உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் வாழ்த்து! காரணம் இதுதான்

கல்வி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் வாழ்த்து! காரணம் இதுதான்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழக அரசு பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம், வினாடி வினா மன்றம் உள்ளிட்ட போட்டிகளில் வெல்பவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். தமிழக அரசின் இந்நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.மாணவர்களின் திறமைக்கு காரணமான ஆசிரியர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு அவர்களை கவுரவப்படுத்த கனவு ஆசிரியர் திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் வரும் (அக்.) 23ம் தேதி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.இந் நிலையில் அமைச்சர் மகேசுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் தள வலைபதிவில் கூறி உள்ளதாவது: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு! கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா?அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழகத்தின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு!இந்தப் பதிவு குறித்து நான் மகேசிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் எனக் கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும், இந்தப் பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது!இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் மகேசுக்கும், அவருக்குத் துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்! இவ்வாறு அந்த எக்ஸ் தள பதிவில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kulandai kannan
அக் 21, 2024 14:24

உதயநிதியை மட்டும் ஆதரித்தால், அன்பில் மகேஸ் கோபிக்க மாட்டாரா??


Matt P
அக் 21, 2024 09:56

துணை முதலமைச்சர் பதவி மகேசுக்கு கொடுக்காதினால் மகேசுக்கு ஆறுதல் சொல்ல இப்படி ஒரு திடீர் வாழ்த்தஆ இருக்கலாம்.


முக்கிய வீடியோ