உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவை: கோவை அவிநாசி சாலையில் ரூ. 1791 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10.1 கிலோமீட்டர் நீளம் கொண்ட மேம்பாலத்துக்கு விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 2020ல் அறிவிக்கப்பட்டு, 2021ம் ஆண்டு மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவினாசி சாலை மேம்பாலத்தை திமுக அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த 'அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன். கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், ஜிடிநாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாலத்தின் சிறப்புகள் என்ன?

பாலத்தின் மொத்த நீளம்- 10,100 மீமேம்பாலத்தின் திட்ட மதிப்பீடு- ரூ.1,791 கோடிமொத்த அகலம்- 17.25 மீதூண்கள் எண்ணிக்கை- 305போர் வெல் எண்ணிக்கை- 120மின் விளக்குகளின் எண்ணிக்கை- 610சிவல் இன்ஜினியர்கள்- 100 பேர்எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள்- 50 பேர்தாங்கும் திறன்- 6,100 டன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ramesh
அக் 07, 2025 20:58

நமது ஊர் வளரவேண்டும் என்ற நல்ல எண்ணம் வேண்டும் . வளர்ந்து விடக்கூடாது என்று நினைப்பவன் புத்தியை போல தான் நாட்டின் வளர்ச்சியும் இருக்கும்


GUNA SEKARAN
அக் 07, 2025 20:29

இது மத்திய மாநில அரசுகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய பாலம். எவ்வளவு பணம் இருவரும் பகிர்ந்திருக்கிறார்கள் என்கிற தகவல் எங்கும் இல்லை. ஏன்?


spr
அக் 07, 2025 18:12

வெகு நாளைக்குப் பின்னர் இந்த மண்ணின் மைந்தர் பெயர் நினைவு வந்ததற்கு பாராட்டுக்கள். சிறப்பான ஒன்றே. கோவை மனிதர்களே இதுவரையில், இவரைப் புறம் தள்ளியிருந்தார்களோ? இவரை நேரில் சந்தித்திருக்கிறேன் அறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் எளிமையும் ஆனால் கண்டிப்பும் கலந்த நல்ல மனிதர். அவரது பொருட்காட்சி சாலையில் அவரது கண்டுபிடிப்புக்கள் பல இருக்கிறது


அப்பாவி
அக் 07, 2025 16:42

நல்லா கட்டுணீங்களா? மூணு மாசம் தாங்குமா? நல்லவர் பேரு கெட்டுறப் போகுது.


ramesh
அக் 07, 2025 20:52

சென்னையில் கட்டிய பழங்களில் 90% dmk ஆட்சி காலத்தில் கட்ட பட்டது . அதில் தான் அனைத்து மக்களாலும் தினமும் பயணித்து வருகிறார்கள் அப்பாவி


M S RAGHUNATHAN
அக் 07, 2025 16:36

ஜாதிகளை நாங்கள் ஒழித்துவிட்டோம் என்று ஸ்டாலின் பெருமிதம். அது சரி "ர்" விகுதி இல்லாமல் இருக்கிறதே. நாயுடுர் என்றல்லவா இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் இவர் " கோவையின்" ஒளிவிளக்கு. பெயர் வைத்தது சரி. கருணாநிதி பெயர் ஏன் வைக்க வில்லை


Easwar Kamal
அக் 07, 2025 16:34

எடப்பாடி மீண்டும் வந்து இந்த பெயரை மாற்றி அமைக்க வேண்டும்.


Palanisamy Sekar
அக் 07, 2025 16:31

சத்யராஜ் மகிழ்ச்சி. இதற்காக ஸ்டாலினுக்கு பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்ய ரகசிய தகவல்கள் வந்திருக்கும். எல்லாமே தேர்தல் விழா ஒட்டுக்குத்தான். பெரியாரின் பேரன்கள் சந்தோஷபடுவார்கள் சாதி பெயரில் சூட்டியதற்கு


G Mahalingam
அக் 07, 2025 16:10

தமிழர்கள்தான் சாதி பெயர போட கூடாது. தெலுங்கர் கன்னடர் சாதி பெயரை போட்டு கொள்ளலாம். இதுதாண்ட திராவிட மாடல்.


Ram pollachi
அக் 07, 2025 15:54

வடகோவை மேம்பாலத்தை காமாராஜருக்கும், அவினாசி ரோடு மேம்பாலத்தை திருவள்ளுவருக்கும், ஆத்துப்பாலத்துக்கு ஈ வே ரா பெயரை வைத்து திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு சிட்கோ போங்க!


Ram pollachi
அக் 07, 2025 15:48

இப்படி தான் தெலுங்கு பிராமணர் வீதியை தெலுங்கு வீதி ஆக்கி விட்டார்கள். கல்வி, மருத்துவம் இந்த இரண்டு துறையை கட்டுப்படுத்தினால் மேம்பாலம், மெட்ரோ, மோனோ, நான்கு வழி சாலை இது எதுவுமே தேவைப்படாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை