உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 நாள் பயணமாக இன்று வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின்; முதலீடுகளை ஈர்க்க திட்டம்

7 நாள் பயணமாக இன்று வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின்; முதலீடுகளை ஈர்க்க திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 7 நாள் பயணமாக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார்.சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று(ஆக.30) ஜெர்மனி புறப்படும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 3 நாட்கள் தங்குகிறார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.செப்.1ம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்லும் அவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே உரை நிகழ்த்துகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் ஈவெரா படத்தை திறந்து வைக்கிறார்.மேலும், லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்கிறார். 7 நாட்கள் பயணத்திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பது தொடர்பாக பேச உள்ளார். அவரின் இந்த சர்வதேச பயணத்தின் போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அவர் தமது எக்ஸ் தள வலை பதிவில் கூறி உள்ளதாவது; வலுவான மாநிலங்களே வலிமையான ஒன்றியத்தைக் கட்டமைக்கின்றன. மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்திடத் தமிழகம் அமைத்துள்ள உயர்நிலைக் குழுவின் இணையத்தளத்தில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்திடக் கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் - அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி உணர்வினை நாம் இணைந்து புதுப்பிப்போம்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

Ramesh Sargam
ஆக 31, 2025 07:33

முதலீடுகளை ஈர்க்கவா அல்லது இங்கே சுருட்டியதை அங்கே சேர்க்கவா? அல்லது ?


Kannan Chandran
ஆக 30, 2025 14:36

இரண்டு விசயமாக போறாரு


VIDYASAGAR SHENOY
ஆக 30, 2025 14:22

அடித்த இடியாப்ப போஸ்ட் ரெடி ஆகும் அவளவுதான். இதுவரை கொண்டுவந்த முதலீடுகள் திக்கு மூக்கு ஆடுகிறது


Muralidharan S
ஆக 30, 2025 13:34

இந்தியாவில் - மாநில முதல்வர்கள் / அமைச்சர்கள் / மக்கள் பிரதிநிதிகள் - மக்களின் வரிப்பணத்தில் - அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று விட்டு வந்தால் - அதற்கான செலவு, அந்த அந்த நாடுகளில் - எங்கே எங்கே சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், எந்த விஷயத்திற்காக சந்தித்தார்கள், மாநிலத்திற்கு / அரசுக்கு / மக்களுக்கு - அதனால் என்ன நன்மை பிரயோஜனம் , முதலீடுகளை ஈர்க்க என்றால், சென்று வந்த ஒரு வருடத்திற்குள் அந்த பயணத்தின் மூலம் மாநிலத்திற்கு வந்த முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் எவ்வளவு ? இதை அரசு ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அதை மத்திய அரசோ அல்லது ஆளுநரோ அல்லது ஜனாதிபதியே உறுதிப்படுத்த வேண்டும். இதை எதுவும் வெளியே சொல்லமுடியாது என்றாலோ அல்லது அப்படி எதுவும் முதலீடுகள் / வேலை வாய்ப்புகள் வரவில்லை என்று அதிகாரபூர்வமாக தெரிந்தாலோ , இந்த வெளிநாட்டு செலவுகளை தனிப்பட்ட நபர்களின் / கட்சிகளின் செலவாக கருதி அதை அவர்களிடம் வசூலிக்கவேண்டும். இதற்க்கு முதலில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து அதை ஜனாதிபதி அமல் செய்யவேண்டும்.. ஒரு தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்கள் / அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு ஆதாரகங்களுடன் ஒரு ரிப்போர்ட் சப்மிட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வேலை காலி. அதுபோலத்தான் மக்களின் வரிப்பணத்தில் செலவு செய்வதிற்கும் ஒரு accountability இருக்க வேண்டும்..


Barakat Ali
ஆக 30, 2025 13:00

மாநிலத்தை முன்னேற்ற முதலீட்டைக்கொண்டு வர்றேன் ன்னு சொன்னா நம்புறதுக்கு ஆளா இல்ல ????


Barakat Ali
ஆக 30, 2025 12:58

வெட்டிகளின் தலைவன் துக்ளக் மன்னனால் .....


Raghavan
ஆக 30, 2025 12:27

அங்கே உள்ள கல்லூரிகளில் ஆங்கிலத்தில்தான் உரை ஆற்ற வேண்டும். இவருக்கு தமிழே ததிங்கிணத்தோம் துண்டு சீட்டைப் பார்த்து படிக்கும்போது இதில் ஆங்கிலத்தில் துண்டு சீட்டைப் பார்த்து பேசுவது என்பது கனவிலும் நடக்காதது. குடும்பமே போகிறதா அல்லது அப்பாவும் மகனும் போகிறார்களா? இங்கேவந்து வெளிநாட்டிலுள்ள எந்த ஒரு முட்டாளும் முதலீடு செய்யமாட்டான். இவர்களுடைய பணத்தையே முதலீடாக கொண்டுவரலாம் அதற்குத்தான் இந்த பயணம்.


Senthoora
ஆக 30, 2025 13:10

வெளிநாட்டில் ஆங்கிலம் தெரியாவிட்டால் கேவலமா சொல்லமாட்டாங்க. பண்பாடு தெரியாதவங்க இந்தியாவில் தான் ஆங்கிலம் தெரியாவிட்டால் கேவலமாக பேசுவாங்க. என்னமோ வெள்ளக்கார துரைமாரின் வாரிசுபோல.


karthik
ஆக 30, 2025 12:22

எப்படி பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனார் என்பது மிக ஆச்சரியம்


Thravisham
ஆக 30, 2025 14:47

ஊழல் ஊழல் ஊழல் அதை தவிர வேறென்ன


C.SRIRAM
ஆக 30, 2025 12:21

இவருக்கு ஒழுங்காக பேசவே தெரியவில்லை. ஈர்க்கப்போகிறாராம் .


SakthiBahrain
ஆக 30, 2025 11:48

எங்க தலைவரு அப்படியே 007 போல இருக்கிறார்... சும்மா எப்படி இருக்காரு..


karthik
ஆக 30, 2025 12:23

....மாதிரி இருக்கார்