உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய்: ராமதாஸ்

அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய்: ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: சில விஷமிகள் பொய்யான தகவல்களை பரப்பி இருக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் நாளை சந்திக்கிறேன். திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும். முக்கியமான பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம். தவறாக பொதுக்குழு உறுப்பினர்கள் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஊடக நண்பர்களும் கட்டாயம் வர வேண்டும். பொதுக்குழுவில் குறைந்தது 4 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். நேற்று தைலாபுரம் இல்லத்திற்கு வந்து இருந்த அன்புமணி வணக்கம் சொன்னார்.நானும் வணக்கம் சொன்னேன். வேறு எந்த பேச்சும் இல்லை. வணக்கத்தை வரவேற்பது. இந்த வணக்கம், அந்த வணக்கத்தை வரவேற்பது, இவ்வளவு தானே. அன்புமணி என்னிடம் ஆசிர்வாதமெல்லாம் வாங்கவில்லை. அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாக கூறுவது பொய். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.https://youtu.be/a8iFYhErLTI?si=14gOufLiHteahWik

திட்டமிட்டப்படி நடக்கும்!

முன்னதாக, சமூக வலைதளத்தில் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் நாளை திட்டமிட்டபடி பாமக சிறப்பு பொதுக்குழு நடை பெறும். அதில் எந்த வித மாற்றமும் இல்லை. பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புகின்றன. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Gokul Krishnan
ஆக 16, 2025 18:41

ஒரு வேளை டிரம்ப் வந்து அலாஸ்கா அல்லது அமெரிக்காவில் சமாதான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறாரோ


Balasubramanian
ஆக 16, 2025 18:40

இவர்களுக்கு இதே வேலையாக போய் விட்டது! இந்த பரபரப்பு செய்திகள் இல்லை என்றால் இவர்கள் கடசியை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்களோ என்ற பயம் போல!


KR india
ஆக 16, 2025 18:33

ஏய் நம்பாதீங்கப்பா நாங்கள் இன்னும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் அவ்வப் பொழுது, தற்காலிக சண்டை நிறுத்தம் செய்து விட்டு, கேக் வெட்டிக்குவோம் சேர்ந்து சாப்பிடுவோம் அதன் பிறகு மீண்டும் டிஸ்யூம் டிஸ்யூம் போடுவோம் இன்னும் சண்டை முடிய வில்லை : இருப்பதோ, ஒரே மகன் பொறுப்பை டாக்டர். அன்புமணியுடன் ஒப்படைத்து விடுவதே, தங்களுக்கு பெருமை சேர்க்கும். எண்பது வயதை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, இவ்வளவு வீராப்பு எல்லாம் எதற்கு பெரியவரே


Akash
ஆக 16, 2025 17:25

Humanity is waiting with folded hands for a solution


Bala
ஆக 16, 2025 17:25

Intha perusu ku suitcase ennum kaiku kidaikala . Fraud intha aalu , no use for TN


Bala
ஆக 16, 2025 17:24

Intha perusala entha use um illa Tamilnadu ku


Akash
ஆக 16, 2025 15:49

Yes 2 great summit happened yesterday - Like Trump - Putin talks this too failed


Vasan
ஆக 16, 2025 15:19

I request US President Mr.Trump to intervene and solve the indifference between the 2 Doctors, Dr.Ramadoss and Dr.Anbumani. This will bring peace in Tamilnadu, India, Asia and Globally.


MARUTHU PANDIAR
ஆக 16, 2025 14:50

இந்த கொசுத் தொல்லை தா.....ங்ங்ங்ங்ங்க முடியலடா நாராயணா என்ன செய்யறதுன்னே தெரியலை.


ஆரூர் ரங்
ஆக 16, 2025 14:27

சங்கமித்ரா அரங்கில்... அது அன்புமணி மகள் பேரு?


புதிய வீடியோ