உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர், நடிகையருக்கு கோகைன் சப்ளை: பிரசாத் பின்னணி குறித்து போலீஸ் தகவல்

நடிகர், நடிகையருக்கு கோகைன் சப்ளை: பிரசாத் பின்னணி குறித்து போலீஸ் தகவல்

சென்னை: திரைப்பட தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர், நடிகையரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களிடம் இருந்து பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்தவர் பிரசாத், 33. அ.தி.மு.க.,வில், தென் சென்னை கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி துணை செயலராக இருந்தார். கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'பார்' ஒன்றில் ரகளை செய்து, கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.இவரின் மொபைல் போனை ஆய்வு செய்த போலீசார், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் பிரசாத் தொடர்பில் இருப்பதை கண்டறிந்தனர்.

பண மோசடி

பிரசாத் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிரசாத்தின் நட்பு வட்டத்தில், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள், அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தோர், ஆள் கடத்தலில் ஈடுபடும் ரவுடிகள், தொழில் அதிபர்களிடம் பணம் பறிக்க உதவி செய்யும் போலீசார், நடிகர், நடிகையர் என, பெரும் பட்டாளமே உள்ளது.பிரசாத்தின் மொபைல் போன், மடிக்கணினி உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது. அக்கும்பலை சேர்ந்த சேலம் மாவட்டம் சங்ககிரி பிரதீப்குமார், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் ஆகியோரையும் கைது செய்துள்ளோம்.இவர்களின் கூட்டாளிகள் கர்நாடக மாநிலம், பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. சினிமா படங்கள் தயாரிப்பு தொழிலில், பிரசாத் ஈடுபட்டுள்ளார். அவருக்கு, சென்னையை சேர்ந்த அ.தி.மு.க., முக்கிய புள்ளி நிதியுதவி செய்துள்ளார். சினிமா நடிகர், நடிகையர் பங்கேற்கும் இரவு விருந்து, பண்ணை வீடுகள் மற்றும், 'பப்'களில், பார்ட்டிகளுக்கு ஏற்பாடு செய்வதும் இவரது வழக்கம்.அதில் பங்கேற்பவர்களுக்கு, 'கோகைன்' கொடுத்து, போதையில் மிதக்க விடுவதே இவரது வேலை. சினிமா நடிகர், நடிகையரை போதைக்கு அடிமையாக்கி, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது, படங்களில் நடிக்க, 'கால்ஷீட்' பெறும் செயலிலும் ஈடுபட்டுள்ளார். இவரிடம், கோகைன் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியதுடன், வீட்டில் வைத்திருந்த நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரிடம், கோகைன் வாங்கிய நடிகை ஒருவரும், மற்றொரு நடிகரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

'சம்மன்'

இந்நிலையில், ஸ்ரீகாந்திடம் கோகைன் வாங்கிய, கழுகு பட நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி உள்ளோம். அவர் தலைமறைவாக இருப்பதால் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Padmasridharan
ஜூன் 26, 2025 20:17

"தொழில் அதிபர்களிடம் பணம் பறிக்க உதவி செய்யும் போலீசார்".. இந்த மாதிரி காவலர்கள் இருப்பதனால்தான் நிறைய குற்றங்கள் ஏற்படுகின்றன. புதுப்புது குற்றவாளிகளும் உருவாக்கப்படுகின்றர். . இவர்கள் ரோந்து என்கிற பெயரில் பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன.


raghavan
ஜூன் 26, 2025 13:45

இதுவே சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா வாக இருந்திருந்தா இவங்க கதி??


ராஜா
ஜூன் 26, 2025 07:47

அண்ணா பல்கலைக்கழக வளாகம், நடிகர்கள் கூட்டம் எல்லாமே கஞ்சாவிலிருந்து எல்லாம் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி தானாக்கும்.அய்யகோ


spr
ஜூன் 25, 2025 17:25

ஜாபர் சாதிக் விவகாரம் என்ன ஆச்சு மத்திய அரசும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியதே ,அரசியல் வியாபாரத்தில் அடிபட்டுப் போச்சா ... அன்பர் அமீர் மறுபடியும் பேச ஆரம்பித்துவிட்டார்.


panneer selvam
ஜூன் 25, 2025 16:37

It is not uncommon the criminals always try to take shelter under leading political parties . In fact, in Tamilnadu , every known criminals / crooks is affiliated to some political parties . They hide under that party umbrella and get protection .


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:28

பிரசாத் ஒரு அதிமுக விசுவாசி என்பதால் சென்னை நகர போலீஸ் மிக மிக தீவிரமாக விசாரணை செய்கிறது. செய்யட்டும். நல்லது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் இதேபோன்று திமுக விசுவாசிகளை விசாரணை செய்யுமா?


sd tailor
ஜூன் 25, 2025 09:54

மொத்தத்தில் எல்லா அரசியல் கட்சியிலும் போதை பொருட்களை ஊக்குவிக்கின்றன கும்பல் உள்ளது இதில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்


Shekar
ஜூன் 25, 2025 09:29

என்னதான் எழுதுங்க, இவனை விசாரிக்க போதை தடுப்பு பிரிவுக்கு அதிகாரம் இல்லை, போலிஸுக்கு அதிகாரம் இல்லை, அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என விடுவிக்க போகிறார்கள். எனவே ஓவர் பில்டப் வேண்டாம்


karthik
ஜூன் 25, 2025 09:21

இந்த விவரம் எல்லாம் ஜாபர் சாதிக்கை பிடித்த அப்போவே தெரிந்திருக்கும்.. இவனுங்க அதில் அரசியல் செய்து ஊரை ஏமாத்திட்டானுங்க


subramanian
ஜூன் 25, 2025 09:14

திராவிட மாடல் திமுக ஸ்டாலின் விடியாத ஆட்சியில் காவல்துறை கண்கட்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு காது பொத்தப்பட்டு ஊமையாக்கப்பட்டு உள்ளது.


Apposthalan samlin
ஜூன் 25, 2025 10:26

அறிவிலி பின்னர் எப்படி பிடித்தார்கள் இது கூட பிஜேபி கூட்டணி வேற


N Sasikumar Yadhav
ஜூன் 25, 2025 11:08

போதைப்பொருள் கடத்தல் கும்பல்களான தமிழக நம்பர் 1 குடும்பத்துக்கு நெருக்கமான ஆட்களை தொழிலதிபர்கள் என ஃபீலா விட்டு விசாரணைக்கு தடைசெய்திருக்கிறது உங்க கோபாலபுர எஜமான் குடும்பம்


புதிய வீடியோ