உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால் வாரியது நெல்லை; கப்பலேற்றியது கோவை; ஆளுங்கட்சி மானம் அம்போ!

கால் வாரியது நெல்லை; கப்பலேற்றியது கோவை; ஆளுங்கட்சி மானம் அம்போ!

கோவை:கோவை மேயர் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் நேரு, முத்துசாமியிடம், பணிக்குழு தலைவரான கவுன்சிலர் சாந்தி முருகன், மேயர் பதவி தரப்படாதது பற்றி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அமைச்சர், பிற கவுன்சிலர்களின் சமாதானத்தை ஏற்காத அவர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் தேர்தலில், கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் 20 பேர் ஓட்டளித்து, தலைமைக்கு 'ஷாக்' கொடுத்தனர். இந்தநிலை, கோவை மேயர் தேர்தலில் ஏற்படாமல் இருக்க அமைச்சர்கள் உஷார் ஆகினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=auzxvuik&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை மேயர் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 06) நடைபெறுவதால், தி.மு.க., கவுன்சிலர்களுடன் அமைச்சர்கள் முத்துச்சாமி, கே.என்.நேரு ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் நேரு, முத்துசாமியிடம், பணிக்குழு தலைவரான கவுன்சிலர் சாந்தி முருகன், மேயர் பதவி தரப்படாதது பற்றி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பணம்

''50 ஆண்டு காலமாக நாங்கள் கட்சியில் இருக்கிறோம். ஆனால் எங்களை கட்சியில் இருந்து ஒதுக்கிவிட்டீர்கள். கட்சிக்காக நாங்கள் கோடிக்கணக்காக பணம் செலவிட்டுள்ளோம். எங்களை மேயராக தேர்ந்தெடுக்காமல், புதியவர்களை மேயராக தேர்தெடுத்துள்ளீர்கள்'' என சாந்தி முருகன் பேசினார்.பின்னர் உட்காருங்கள்! உட்காருங்கள்! என இருமுறை அமைச்சர் நேரு தெரிவித்தார். நாங்கள் எங்கள் உரிமையை தான் கேட்கிறோம் என சாந்திமுருகன் மீண்டும் எதிர்த்து பேசினார். கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என கவுன்சிலர்களிடம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கதறி அழுத கவுன்சிலர்

ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே அழுதபடி கவுன்சிலர் சாந்தி முருகன் வெளியேறினார். அமைச்சர், பிற கவுன்சிலர்களின் சமாதானத்தை ஏற்காத அவர் கடுமையாக வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டதும், மண்டல தலைவர் மீனா லோகு அழுதபடி காரில் ஏறி புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

sangarapandi
ஆக 11, 2024 10:26

கோவை மாநகராட்சியில், புதிதாக மேயராக தேர்வு செய்யப்பட்டவருக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, தற்போதையை நிதிநிலையை சரி செய்ய ஒரு குழுவை அமைத்து மக்கள் வரிப்பணத்தை சிக்கனமாக செலவு செய்து சிறப்பாக பணியாற்றவும், பணிகளை சிறப்பாக செய்வதற்கு ஏற்றவாறு தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களை தேர்வுசெய்து, பணிகளை முடிக்கவும், செய்து முடித்த பணிகளுக்கு அதற்குண்டான தொகைகளை உடனடியாக பற்றுவாடா செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்.


Nermainermai
ஆக 07, 2024 07:48

உதவாநிதி அப்டியே கட்சிக்கு எத்தணை வருசம் உழைச்சு துணை முதல்வர் பதவிக்கு வர துடிக்கிறார். உன் கட்சி விவகாரம் பேசும் பொது எதுக்கு அண்ணாமலை பற்றி இழுக்கிற


Joh ny
ஆக 06, 2024 21:40

எல்லாம் அவன் செயல்


pattikkaattaan
ஆக 06, 2024 20:32

இது எல்லா கட்சியிலும் நடப்பதுதானே... திரு அண்ணாமலை பிஜெபியில் எத்தனை வருடம் உழைத்தார் தலைவர் பதவி பெறுவதற்கு? பதவி கொடுப்பது தலைமையின் விருப்பம் எல்லா கட்சியிலும்.. அம்புட்டுதான்


பல்லவி
ஆக 06, 2024 19:57

இரும்புக்கரம் பாயாது கரும்புக்கட்டு வரும் காசேதான் கடவுளடா ரகசிய வாக்கெடுப்பு முறை பயன்படுத்தலாமே


K.ragupathy
ஆக 06, 2024 19:15

மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையே என்று அழுதார்களோ...இல்லை கௌரவம் இல்லாமல் போய்விட்டதே என்று அழுதார்களோ...


Lourdu irudayaraj
ஆக 06, 2024 18:40

வாழ்த்துக்கள்.ஆனால் கோவை முழுவதும் சாலை பணிகளை சீர் செய்ய வேண்டும்.


Ravi Kulasekaran
ஆக 06, 2024 17:32

உடனே கட்சியிலிருந்து விலகி போங்க


Valli Sankar
ஆக 06, 2024 14:41

இரும்புக்கரம் பாயுமா?


S.jayaram
ஆக 06, 2024 14:24

இது காலம் காலமாக நடப்பதுதான் இன்று உரிமையை கேட்கிறோம், கட்சிக்காக உழைதுள்ளோம் 50 ஆண்டுகளாக புதியவர்களுக்கு பதவி தருகிறீர்கள் என்பவர்கள் அன்று உதயநிதிக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுக்கும்போது எதிர்த்து இருந்தால் நியாயம் அவருகொரு நியாயம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்க்கு எதிராக பேசுவது என்றால் என்ன நியாயம். கட்சிக்கு கட்டுப்பாட்டு ஆகணும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை