உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திட்டங்களுக்கு ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் வைப்பது, கீழடி அறிக்கை போன்றவற்றிற்கு பதில் வருமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:ஊழல்வாதிகள் பாஜவின் கூட்டணிக்கு வந்தபின்பு வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி?நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?பாஜ தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை ஆதரிப்பது ஏன்?இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? இவ்வாறு தமது பதிவில் முதல்வர் ஸ்டாலின் கேள்விகளை எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

Ranganathan
அக் 18, 2025 22:45

மாநில திட்டங்களுக்கு கருணாநிதி பெயரும், ஈவேரா பெயரும் வைப்பது ஏன் என்ற கோடிக்கணக்கான தமிழர்கள் கேள்விக்கு பதில் கிடைக்குமா முதல்வரே??? இஸ்லாமிய மற்றும் கிறித்துவ பண்டிகைகளுக்கு முந்தி போய் வாழ்த்து சொல்லி , பல நலத்திட்ங்களையும் அவர்களுக்கு மக்களின் வரி பணத்தை வாரி வழங்கும் நீங்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாமல், ஆனால் ஹிந்து கோயில் சொத்துகளை, மாநில அரசு செலவினங்களுக்கு பயன்படுத்து எப்படி நியாயம் ஆகும் என்பதற்கு பதில் உண்டா தமிழக முதல்வரே??? நீங்கள் எல்லாருக்குமான முதல்வரா ??? இல்லை சிறுபான்மையினருக்கு மட்டுமே முதல்வரா என்பதை தெளிவு படுத்துங்கள்.


உண்மை கசக்கும்
அக் 18, 2025 22:40

திருட்டு கடை அல்வா வேண்டாங்க.உங்க தெலுங்கு பிரதேசத்திற்கு நடைய கட்டுங்க. திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி தான் கேட்க தெரியும். அதுவும் யாரோ எழுதி கொடுத்த பிட்.


sankaranarayanan
அக் 18, 2025 21:32

நாற்றமெடுத்த ஆட்சியே காற்றில் போகப்பொது இதிலே கேள்விகள் ஒன்றுதான் குறைச்சல் இன்றோ நாளையோ என்று இருக்கும்போது ஆட்சியின் அந்தி காலத்தில் அஸ்தமிக்கும்போது தேவையா இது


ManiK
அக் 18, 2025 20:32

திமுக ஸ்டாலின் தானே ஆட்சியில இருக்கறோம்னு தெரியாம மத்திய அரசிடம் கேள்வி கேட்பது நகைச்சுவையாக இருக்கிறது. அண்ணாமலை கேட்ட கேள்விகளுக்கு மண்டபத்துல பதில் கேட்டு வாசிச்சு காட்டுங்க நைனா.


MARUTHU PANDIAR
அக் 18, 2025 19:24

சிப்பு வருது சிப்பு


Modisha
அக் 18, 2025 18:24

பதிலுக்கு தமிழக மக்களின் ஒரே கேள்விக்கு பதில் சொல் - உனக்கு மூளை இருக்கா


Sivaram
அக் 18, 2025 17:59

அப்பா கேள்விகள் கேட்க கேட்க பெரிய பெரிய பிரமாண்ட முதலீடுகள் பக்கத்துக்கு மாநிலங்களுக்கு செல்கின்றன , தயவு செய்து தமிழனின் சோற்றில் வாழ்க்கையில் மண்ணை அள்ளி அள்ளி போடாதீர்கள் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறோம்


KOVAIKARAN
அக் 18, 2025 17:46

இந்த 10 கேள்விகளில், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கேள்விகள் ஒன்று கூட இல்லையே. எல்லாம் உப்பு சப்பில்லாத கோணங்கித்தனமான கேள்விகள்தான். பலத்த ஜால்ரா தட்டும் யாரோ ஒரு அதிகாரி எழுதிக்கொடுத்ததை அப்படியே மத்திய அரசுக்கு அனுப்பும் இந்த துண்டு சீட்டு முதல்வர் எப்போது திருந்தப்போகிறார்? அதுதான் அடுத்த வருடம் ஏப்ரல், மே மாத தேர்தலில், மக்களால் துரத்தப்பட்டு, வீட்டுக்குப்போகப்போகிறாரே, அதனால் திருந்தினால் என்ன, திருந்தாவிட்டால்தான் என்ன என்று எண்ணத்தோன்றுகிது.


raja
அக் 18, 2025 17:24

அட கூமுட்டையே உனக்கெல்லாம் கேள்வி கேக்கவே ஒரு தகுதி வேணும் 30000 கோடி வந்த ஆறே மாதத்தில் கொள்ளை அடித்த உனக்கெல்லாம் வாஷிங் மெஷினை பற்றி பேசவே அருகதை இல்லைன்னு தமிழர்கள் சொல்கிறார்கள்...


HoneyBee
அக் 18, 2025 17:22

இது வெயில் காலம் கூட இல்லையே.. என்ன ஆச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை