உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1531 சதுர கி.மீ., பரப்புடன் கோவை மாஸ்டர் பிளான் - 2041: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

1531 சதுர கி.மீ., பரப்புடன் கோவை மாஸ்டர் பிளான் - 2041: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை உள்ளூர் திட்டப்பகுதியின் இரண்டாவது மாஸ்டர் பிளானை, தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 04) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.கோவை உள்ளூர் திட்டப்பகுதி, 1994ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்புதல்படி 1287 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. இதை மேம்படுத்தி, இரண்டாவது முழுமைத்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கருத்துக்கள், பரிந்துரைகள் பெறப்பட்டன.அதன் அடிப்படையில், கோவை மாநகராட்சி, மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக இரண்டாவது மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியின் மொத்த பரப்பளவு 1531.57 சதுர கிலோமீட்டர் ஆகும்.துல்லியமான நகர திட்டமிடலை கொண்டு வடிவமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு, ஆலோசனையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மண்டல இணைப்புகளை மேம்படுத்துவது, சமூக, பொருளாதார உத்திகளை வலுப்படுத்துவது, வீட்டு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த மாஸ்டர் பிளான் 2041 உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்!

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது நமது இலக்கு. இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம். அந்த வகையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள கோவை மாஸ்டர் பிளான் 2041ஐ வெளியிட்டு உள்ளோம். எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான, சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழகம் உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kanagaraj M
ஜூலை 05, 2025 11:56

நான்கு ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தார்கள்? 2041 க்கு போய்விட்டார்கள் எவன் இருப்பான் எவன் இருக்க மாட்டான் என்றே தெரியாது தற்போது என்ன செய்ய வேண்டும் என்பதே முதல் கேள்வி


Thravisham
ஜூலை 04, 2025 19:37

கூப்பிடுங்க மருமகனை. கொடுங்க கோவையை அவர்கிட்ட வேறுயாராவது அவருக்கு போட்டியா வந்தீங்க, தொலைச்சிடுவேன்


அசோகன்
ஜூலை 04, 2025 17:20

ஆக ஆக கோவையை முழுமையாக கோபாலபுர குடும்பம் அபகரிச்சிடுச்சி போல.......


பெரிய குத்தூசி
ஜூலை 04, 2025 16:17

கோவை யில் ஒரு ரோடு ம் சரியில்லை. முக்கியமா சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷன் போக்குவது சிக்னல் லில் ஏற்கனவே அங்கு பேருந்து நிலையம் இருப்பதால் கடுமையான நெரிசல் இருக்கும். இது போதாதது என்று எந்த அதிகாரி approval குடுத்தனு தெரியாது இப்போ சிக்னல் நடுவுல ஒரு சிலையை நட்டு வெச்சி போக்குவரத்து நெரிசலை மேலும் கடுமையாகி வெச்சிருக்கானுக. ரோடு ல சிங்னல் இருக்கற சிலையெல்லாம் நீதிமன்றம் உத்தரவு போட்ட நிலையில் இந்த சிலையை அகற்றி ராமநாதபுரம் மாவட்டத்தில் நலிவடைந்த கிராமமா பாத்து அங்கே எல்லா சிலையையும் நட்டுவெச்சிட்டு, மரீனா ல உள்ள சமாதிகளை கேரளா கன்னியாகுமரி பார்டர் விழிஞ்சம் கடற்கரையோரம் வெச்சிட்டா கருமம் புடிச்ச அரசியல்வாதி சிலையை போய் பாக்குறவன் போய் பாக்கட்டும். முதல இந்த மூளையே இல்லாத முதல்வர் கோவை சிங்காநல்லூர் சிக்னல் சிலையை அகற்றி போக்குவதை சரிசெய்ய சொல்லுங்க. அப்புறம் காகித கப்பலை விட்டு வாய்போட்டு தேய்ச்சி மீடியா வ வெச்சி பொய்யா புழுகலாம்.


Muralidharan S
ஜூலை 04, 2025 16:09

மன்னர் ஆட்சி... கோவையை சுற்றி வளைத்து போட்டு, இப்பவே சாமினிய மக்கள் வீடு வாங்க / கட்ட முடியாத அளவிற்கு விலையை ஏற்றிவிட்டனர் திரவிஷா கட்சிகளின் அரசியல் முதலைகள். நியாயமாக சுயமாக சம்பாதிக்கும் நடுத்தர வர்க்கம் இனி பிழைப்பது கஷ்டம். அரசியல் கட்சியினர் மூலம் அடித்தட்டு மக்கள் நகரின் முக்கிய பகுதிகளிலேயே ஆக்ரமிப்பு செய்து குடிசைகள் போட்டு பல வருடங்கள் இருந்து, இடங்களை காலி செய்ய மறுத்து, பின்னர் இலவச பட்டாவும் வாங்கி விடுகின்றனர், ஒட்டு வங்கி அரசியலால்.. பெரிய பணக்காரர்களும் , கேட்ட பணத்தை விட்டெறிந்து வாங்கிவிடுகின்றனர்.. போராடி சாவதோ நடுத்தர வர்க்கத்தினர் தான். அராஜக அரசியலால், அரசியல்வியாதிகளால், ஊழல்களால் நாசமாகி கொண்டு இருக்கும் நாடு நமது நாடு.. இத்தனைக்கும் காரணாம், இலவசங்களுக்கு, காசுக்கும், குவாட்டருக்கும், பிரியாணிக்கும் ஒட்டு போடும் ஊழல் மக்கள்.


KRISHNAVEL
ஜூலை 04, 2025 14:56

ஜாதி ,மதம் ,காசுக்காக ஒட்டு போட்டால் இப்படித்தான் , எப்படியும் ஜெயித்துவிடலாம் என்ற தொகுதிகளுக்கு அவர்கள் எப்படி வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவருவார்கள் ,


Pitchumani P
ஜூலை 04, 2025 14:42

சென்னை, கோவை, திருச்சி மட்டும் நல்ல வளர்துது , மதுரை தேயுது மதுரைல ஒரு ரோடு நல்ல இல்ல , ஒரு பொழுதுபோக்கு இல்ல மொத்தத்துல மதுரைல இருக்க மக்கல்ல கண்டுக்கவில்லை


தமிழ்வேள்
ஜூலை 04, 2025 15:25

மதுரையை தலைநகராக கொண்ட தனி தென்தமிழக மாநிலம் அமைந்தால் தவிர மதுரை மற்றும் தெற்கே உள்ள பகுதிகளின் பொருளாதாரம் , கல்வி , சமூகங்கள் , தொழில் , என அனைத்தும் முன்னேற்றம் காணும் ..தெலங்கானா , ஆந்திரா போல மாநில பிரிவினை அவசியம் ..இல்லையேல் , வடக்கு ,மேற்கு தமிழகத்த்துக்கு அடியாள் வேலை பார்க்க/ ஒட்டு பொறுக்க மட்டுமே தென்தமிழக மக்களை பயன்படுத்தும் திராவிடம் ....உருப்படவேண்டுமானால் , தனி தென்தமிழக மாநிலம் அவசியம் .


KRISHNAN R
ஜூலை 04, 2025 14:37

அங்குள்ள நீர் நிலைகள் அம்பேல்


M Ramachandran
ஜூலை 04, 2025 14:24

சவடால் சங்கு பிள்ளை. கும்பலா சேர்ந்து ரீல் வுடுறாங்கோ.எங்கே பேர பிள்ளையே காணோம்.


Kumar Kumzi
ஜூலை 04, 2025 16:46

2026 இல் நேரடியா துணை மொதல்வரா தேர்ந்தெடுக்க படுவான்


Chanakyan
ஜூலை 04, 2025 14:02

மேம்போக்காக பார்த்தால் ஏதோ கோவை மண்டல ஓட்டுக்காக செய்வது போல் தெரியும். மிக சைலண்டாக, ஆனால் ராட்சசத்தனமாக உருவெடுத்திருக்கும் ரியல் எஸ்டேட் மாஃபியா பற்றி யாரும் குரல் கொடுப்பதில்லை. தொண்ணுத்தொன்பது சதவீத சாதாரணர்கள் அவர்களுடைய சம்பளத்தில் அன்றாட வாழ்க்கைக்கே போராடும் நிலையில் சொந்தத்தில் நிலம் வாங்கி வீடு கட்டுவது என்பது இந்த பிறப்பில் கனவாகவே ஆகி விட்டது. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன் இரண்டு மூன்று லட்சத்தில் கிடைத்த நிலங்கள் இப்போது ஐந்து மடங்கு உயர்ந்து விட்டது. அதிக விலையில் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்களுக்கும் அதிக வாடகையே கட்டுப்படியாகும் நிலைமை. ஊழலில் சம்பாதித்த பல்லாயிரம் கோடிகளை வெள்ளையாக்க நிலத்தில் வாரியிறைத்த பணம் இன்று பல்லாயிரக்கணக்கானவர்களின் சொந்த வீடுக்கனவை நனவாக்கியிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை