உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்

லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்

லண்டன்: லண்டன் பல்கலையில் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், இன்று லண்டனில் உள்ள பல்கலையில் பயின்று வரும் இந்திய மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்; லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் லண்டன் பல்கலை பட்டதாரிகளுடன் சிறப்பான கலந்துரையாடலை நடத்தினேன். திராவிட மாடல், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க இளைஞர்களின் பங்கு குறித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். திருக்குறளின் அழியாத வார்த்தைகள் மூலம் தமிழ் கலாசாரத்தின் காலத்தால் அழிக்கப்பட முடியாத புகழை கவுரவித்தேன்.இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் கண்காட்சியில் கலந்து கொண்டேன். நமது ஜனநாயக மரபு மற்றும் இன்றைய பொருத்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Chandru
செப் 06, 2025 21:23

Get out Stalin


அன்பு
செப் 06, 2025 22:14

திருக்குறளில் ஒரே ஒரு திருக்குறள். அதுவும் அந்த "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதற்கு மேலே தெரியாது. இதை வைச்சு வண்டி ஒட்டுற திராவிட மாடல். இந்த நிலையில் திருவள்ளுவருக்கு மரியாதையா?


Venkatesh
செப் 06, 2025 21:11

இந்த மாடல் கேடு கெட்ட மாடல் என்று நினைத்தால் மானங்கெட்ட மாடலாக இருக்கு, சரி வெக்கங்கெட்ட மாடலா இருக்கு.. அப்புறம் கூச்சமே இல்லாத மாடலா இருக்கு....


என்றும் இந்தியன்
செப் 06, 2025 20:06

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யையே சொல்லிக்கொண்டிருக்கும் திருட்டு திராவிட மடியில் அறிவிலி அரசின் சாதனையே சாதனை பொய்யில். என்னவோ oxford யூனிவர்சிட்டியில் சொரியான் போட்டோவை திறந்தார்களாம் அப்படி இப்படி என்று சொல்லி????ஆனால் நடந்தது???210 இங்கிலாந்து பவுண்ட் ஒரு நாளைக்கு வாடகை கொடுத்தால் அந்த oxford யூனிவர்சிட்டி ஹால் யாருக்கு வேண்டுமானாலும் உங்களுக்கே கூட கொடுப்பார்களாம்???திருமணம் கூட செய்யலாம் அதாவது அது ஒரு கல்யாண மண்டபம் வாடகை மாதிரி.


Kjp
செப் 06, 2025 19:23

எத்தனையோ பொய். அத்தோடு இதுவும் ஒன்னு. தலைவிதியே என்று இதையம் கேட்க வேண்டியது தான் தமிழனின் தலை எழுத்து.


Murugesan
செப் 06, 2025 19:12

குடும்ப பினாமிகள் முதலீடுகளை சரியாக செய்தார்களா


Kumar Kumzi
செப் 06, 2025 19:01

ஓங்கோல் துண்டுசீட்டு வாத்தி லண்டன் வாழ் தமிழ் மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களை வரும் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டிருப்பார்


lasica
செப் 06, 2025 18:59

He is clown in the elementary school dress competition


Svs Yaadum oore
செப் 06, 2025 18:29

அது யாரு அவரு தலையில் டோப்பா வைத்து சிலை ....திருவள்ளூருக்கு மரியாதையாம் ......கபாலி கோவில் அறுபத்து மூவர் திருவிழாவில் அறுபத்து நான்காவது நாயன்மார் வள்ளுவர் ....விடியல் திராவிடனுங்க அவனுங்க இழ்டத்துக்கு உருட்டவும் மாற்றவும் வள்ளுவர் ஒன்றும் அவனுங்க வீட்டு மேய்ப்பர் இல்லை ...


Raja k
செப் 06, 2025 18:17

போதும் ஊருக்கு வாங்க, நீங்க பட்டபாடு வீண் போகல , மோடியும், டிரம்பும் மறுபடியும் ஒன்னா சேர போறாங்க, அப்படியே அந்த உக்ரைனை என்ன ஏதுனு கேட்டு ரஸ்யா கூட சேர சொல்லீட்டு வாங்க


bogu
செப் 06, 2025 17:51

ஒரு குறளாவது துண்டு சீட்டு இல்லாமல் சொல்லசொல்லுங்கள் இது அத்தனையும் உண்மை என நம்புவோம்


சமீபத்திய செய்தி