உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி எனக்கு ஓய்வே கிடையாது; முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு

இனி எனக்கு ஓய்வே கிடையாது; முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு

சென்னை: 'வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் அனைத்திலும் நம்பர் ஒன் என்ற இலக்கை அடைய வேண்டும். இப்படி நிறைய பணிகள் இருக்கிறது. அதனால், எனக்கு ஓய்வே கிடையாது,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க., தலைமையிலான கூட்டணி அரசின் கடைசி முழு பட்ஜெட் நேற்று முன்தினம் (மார்ச் 14), தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தேவநாகரி எழுத்திற்கு பதிலாக, 'ரூ' என்ற தமிழ் எழுத்தில் தொகையை குறிப்பிட்டு, அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு ஆதரவு குவிந்தாலும், எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்துள்ளன. இந்த நிலையில், 'ரூ' என்பது பெரிதானது ஏன்? என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேள்விக்கு பதில் அளித்து அவர் பேசியுள்ளார். கேள்வி; பட்ஜெட்டுக்கு முன்னாடி நீங்க போட்ட டுவிட்டே நேஷனல் நியூஸ் ஆகிடுச்சே? பதில்; பட்ஜெட் லோகோவை வெளியிட்டிருந்தேன். மொழி கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக இருப்போம் என்பதை காட்ட, ரூ என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழை பிடிக்காதவங்க அதனை பெரிய நியூஸ் ஆக்கிட்டாங்க. மத்திய அரசிடம் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான சம்பளத்தை தாங்க, பேரிடர் நிதியை விடுவியுங்க, கல்வி நிதியை தாங்க என்று தமிழகம் சார்பில் 100 கோரிக்கையை வைத்திருப்பேன். அதற்கு எல்லாம் பதில் அளிக்காத நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்காங்க. அவங்களே பல பதிவுகளில் ரூ என்று தான் போட்டிருக்காங்க. ஆங்கிலத்தில் ரூபாயை ஆர்.எஸ்., (RS) என்று தான் எழுதுவாங்க. அதெல்லாம் பிரச்னையா தெரியாதவங்களுக்கு இதுதான் பிரச்னை. மொத்தத்தில் பட்ஜெட்டும் ஹிட்டு, தமிழும் ஹிட்டு.கேள்வி; பட்ஜெட் எப்படி தயாரித்தீர்கள்?பதில்; முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்ளோ, அறிஞர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், நாராயணன் போன்றவர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினார்கள். மறுபுறம் அடித்தட்டு மக்களிடம் அவங்களின் தேவைகளை கேட்டு தெரிந்து கொண்டோம். மற்ற மாநிலங்கள், நாடுகளிடம் வரவேற்பை பெற்ற திட்டங்களை, நம்ம மாநிலத்திலும் கொண்டு வர முடிவு செய்தோம். இதற்காக தலைமை செயலகத்தில் பல ஆலோசனைகளை நடத்தி, இந்த பட்ஜெட்டை தயார் செய்தோம். கேள்வி; உங்களை பொறுத்தவரை பட்ஜெட் எப்படி வந்திருக்கு?பதில்; நான் சொல்வதை விட, இந்தியா முழுவதும் வெளியாகியிருக்கும் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளோடு அரசியல் குற்றச்சாட்டுக்களை 'செக்மேட்' செய்திருக்கு இந்த பட்ஜெட் என்று எழுதியிருக்காங்க. மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியத்துறைக்கு கிடைத்த வெற்றி என்று எழுதப்பட்டிருக்கு. கல்வி, சமூகநலத்துறை திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்காங்க. மக்கள் நலத்திட்டம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கை பற்றி சிறப்பான தலையங்கத்தை எழுதியிருக்காங்க. இந்த பட்ஜெட்டில் என்ன இருக்கிறது கூசாமல் கேட்கறவங்க, பத்திரிகைகளை படிக்கணும். கேள்வி; இந்த பட்ஜெட்ல உங்களுக்கு நெருக்கமான அறிவிப்பு எது?பதில்; இந்த பட்ஜெட்டில் எல்லாமே எனக்கு நெருக்கமானது தான். மக்களுக்கு எது பிடித்திருக்கு என்பதை தெரிந்து கொள்ள சமூக வலைதளங்களில் போடப்பட்ட பதிவுகளை பார்த்தேன். பெண்கள் பாதிக்கப்படும் கருப்பை வாய்ப்புற்றுநோய்க்கான மருந்தை அரசே இலவசமாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாங்க. இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். தெலங்கானாவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக ஒரு செய்தியை பார்த்தேன். தமிழகத்திலும் இதனை செயல்படுத்த முடிவு எடுத்தோம். அதன்படி, ஊர்க்காவல்படையில் திருநங்கைகளை ஈடுபடுத்தும் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அண்மையில் விருதுநகரில் அரசு காப்பகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கி கொண்டு சென்றேன். காப்பகங்களில் இருப்பவர்களை நாம் பார்த்துக் கொள்கிறோம். மற்ற குழந்தைளுக்காக உருவானது தான் தாயுமானவன் திட்டம். ஆதரவற்ற முதியவர்களுக்கான அன்புச்சோலை திட்டத்திற்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேள்வி; எதிர்க்கட்சிகளோட விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?பதில்; ஆக்கப்பூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அதனை பரிசீலிக்கலாம். நெகட்டிவாக சொல்வதற்காகவே சிலர் சொல்வது, அரசு மீதான வன்மத்தை மட்டுமே காட்டுகிறது. உருப்படியாக எதுவும் இல்லை. இருந்தாலும், நாம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டிருக்கோம் என்பதை ஆதாரப்பூர்வமாக சொல்லி விரும்புகிறேன். 2011ல் இருந்து 2016 வரைக்கும் நம்முடைய கடன் வளர்ச்சி என்பது 108 விழுக்காடு. இதுவே 2016ல் இருந்து 2021 வரைக்கும் 128 விழுக்காடாக அதிகரித்தது. இதுவே திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரையில் 93 விழுக்காடாக குறைந்திருக்கிறோம். கேள்வி; கடன் எல்லாமே கட்டுக்குள் இருக்கிறதா? எந்த வகையில் மத்த மாநிலங்களை விட தமிழகம் தனித்துவமாக இருக்கிறது?பதில்; தமிழகத்தோட கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியிருக்கிறது. கடன் வாங்காத அரசு என்று எதுவும் இல்லை. அப்படி வாங்கும் கடனை முறையாக செலவு பண்ணுகிறோமா? என்பது தான் முக்கியம். அந்த வகையில், எதிர்காலத் தலைமுறைக்கான முதலீடாகத்தான் தி.மு.க., அரசு கடன் தொகையை செலவு செய்திருக்கிறது. அதனால் தான் எதிர்க்கட்சிகளின் அர்த்தமற்ற விமர்சனங்களை வல்லுநர்களும், நாளேடுகளின் தலையங்கமும் தவறு என்று ஆணித்தரமாக சொல்லி விட்டார்கள். கேள்வி; பட்ஜெட் முடிந்தது, அடுத்ததாக என்ன பிளான்? பதில்; இப்ப அறிவித்ததை எல்லாம் உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த, அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முடுக்கி விடுவதுதான் என்னுடைய அடுத்த வேளை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சணை, பார்லிமென்ட் தொகுதி குறைப்பு என்ற ஆபத்து. இப்படி தமிழகத்தின் நிதிக்காகவும், நீதிக்காகவும் போராட வேண்டியிருக்கு, அதனையும் பார்க்க வேண்டும். வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும். தமிழகம் அனைத்திலும் நம்பர் ஒன் என்ற இலக்கை அடைய வேண்டும். இப்படி நிறைய பணிகள் இருக்கிறது. அதனால், ஓய்வே கிடையாது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

Karuthu kirukkan
மார் 18, 2025 07:09

ஓங்கோலுக்கு போய் ஓய்வு எடுக்கலாம் ...எல்லாம் தெளிவாயிட்டாங்க ..கிளர்ச்சி எழுந்தால் ஓடி ஒளிய இடம் தேடுங்க..


Ramaswamy Jayaraman
மார் 17, 2025 13:49

நிறைய பணிகள் நடக்க வேண்டி உள்ளது. தேர்தல் அடுத்த ஆண்டு வருவதுற்குள் வருமானத்தை பெருக்கவேண்டும். அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவது என்பது யாருக்கும் தெரியாது. நிச்சயமற்ற வாழ்க்கை. ???


Narayanan. V
மார் 17, 2025 11:01

இவர்கள் ஆண்டு தமிழகம் முன்னேறவில்லை என்று அவரே ஒத்து கொள்கிறார்கள்.


angbu ganesh
மார் 17, 2025 09:56

உங்க வயசு 75 இதை ஏன் மேக்கப் போட்டாலும் மறைக்க முடியாது அப்புறம் எதுக்கு மக்கள் சேவை செய்யற உங்களுக்கு இந்த தேவ இல்லாத வேல இதுல ஓய்வு etc ன்னு. நல்ல மக்கள் சேவை செய்யறவனுக்கு எப்பவுமே தூக்கம் தாராளமா வரும், ஆனா ஒரு விஷயம் அய்யா இதுவரைக்கும் நீ வேலயே செய்யலேன்ன்னு உன் வாய்ல ஒத்துக்க வச்சிட்டோம்


angbu ganesh
மார் 17, 2025 09:54

கொஞ்சம் மக்களையும் கவனி


உண்மை விளம்பி
மார் 17, 2025 09:48

ஐம்பெரும் தலைவர்களால் ஆரம்பித்த கட்சியை உன் அப்பன் சர்க்காரியா புகழ் கருணாநிதி MGR என்னும் ஏமாளியை ஏமாற்றி திமுகவை குடும்ப சொத்தாக மாற்றிக் கொண்டான்,, இப்போது தமிழகத்தையும் உனது குடும்ப சொத்தாக மாற்றும் வரை நீ கண் துஞ்சாமல் உழைப்பேன் என்கிறாய். ஏமாளிகள் இருக்கும்வரை, ஏமாற்றுபவரகள் இருக்கத்தான் செய்வார்கள். தமிழக மக்கள் பாவம்.


Ramaswamy Jayaraman
மார் 18, 2025 15:23

மக்கள் முட்டாள்கள் என்று சோ சொன்னது, மக்கள் இவர்களுக்கு வாக்கு அளிப்பதை பார்த்த பின்தான். என்னதான் ஊழல் புகாரில் மாட்டினாலும், இவர்களுக்குத்தான் ஓட்டு போடுவோம் என்று மக்கள் இருக்கும் வரை, இவர்கள் வெற்றி பெறுவதை யாரும் மாற்ற முடியாது.


nv
மார் 17, 2025 09:07

இனியாவது கொஞ்சம் வேலையை செய்யுங்கள்!! இதுவரை வெறும் ஓய்வு மட்டும்தானே!


எவர்கிங்
மார் 17, 2025 08:13

இனி மக்களுக்கு நிம்மதியே கிடையாது என சொல்கிறார்


Velan Iyengaar, Sydney
மார் 17, 2025 07:56

எப்படி பத்து லட்சம் கோடி கடனை ஒரு டிரில்லியன் கடனா மாத்தி எங்க தலையில் கட்டுவதற்கா...? கெட் அவுட் and கெட் லாஸ்ட்


venkatarengan.
மார் 17, 2025 07:56

ரூபாய் நாட்டு குறியீட்டை அங்கீகாரம் செய்தது 2010ல் காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசாங்கம். போட்டியில் மூலமாக தேர்வு பெற்ற ஒன்று.அதை வடிவமைத்தது திமுக எம் எல ஏ அவர்களின் மகன், இதற்காக அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் உதயகுமார் அவர்களை பாராட்டியுள்ளார். ஆனால் இன்றைய முதல்வர் மத்திய அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை கொள்கை மட்டும் வைத்துக் கொண்டுள்ளாரோ என சந்தேகம் வருகிறது, அவ்வாறு இருந்தால் தூக்கம் மறந்து வேலை செய்யும் நிலை ஏற்படத்தான் செய்யும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை