உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீர்குலைகிறது கோவை வேளாண் பல்கலை; தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு

சீர்குலைகிறது கோவை வேளாண் பல்கலை; தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கடந்த 9 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியர் நியமனங்களை மேற்கொள்ளாததாலும், பேராசிரியர் பதவி உயர்வுக்கு தேவையற்ற நிபந்தனைகள் வாயிலாக தடை ஏற்படுத்துவதாலும், பல்கலையின் கட்ட மைப்பு குலைந்து வருகிறது. கோவை வேளாண் பல்கலையில், அதன் நிர்வாகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் சுமார் 1,400 ஆசிரியர்கள், உதவிப் பேராசிரியர் நிலை முதல், பேராசிரியர் வரையிலான நிலை வரை பணிபுரிகின்றனர். உதவிப் பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர்கள்தான் பெரும்பாலும் கற்பித்தல் பணியில் அதிகம் ஈடுபடுவர். பல்கலையில் 2016க்குப் பிறகு, உதவிப் பேராசிரியர் நியமனமே நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணைப் பேராசிரியர்களுக்கான பதவி உயர்வும் திட்டமிட்டு மறுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

பல்கலை., ஆசிரியர்கள் கூறியதாவது:

வேளாண் பல்கலையில் உதவிப் பேராசிரியர்களே இல்லை எனும் நிலை உருவாகப்போகிறது. உதவிப்பேராசிரியராக பணியில் சேர்வோர், பல்வேறு படிநிலைகளைக் கடந்து சுமார் 10 ஆண்டுகளில் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவர். அந்த அடிப்படையில், கடைசியாக உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் வரும் 2026 ஆக.,ல் இணைப் பேராசிரியராக பதவி உயர்வு பெற்று விடுவர். அதன்பின் பல்கலையில் உதவிப் பேராசிரியர்களே இல்லை என்ற நிலை உருவாகிவிடும். கடந்த 9 ஆண்டுகளாக புதிய நியமனம் நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக 'டீச்சிங் அசிஸ்டென்ட்' எனும் தற்காலிகப் பணியாளர்களை நியமித்து, மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. 1,400 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், 700 --- 800 பேர்தான் பணிபுரிகின்றனர். ஏற்கனவே இந்த எண்ணிக்கையை, 1,700 ஆக உயர்த்த வேண்டும் என போராடி வரும் நிலையில், புதிய நியமனங்களை மேற்கொள்ளாமல், மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருகிறது. பதவி உயர்வு மறுப்பு இது ஒருபுறம் இருக்க, யு.ஜி.சி., ஐ.சி.ஏ.ஆர்., விதிகளில் இல்லாத, தேவையற்ற நிபந்தனையை விதித்து, பேராசிரியர் பதவி உயர்வை வழங்காமல் பல்கலை நிறுத்தி வைத்து விட்டது. இதனால், 300 இணைப் பேராசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் போராட்டத்தையடுத்து, அந்த நிபந்தனையை நீக்குவதாக பல்கலை நிர்வாகம் ஒப்புக் கொண்டது. ஆனால், அதுதொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ளது. நிதித்துறையில் இதுதொடர்பான கோப்பை வேண்டுமென்றே நிலுவையில் வைத்துள்ளனர். வேளாண் பல்கலையிலும் துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கையை, அரசு மேற்கொள்ளவில்லை. நிரந்தர துணைவேந்தருக்கும், பொறுப்பு துணைவேந்தருக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆராய்ச்சிக்கான நிதி கூட திரட்டமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இவற்றைப் பார்க்கும்போது, வேளாண் பல்கலையின் கட்டமைப்பு குலைவது தெரிந்தும், தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. முதல்வர் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் பெருமை மிக்க பல்கலையான வேளாண் பல்கலையின் பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

பெரிய ராசு
அக் 25, 2025 17:52

அணைத்து அரசு பல்கலைக்கழங்களும் அழிக்கப்பட்டுக்கொண்டு உள்ளது ,தனியார் பல்கலைக்கழக மசோதா என்று வந்ததோ அன்றே அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுகின்றது , எல்லாம் திமுக பினாமிகள் ..சாதாரண மக்கள் தனியார் நிறுவனத்தில் படிக்க இயலாது அரசு பல்கலைக்கழங்களும் அழிக்க பட்டால் வேறு வழியின்றி ஏழைமக்கள் தாலியை அடமானம் வைத்து படிக்கவைப்பார்கள் ... அதுவே ஆசிரியர்களை கடந்த 10 வருடங்களாக நியமன செய்யவில்லை ..மெல்ல மெல்ல எல்லா அரசு பல்கலைக்கழங்கள் அழிந்துகொண்டு உள்ளது ..மக்கள் திமுகவை கொண்டுவந்து தங்களை தானே அழித்து கொண்டனர், ஏழை மக்களின் படிப்புகனவு இனி எட்டாக்கனவு ...இன்னும் பாத்து வருடத்தில் அனைத்து அரசு கல்விநிறுவனமும் தனியார் வசம் போவது உறுதி, மக்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக இணைய தளத்தில் கட்டண விகிதத்தை பார்த்தால் உண்மை தெரியம் ... மக்களை எம்பெருமான் சிவபெருமான் காக்கட்டும் ...


செல்வம்
அக் 25, 2025 16:02

அரசியல் செய்வதில் உள்ள கவனம், அரசாங்க நிர்வாக செயல்பாட்டில் இல்லை..... பாவப்பட்ட வேளாண் துறை


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 25, 2025 11:59

வேளாண் பல்கலையில் மட்டும்தானா ? ஏனிந்த ஓரவஞ்சனை?


Sivasankaran Kannan
அக் 25, 2025 11:25

திராவிட மாடல் படிப்பறிவில்லா கொள்ளையர்களால் நல்ல நிர்வாகம் என்பது கனவில் கூட முடியாது..


Govi
அக் 25, 2025 10:47

தகவல் தொடர்புமையம்னு பெயர் தான் இருக்கும் ஆட்கள் இருக்க மாட்டர் . பைசா பிரயோஜனம் இல்ல. இது பொலிவிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஒரு சாதரண குடியா வைன். ஏதேனும் தகவல் வேண்டி போனால். No யூஸ் பலமுறை சென்று . சும்மா திரும்பி. இருக்கிறேன் பேச ம மூடிவிடலாம்


Anand
அக் 25, 2025 10:36

திருட்டு திராவிடம் நுழையும் இடம் அனைத்தும் சீர்குலையும்.


ems
அக் 25, 2025 09:51

வேளாண் பல்கலை கழக நிர்வாக குளறுபடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக் கழகத்திலும் இதே நிலைமை தான். இதற்கு முழு முதல் காரணம் அரசியல்வாதிகளின் தலையீடு தான்.


நிக்கோல்தாம்சன்
அக் 25, 2025 09:19

இதில் எத்துணை பெரு சரியாக வேலைசெய்கின்றனர் , அவர்களின் அலுவல் பணிநேர கணக்கெடுப்பு முறையாக நடந்துள்ளதா ? எத்துணை "Guest faculty" பணியில் உள்ளனர் என்பது போன்ற தரவுகள் விடுபட்டுள்ளன, அதனையும் நீங்க விசாரித்து எழுதியிருக்க வேண்டும் . தகுதியற்ற பணியாளர்களுக்கு பதவி உயர்வு என்பது சரிதானா ?


vbs manian
அக் 25, 2025 09:07

கல்வி துறை அதுவும் வேளாண்மை கல்வி துறை புறக்கணிக்க படுகிறது. ஆசிரியர் நியமனம் என்றால் ஊதியம் கொடுக்கவேண்டும். போதாக்குறைக்கு நிரந்தர ஊழல். ஆடம்பர செலவுக்கு பஞ்சமில்லை.


Chandru
அக் 25, 2025 09:04

தமிழ் நாடே சீர் குலையும் போது பல்கலை கழகம் மட்டும் தப்பி விடுமா என்ன ? திமுக என்ற தீயசக்தி அகலும் போதுதான் வளமான தமிழகம் மீண்டும் உயிர் பெறும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை