உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் விழாவில் பணியாளரை கடித்த கட்டுவிரியன் பாம்பு!

முதல்வர் விழாவில் பணியாளரை கடித்த கட்டுவிரியன் பாம்பு!

திருநெல்வேலி: முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் பங்கேற்ற விழாவில், சேர்கள் சீரமைப்பு பணியில் இருந்த துாய்மை பணியாளர், கட்டுவிரியன் பாம்பு கடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா நடந்தது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இதற்காக பந்தல் அமைக்கப்பட்டு, ஏற்பாடு நடந்தது.விழா துவங்கும் முன், அங்கிருந்த சேர்களை சீரமைக்கும் பணியில் தூய்மை பணியாளர் கண்ணன், 52, என்பவர் ஈடுபட்டார். அப்போது, தடுப்பு கம்பி குழாய் ஒன்றில் இருந்த கட்டு விரியன் பாம்பு, கண்ணன் வலது கையில் கடித்தது. ஆபத்தான நிலையில் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RADHAKRISHNAN
டிச 22, 2025 20:34

கேரளாவில் வாவா சுரேஷ் என்ற பாம்பு புடி வீரரை நல்லபாம்பு கடித்தபோது திருவனந்தபுரம் அரசு மருத்துவமணெயில் சகாதார அமைச்சர் நேருல் சென்று முதல்தர சிகிச்சையளித்து காப்பீற்றப்பட்டார், கேரள மக்கள் பிராரத்தனை அவரை பிழைக்கவைத்தது, இங்கு


sankaranarayanan
டிச 22, 2025 00:11

பாம்பே கடித்தபின் இவருக்கு விழாவில் பங்கேற்க எப்படி அய்யா மனம் வந்தது


Gurumurthy Kalyanaraman
டிச 21, 2025 23:05

கட்டு விரியன் என்பது இரவில் நடமாடும் இரவில் கடிக்கும். அதன் உடலில் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிற கட்டுகளும் கருமையான உடலும் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை