உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சம்பவம்; துப்பாக்கித் தோட்டாவை ஷூவில் மறைத்த பயணி

கோவை ஏர்போர்ட்டில் மீண்டும் ஒரு சம்பவம்; துப்பாக்கித் தோட்டாவை ஷூவில் மறைத்த பயணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை விமான நிலையத்தில் கேரள பயணியிடம் இருந்து துப்பாக்கித் தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: கோவை விமான நிலையத்திற்கு கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த ஷிபு மேத்யூ என்பவர் வந்திருந்தார். இவர் அபுதாபி செல்ல இருந்தார். அவரின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது ஷிபு அணிந்திருந்த ஷூவையும் சோதனைக்கு உட்படுத்தினர். சோதனையில் அதனுள் துப்பாக்கித் தோட்டா பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.உடனடியாக அவரை தனிமைப்படுத்தி விசாரணையை தொடர்ந்த அதிகாரிகள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஷிபு மேத்யூவிடம் விசாரணை நடத்தினர். தோட்டாவை மறைத்து கொண்டு வந்ததன் நோக்கம் என்ன என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.ஏற்கனவே கோவை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடம் இருந்து 9 எம்எம் ரக தோட்டா கைப்பற்றப்பட்ட நிலையில் மீண்டும் அதே போல ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anbuselvan
ஜூன் 15, 2025 22:47

பொதுவாகவே துப்பாக்கி கலாச்சாரம் மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது தமிழகத்தில்


Ramesh Sargam
ஜூன் 15, 2025 20:53

முன்பெல்லாம் நான் பெல்ட், வாட்ச் அணிந்துக்கொண்டு விமான பயணம் மேற்கொள்வேன். அங்கு விமான நிலையத்தில் பெல்ட்டை remove பண்ணு, வாட்ச் remove பண்ணு என்று மிகவும் தொந்தரவு செய்வார்கள். அதன்பிறகு நான் பெல்ட், வாட்ச் எதையும் போட்டுக்கொள்வதில்லை.ஆனால் இவர்கள் எவ்வளவு தைரியமாக தோட்டாவை வைத்துக்கொண்டு விமான பயணம் மேற்கொள்கிறார்கள்.


Natarajan Ramanathan
ஜூன் 15, 2025 23:31

நானும் அடிக்கடி விமான பயணம் செய்வதால் இப்போது எல்லாம் பெல்ட் ஷூ வாட்ச் அனைத்துமே checked in செய்துவிட்டு வெறும் செப்பலுடன்தான் செல்கிறேன்.


Nagarajan D
ஜூன் 15, 2025 20:01

கைது செய்து அவனை 20 வருட கடுங்காவால் தண்டனை விதிக்கவேண்டும்... செய்யுமா நமது நீதியற்ற நீதி துறை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை