உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்

நம் விரல்களை கொண்டே கண்களை குத்தும் சூழ்ச்சி அரசியல்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை; நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27% இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2021ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 29) தீர்ப்பு வெளியானது. அதை நினைவூட்டும் வகையில் ராஜ்யசபா திமுக எம்பி வில்சன் ஒரு எக்ஸ் வலைதள பதிவை வெளியிட்டுள்ளார். அதை மேற்கோள் காட்டி,முதல்வர் ஸ்டாலின் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளதாவது; 20,088 இடங்கள், பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு. சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது. இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம். சமூக நீதிக்கான இந்த அரசியலையும். போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 20:42

முதல்வர் பதவியை SC ஒருவருக்கு விட்டுக் கொடுத்து சமூகநீதியை நிலைநாட்டவும்.


Sridhar
ஜூலை 29, 2025 17:31

எழுதிக்கொடுத்தவனுக்கும் ஆன்ஜியோவா?


JANA VEL
ஜூலை 29, 2025 14:57

ஒரே ஒரு தபா மருக்கா திருப்பி சொல்லு ... எதாவது புரியுதான்னு உன் தங்கச்சிகிட்ட கேப்போம்


KRISHNAVEL
ஜூலை 29, 2025 13:36

எழுதி தருவது யார், கமலஹாசனுக்கு எழுதிக்கொடுப்பதை தவறுதலாக முதலமைச்சருக்கு கொடுத்துவிட்டனரா ? எதை கண்கள் என்கிறார் நாம் உழைக்காவிட்டால் அனைத்தும் சாத்தியமே ,


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 29, 2025 13:12

தயவுசெய்து யாரும் இந்த பித்துக்குளி அறிவிக்கும் அறிக்கைகளுக்கு கருத்து தெரிவிக்காதீர்கள்..... இவர் தன் கையாலாகாத ஆட்சியில் ஏற்பட்ட அநியாயங்களை மக்கள் மறக்க மடைமாற்றத்தான் இந்த அறிக்கைகள்..... நாம் நம் கவனத்தை இவர்கள் செய்யும் அநீதிகள், கொடுமைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மட்டும் இருக்க வேண்டும்.....!!!