உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முதல்வர் அழைத்து பேசணும்: அர்ஜுன் சம்பத்

பிராமணர்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முதல்வர் அழைத்து பேசணும்: அர்ஜுன் சம்பத்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிராமணர், அர்ச்சகர், வைதீகர்கள் மற்றும் ஹிந்து மக்கள் கட்சி சார்பில், அந்தணர் பாதுகாப்பு பேரணி மாநாடு நடந்தது. அதில், பிராமணர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஹிந்து பிரமுகர்கள் பலரும் பேசினர்.தமிழ்நாடு பிராமண ஸமாஜம் மாநிலத் தலைவர் பிரம்மஸ்ரீ ஹரிஹரமுத்து: தமிழ் கலாசாரத்தை அறமும் நெறியுமாக பாதுகாக்கும் பிராமண சமூகத்தின் மீது அநீதிகள் இழைக்கப்படுகின்றன. நம் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. அந்த கொடுமையை திராவிடமே செய்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7alh6ojg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனால், அநீதிகளை எதிர்கொள்ள பிராமணர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிராமணர் அடையாளங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு உறுதியான பதில் அளிக்க வேண்டும்.தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நல பொதுச்செயலர் பால சடாச்சரம்: அர்ச்சகர்கள் இறை பணியில் ஜாதி, மதம், இனம் என்ற வேறுபாடு பார்ப்பவர்கள் அல்ல. எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. ஆனால், இன்றுள்ள நிலையில் சனாதன தர்மம், கோவில்கள், ஆகமங்கள், அர்ச்சகர்கள், அந்தணர் உள்ளிட்டவற்றை பாதுகாக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. திரைப்பட இயக்குநர் மோகன்ஜி: தர்மம் காப்பது சத்திரியன் லட்சணம் என்பர். ஒரு சில ஜாதிகளை குறிப்பிட்டு பேசினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், பிராமணர்களை இழிவுப்படுத்தி பேசுகின்றனர். இந்நிலை மாறிட பிராமணர்கள், ஈரோட்டில் இது போன்ற மாநாடுகளை நடத்த வேண்டும். பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சனாதனம் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.திரைப்பட நடிகை கஸ்துாரி: பிராமண சமூகம் தனியாக இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் தான், பிராமணர்களுக்கு அதிகபட்ச சங்கடங்கள் ஏற்படுகின்றன. இனி, பிராமணர்களை இழிவாக பேசினால் புகார் கொடுக்க வேண்டும். ஹிந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்: எந்த ஒரு கட்சிக்கும் எதிர்த்து நடத்தப்படும் மாநாடு அல்ல இது. அந்தணர் ஒற்றுமை ஆங்காங்கே உருவாகி வருகிறது. ஏழைக்கான இடஒதுக்கீடு நாடு முழுவதும் 10 சதவீதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏழைக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை.பிராமண சமூகம் அமைதியான நாகரியமான சமூகம்; ஜாதி சண்டை, கலவரத்தில் ஈடுபட்டதில்லை. சுதந்திர போராட்டம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நல்ல காரியங்களை, பிராமணர் சமூகம் செய்துள்ளது. ஆனால், பிராமணர் மீது திராவிட கும்பல் வெறுப்பு பிரசாரத்தை செய்கிறது.அந்தணர் சமூகத்தை இழிவுப்படுத்தி பேசுவது தி.மு.க., அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தான். அதை முதல்வர் கண்டிக்கவில்லை. கோவில்களை, ஹிந்து சமயத்தில் இருந்து பிரிக்க வேண்டும்; கோவில்களில் இருந்து சிவாச்சாரியார்களை வெளியேற்ற வேண்டும் என்பது அமைச்சர் சேகர்பாபுவின் திட்டம். இப்பிரச்னைகளை முதல்வர் தான் தீர்க்க வேண்டும். அதற்காக பிராமணர்களை அழைத்து பேச வேண்டும். எங்கள் குறைகளை கேட்காவிட்டால் தொடர்ந்து போராடுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

S.V.Srinivasan
மார் 26, 2025 09:08

அட என்னங்க நீங்க வேற. அவரு பிராமணர்களை கண்டாலே பின்னங்கால்கள் பிடரில படர மாதிரி ஓட்றாரு. அவருகிட்ட பிராமணர்களின் பிரச்னையை சொன்னா என்னத்த கிழிக்க போறாரு.


Rajathi Rajan
மார் 24, 2025 13:27

பிராமண சமூகம் அமைதியான சமூகம் ஜாதி சண்டை, கலவரத்தில் ஈடுபட்டதில்லை.


Muralidharan S
மார் 24, 2025 11:23

உங்கள் முதல்வரே பிராமிணர்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் குறித்து மிகவும் மட்டமாக இழிவாக பேசிய மனிதன்தான். அந்த மனிதனிடம் சென்று பேசி பிரச்சினையை தீர்க்கவேண்டுமா? நல்ல கேலிக்கூத்து.. ....


தஞ்சை மன்னர்
மார் 24, 2025 11:22

அர்ஜுன் சம்பத் முதலில் அவர்கள் வீட்டுக்கு போய் வாசலில் அமர்ந்து ஒரு சொம்பு தண்ணீர் வாங்கி குடிக்கட்டும் அப்புறம் பேசட்டும் அவர்களோட சமத்துவத்தை பற்றி


vbs manian
மார் 24, 2025 09:48

கசாப்பு கடையில் ஆட்டுக்கு எப்படி வரவேற்பு அளிக்கப்படும்.


Sundar R
மார் 24, 2025 07:57

தமிழகத்தில் யாரையாவது தலைவர் என்று அழைக்க வேண்டும் என்றால் அதற்கு முழுத் தகுதியையும் பெற்ற ஒரே ஒருவர் நம் தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் ஐயா அவர்கள் மட்டுமே.


GMM
மார் 24, 2025 07:28

இட ஒதுக்கீடு பிரிவில் பெயர் இல்லாத முற்பட்ட சமூகம் என்று திராவிடர் பெயரிட்ட அத்தனை சமூகமும் இணைந்து தங்களுக்கு உள்ள பிரச்னை, அதற்கு உரிய தீர்வு பற்றி முடிவு செய்து தமிழக அதிகாரம் வர்க்கத்தை அணுகுவது நல்லது. தமிழ் கலாச்சாரம் பின்பற்றி ஒருவனுக்கு ஒருத்தி, மதம் மாறாமல், மறுமணம் புரியாமல் ஒழுங்குடன் வாழும் சில குறிப்பிட்ட பிற்பட்ட சாதி வாக்கு குறைவினால் ஒடுக்கப்பட்டு விட்டது. இவர்கள் முற்பட்ட பிரிவில் சேர்க்க வேண்டும். எண்ணிக்கை அதிகரித்து,. இதன் எண்ணிக்கையில் பொது பிரிவில் மொத்த ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடு கோர வேண்டும். ஒன்று பட்டு, ஏற்கும் கட்சிக்கு வாக்கு போட தீர்மானிக்க வேண்டும். திமுக உட்பட அனைத்து கட்சியும் தானே அழைத்து பேசும்.


கிஜன்
மார் 24, 2025 07:22

தமிழர்கள் தங்களுக்காக உழைப்பவர்களை ...என்றுமே நன்றியுடன் நினைப்பவர்கள் .... உதாரணம் .... மஹாகவி பாரதியார், தமிழ் தாத்தா உவேசா ... பரிதிமார்கலைஞர் சூரியநாராயண சாஸ்திரியார் .... போன்றவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு .... இது போல பத்திரிகை, கல்வி, நீதி துறை, என பங்களித்த பிராமணர்களை இன்னும் அந்த துறையில் உள்ளவர்கள் கொண்டாடுகிறார்கள் .... மாண்புமிகு அம்மா அவர்களை இன்னும் சிங்கநிகர் தலைவி என்று தான் அதிமுகவினர் கூறுகிறார்கள் ... எம்.எஸ்.வி, எஸ்.பி.பி யை பற்றி குறிப்பிடாத நாளில்லை... இவர்கள் யாரையும் பிராமணராக பார்க்கவில்லை .... தயவுசெய்து தமிழா ...இல்லை வடமொழியா என்றால் ...தமிழுக்காக நில்லுங்கள் .... தமிழர்கள் உங்கள் பின்னால் நிற்பார்கள் ...


GSR
மார் 24, 2025 08:17

இதை மற்றவர்களுக்கு முதலில் புரியவைத்தால் பிரச்சினையே இருக்காது. இப்பொழுது என்ன நடக்கிறது.. பிரச்சினையை அமைதியாக செல்பவர்களுக்கு ஏற்படுத்தி விட்டு, பிறகு தவறு செய்பவர்களை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம்.


ramani
மார் 24, 2025 06:42

ப்ராமணர் சமுதாயம் வாழ்கவே. ப்ராமணர் ஒற்றுமை ஓங்குகவே


சகுரா
மார் 24, 2025 06:40

நல்ல தமிழர்கள் ஒற்றைமை மற்றும் அமைதியைதான் விரும்புவார்கள். இந்த திராவிடியாக்கள்தான் (கழகங்கள்) பிரிவினையை தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை