உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி

முதல்வருக்கு வேலைப்பளு; இபிஎஸ் உடன் விவாதிக்க முடியாது: சொல்கிறார் கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: முதல்வருக்கு வேலைப்பளு அதிகம், எனவே இபிஎஸ்சுடன் விவாதித்துக் கொண்டு இருக்க முடியாது என்று திமுக எம்பி கனிமொழி கூறி உள்ளார்.கீழடியில் அவர் அளித்த பேட்டி; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=953sllfs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதித்திட்டம். பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த திட்டம் உறுதி செய்யப்படவில்லை. 40 நாள் வேலைத்திட்டம் என்பதே அதிகபட்சமாக இருந்தது.இந்த திட்டத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் என்ற மாநில அரசின் உரிமை கூட பறிக்கப்பட்டு உள்ளது. முழு ஊதியத்தையும் மத்திய அரசு தான் வழங்கிக் கொண்டு இருக்கும் நிலையில், அதையும் 60-40 சதவீதம் என்ற அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இந்த திட்டத்தையே முடித்து விடுவதற்காக தடுத்து விடுவதற்காக செய்யப்பட்ட மாற்றங்களாக பார்க்கிறோம்.கிராமப்புறங்களில் உள்ள மக்களின் பொருளதாரத்தை பாதிக்கக்கூடிய ஒரு சூழலை நாடு முழுவதுமே உருவாக்கிவிடும். அரசு திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் யார் என்று நமக்கு நல்லாவே தெரியும். உலகம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை பெற்றவர் தான் இபிஎஸ்.முதல்வருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில் இவரோடு (இபிஎஸ்சை குறிப்பிடுகிறார்) எல்லாம் விவாதித்துக் கொண்டு இருக்க முடியாது. கட்சியிலே எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவருடன் (இபிஎஸ்சுடன்) விவாதிக்க தயாராக இருப்பார்கள். அவர்களோடு விவாதிக்கட்டும். அதையும் தாண்டி சில கேள்விகள் இருந்தால் முதல்வர் நிச்சயமாக பதில் அளிப்பார்.இவ்வாறு கனிமொழி பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Vignesh
டிச 28, 2025 08:14

மாரி செல்வராஜ் அடுத்து ஒரு படம் எடுக்கிறார் அதை போய் பார்க்கச்சொல் அதற்கு தான் அவருக்கு நேரம் கிடைக்கும். வேறு எதுக்கும் நேரம் இருக்காது..


ராமகிருஷ்ணன்
டிச 28, 2025 05:34

கொண்ணனுக்கு சப்போர்ட் செய்வதாக நினைத்து அசிங்கப்படுத்தி விட்டீர்களே. ஈ பி ஸ்,, ஸ்டாலின் விவாதம் தேவையில்லை, அண்ணாமலை, ஸ்டாலின் விவாதம் நடத்த வேண்டும், திமுகவை ஒழிக்க அதான் வழி.


Mahendran Puru
டிச 28, 2025 03:30

டெபுடி சங்கி திருவாளர் ஈ பி எஸ் மே 2026க்கு பின் சரித்திரம் ஆகி விடுவார். அவருடன் என் விவாதிக்க?


vivek
டிச 28, 2025 06:52

கொத்தடிமை வேற என்ன சொல்லும்....காலக்கொடுமை


Palanisamy T
டிச 28, 2025 02:28

முதல்வருக்கு வேலை பளுவென்றால் ஆட்சியை விட்டு விலகவெண்டியது தான் தீர்வு. முதல்வர்ப் பதவி உங்கள் குடும்பச் சொத்தா? அரசு ஊழியர் வேண்டுமென்றால் வேளை பளு வென்று சொல்லலாம். அரசியலில் இருந்துக் கொண்டு மக்கள் பெயர்ச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் அப்படிப் பேசமுடியாது. இந்த அடிப்படை நாகரீகம் தெரியாதவர்கள் அரசியலுக்கே வரக் கூடாது. அதைத்தான் நீங்களும் இங்கே சொல்லுகிண்றீர்கள். இதுநாள் வரைக்கும் செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.


சுலைமான்
டிச 27, 2025 22:09

லெக் ஸ்பின் போட நேரம் இருக்கும். விவாதிக்க நேரம் இருக்காதா?


xyzabc
டிச 27, 2025 21:56

2026 ல மக்கள் திருந்துவார்களா? இல்ல இதே எம் ஜி ஆர் பாட்டா ?


Sivagiri
டிச 27, 2025 21:50

பரிட்சைக்கு படிக்கிறவனை விட , பிட் அடிக்க பிட் ரெடி பண்றவன்தான் , ரொம்ப ஹார்டஒர்க் பன்றான் . . .


Sivagiri
டிச 27, 2025 21:47

உலகமகா நடிப்புடா சாமி . . . இதுகளையும் நம்புறாய்ங்களே அந்த தூத்துக்குடி ஜனங்க . . .


N S
டிச 27, 2025 21:14

விவாதம் என்றால் கேள்விக்கு பதில் சொல்ல தெரியணும். துண்டு சீட்டு இருக்காது. முடிவு பூனை மேல் மதில்.


SIVA
டிச 27, 2025 20:49

ஆமாம் இவரு பெரிய திருவள்ளுவரு எழுத்தானிய எடுத்தாருண 1330 குறலையும் எழுதிட்டுதான் கீழ வைப்பாறு ...


முக்கிய வீடியோ