இருக்க கூடும். அதிலும் முதல்வரின் பேச்சை நேரடியாக கேட்பவர்கள் அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வார்களோ? அதிக குடியால் கூட இருக்கலாம். பல குடும்பங்களை சீரழித்து தானே அரசாங்கத்திற்கே வருமானம் வருவதால் குடியால் தற்கொலைகள் தாராளமாக இருக்கலாம். கனிமொழியிடம் சொல்லி வையுங்கள். உடனே டாஸ்மாக்கை மூடும்படி போராடுவார்.


புதிய வீடியோ