உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது

கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில், ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கம், பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கோவை வழியாக கேரளாவிற்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில் சென்ற 3 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l7iwul5x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பைக்கில் ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்தி செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.சாகர், மணிகண்டன், சந்திப் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர். அவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர், ஓங்கோல்
மே 20, 2025 14:41

என்னாது பேரு சாகர், மணிகண்டன், சந்தீப்பா அப்படின்னா இது ஒன்றும் பயப்பட வேண்டிய விஷயம் அல்ல நான் கூட தீவிரமா கருத்தை போட யார் யாரையோ கற்பனை பண்ணி பாத்துட்டேன் ப்ச்.. மேட்டர் புஸ்ஸூன்னு போச்சு இது போன்று அப்பாவிகளை பிடித்து என்ன செய்யப் போகிறார்கள்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 20, 2025 14:52

அப்படி எல்லாம் நினைக்காதீங்க கோயம்புத்தூரிலே பேரை வெச்சு ஏமாந்து போயிறக்கூடாதுங்கோ வெச்சு செஞ்சுருவாங்கோ பேரைப் பார்த்தா கேரளா பயலுகளாக தெரியுது.


சமீபத்திய செய்தி